Sunday, August 9, 2015

மீண்டும் டெல்லியில் ட்ராம் போக்குவரத்து - Tram Transport







ஆங்கிலேயர்களால் சென்னை, கல்கத்தா, பம்பாய்,டெல்லி  போன்ற நகரங்களில் துவக்கப்பட்ட ட்ராம் வசதி கொல்கத்தாவில் மட்டும் இன்றும் 125 ட்ராம் வண்டிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. மற்ற இடங்களில் இந்த போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டன.

சென்னையில் 1895ல் முதன்முதலாகத் துவக்கப்பட்டு,
எலெக்ட்ரிக் வண்டிகள் 24கி.மீட்டர் வரை 94 ட்ராம் வண்டிகள் ஓடின. இந்த போக்குவரத்து நிறுவனம் பொருளாதாரச் சிக்கல்களில் சிரமப்பட்டதால் 1953ல் ட்ராம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  சென்னையில் இதனுடைய பழைய வழித்தடங்களின் எச்சங்களை  அங்காங்கு காணமுடியும்.

இப்போது டெல்லியில் ட்ராம் வண்டி போக்குவரத்து வசதிகள் மீண்டும் தொடங்கத் திட்டமிடுவதாகச் செய்திகள் வந்துள்ளன. கிட்டத்தட்ட 70ஆண்டுகளுக்கு முன்னால் ட்ராம் வண்டிகள் பயணித்த காட்சிகள் கருப்பு வெள்ளை புகைப்படங்களாகச் சென்னையின் வரலாற்று அடையாளங்களாகத் திகழ்கின்றன.


- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09-08-2015.



No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...