Wednesday, August 19, 2015

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்.








யாழ்பாணத்திலிருந்தும், திருகோணமலையிலிருந்தும், மட்டக்களப்பிலிருந்தும், ஈழ நண்பர்களுடன் இன்றைக்கு பேசிக்கொண்டிருந்தபொழுது,  “தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்து, களம்கண்ட மண்ணில், டக்ளஸ் தேவானந்தாவும் வெற்றி பெற்றுள்ளாரே” என கவலையோடு குறிப்பிட்டவர்கள் பலர்.

ஜெனிவா, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில், எதிர்வரும்
 “இன அழிப்பு குறித்த விவாதம்” என்னாகுமோ என்ற பதட்டமும் ஈழத் தமிழர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மகிந்த ராஜபக்‌ஷே தோல்விக்குப் பிறகு அவர் நடத்திய போர்க்குற்றங்களுக்காக சர்வதேச, நம்பகமான, சுதந்திரமான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து இன்றைக்கு வலுவாகி வருகிறது.

ஆஸ்திரேலிய நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் லீ.ரெய்யன்னன் என்ற பெண்மணி இன்றைக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், போர்குற்றத்திற்காக மகிந்த ராஜபக்‌ஷேவை திஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில்  நிறுத்தவேண்டும்” என்று  எழுதியுள்ளார்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
19-08-2015

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...