Monday, August 24, 2015

தூக்குதண்டனையும் மத்திய சட்ட கமிஷனும் - Death Penalty.


சந்தோஷ் குமார், சதிஷ் பூஷன் பாரியார் மற்றும் மகராஷ்டிர அரசு, கிஷன்ராவ் காடா மற்றும் மகராஷ்டிரா மாநிலம் குறித்த இரு வழக்குகள் உச்சநீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட்டு, இந்திய சட்ட கமிஷனுக்கு மரணதண்டனை குறித்து தெளிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.

மத்திய சட்ட கமிஷன் , “இது முக்கியமான பிரச்சனை. சட்ட வல்லுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூகத்தில் முக்கியமானவர்களோடு கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும்” என்று கூறியது.

அரிதிலும் அரிதான குற்றங்களுக்கு மட்டும் தூக்குதண்டனை வழங்கலாம் என்ற கருத்து தற்போது நிலவி வருகிறது. இந்தக் குழுவுக்கு நானும் தெளிவான விளக்கங்களோடு கடிதம் எழுதி இருந்தேன்.

சட்டக் கமிஷனுடைய மூன்றாண்டு காலம் இந்த ஆகஸ்டு மாத இறுதியில் முடியும் தருவாயில் உச்சநீதிமன்றத்தில் அதன் அறிக்கையை இந்தவாரம் தாக்கல் செய்கின்றது.

அதன் அடிப்படையில் மத்திய சட்ட அமைச்சகம் உரிய திருத்தங்களோடு மசோதாவை தயாரிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் இதுகுறித்து கருத்து அறிய தாக்கீதும் அனுப்பும்.

தூக்குதண்டனை கூடாது என்று ஆதரவான குரல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-08-2015

#DeathPenalty ‪#‎KSR_Posts‬ ‪#‎KsRadhakrishnan‬ ‪

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...