பஞ்சாங்கம் (Panchangam) என்பது ஐந்திறன் என்று தமிழில் அழைக்கப்படும். இது காலக் கணிப்பு முறையின் படி, கணிக்கப்படுகின்ற காலநிலை அட்டவணை ஆகும். பஞ்சாங்கம் என்ற வடமொழிச்சொல், (பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம் ) ஐந்து பாகங்களைக் குறிக்கும். கிரகங்களில் சுழற்சிகளைப் பற்றிய வானியல் நூல் என்றும் அழைக்கப்படுகின்றது.
தொலைநோக்கு மற்றும் வானிலை ஆய்வுக் கருவிகள் எதுவும் இல்லாத ஆதிகாலத்தில் சித்தர்கள் தங்கள் ஞானத்தால் சூர்ய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கணித்து அளித்ததே பஞ்சாங்கம் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
பஞ்சாங்கத்தில் திருக்கணித பஞ்சாங்கம், வாக்கியப்பஞ்சாங்கம் என்று இரண்டு வகை உண்டு. அதில் தமிழ் நாட்டில் வாக்கியப் பஞ்சாங்கமே அதிக அளவில் பின்பற்றப்படுகிறது. அவை குருநாத அய்யரின் திருநெல்வேலி வாக்ய பஞ்சாங்கம், ஆற்காடு ஸ்ரீ சீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம், ராமநாதபுரம் வாக்கியப் பஞ்சாங்கம், மஞ்சள் நிற 28-ஆம் எண் பாம்புப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம், சிருங்கேரி மடம் பஞ்சாங்கம், ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம், ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தான வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கோயில் அனுஷ்டான பஞ்சாங்கம் என பல
வாக்கியப் பஞ்சாங்கங்கள் இன்றைக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
இன்றைக்கும் கூட பழமை பேசுபவர்களைப் பார்த்து, “பழைய பஞ்சாங்கமாக இருக்கிறாரே” என்ற சொலவடையும் உண்டு.
ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த பஞ்சாங்க முறை
என்பது விவசாயிகளுக்கு காலநிலைகளை உணர்த்தவும், அவர்கள் எப்போது, என்ன பயிர் செய்யலாம் என்று முடிவெடுக்கக் கூடிய வகையில் விவசாயிகள் பஞ்சாங்கம் என்று வெளியிடப்படுகின்றன.
இதுபோல ஐரோப்பிய நாடுகளிலும் மற்றும் பல்வேறு நாடுகளிலும் விவசாயத்திற்காகவே இம்மாதிரியான காலநிலைகளை முன்கூட்டியே சொல்கின்ற விவசாயிகள் பஞ்சாங்கம் “Old Farmer's Almanac ” என்று 1792லிருந்து இடைவிடாது இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஒவ்வொரு ஜனவரி மாத புத்தாண்டு துவக்கத்தில் வெளியிடப்படுகின்றது.
தமிழகத்தில் ஒரு காலத்தில் விவசாயிகளுக்கு பயிர் முறைகளையும், மற்ற செய்திகளையும் சொல்கின்ற
“மேழிச் செல்வம்” போன்ற இதழ்கள் காங்கிரஸ் காலத்தில் இருந்து தலைவர் கலைஞர் ஆட்சியில் 1975வரை வெளிவந்துகொண்டிருந்தது.
1969ல் தமிழக அரசு மாவட்டம் வாரியாக என்ன பயிர்கள், எப்போது பயிரிடலாம் என்ற குறிப்புகள், வரைபடங்கள் என விவசாயிகள் தெரிந்துகொள்ளவேண்டிய அத்தனை விபரங்களோடு இரண்டு தொகுப்புகளாக வெளியிட்டிருந்தது. இதனை ஊராட்சி ஒன்றிய வேளாண்மை அதிகாரியிடம் ஒப்படைத்து, முறையாக கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.
இன்றைக்கு அம்மாதிரியெல்லாம் எந்த விபரமான ஏடுகளோ நூல்களோ அரசு சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் விவசாயிகள் பஞ்சாங்கம் என்பது முறைப்படுத்தி பல இடங்களில் மானிய விலையில் கிடைக்க வழி செய்திருக்கிறார்கள்.
விவசாயிகள் இந்திய நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லிக்கொண்டு, விவசாயத்தின் மீதும், விவசாயிகளின் மீதும் மேலை நாட்டுக்காரர்களுக்கு இருக்கும் அக்கறை கூட இங்கு ஆள்பவர்களுக்கு இல்லையே!?.
General Winter Weather Summary
For much of the U.S., the 2016 Almanac says that a super cold winter is on tap—with below-average winter temperatures. Bundle up!
Freezing tempeatures will be especially pronounced along most of the Atlantic seaboard and in the Ohio Valley, Great Lakes, Pacific Northwest, and southwestern states.
The Northeast, Ohio Valley, northern Plains, and Pacific Northwest should brace for a slew of snow. “Super cold is coming,” says our Almanac editor Janice Stillman, but also the good news is that areas with record-shattering snow last winter—like Boston—won’t have to deal with quite so many flakes.”
The 2016 Old Farmer’s Almanac Canadian Edition predicts that many areas of the Commonwealth will feel much like the inside of an icebox—super cold and dry—with below-normal temperatures and snowfall.
The exception to this trend will be the Atlantic Maritimes, which will start out cold and snowy, then turn mild. We’re not expecting more snow than usual, but the temperatures outside will definitely be brisk throughout the season. All in all, this coming winter will be a good one for snuggling up next to the fire with a good book!” (Courtesy : almanac)
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-08-2015.
#OldFarmersAlmanac. ##KsRadhakrishnan #KSR_Posts
No comments:
Post a Comment