Thursday, August 13, 2015

இந்தியா ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் இணைய இன்னுமா தடையும் தடங்கலும் - India - UN Security Council.



நீண்டகாலமாக ஐ.நா மன்றத்தின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா இடம்பெற வேண்டுமென்று கோரிக்கை எழுப்பி வருகின்றது.
உலகில் சீனாவுக்கு அடுத்து அதிகமான மக்கள் தொகை கொண்ட  மற்றும் பல்வேறு தேசிய இனங்களையும், மொழிகளையும் கொண்ட ஒரு வெற்றிகரமான ஜனநாயக நாடு இந்தியா.

அதுமட்டுமல்லாமல் கடந்த 68 ஆண்டுகளாக ஐ.நாவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியா உறுதுணையாக இருந்திருக்கின்றது. பொருளாதார இறையாண்மை,  இராணுவ ஆளுமை என்ற அடிப்படையில் வேகமாக பீடு நடை போட்டு வளரும் நாடும்  இந்தியா.
 ஐ.நா-விற்கு நிதி ஆதாரங்களில் அதிகமாக பங்களிப்பும் செய்துள்ளது.

ஐ.நாவின் எழுபதாவது ஆண்டு நிறைவு விழாவில் பாதுகாப்பு அவையை மறுசீரமைத்து, இந்தியாவை பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக்க வேண்டுமென்று, ஐ.நா கவுன்சிலில் இடம்பெற்றுள்ள பல நாடுகள் ஆதரவு தெரிவித்தும், அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளின் எதிர்ப்பால் இந்தியா பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற தடங்கல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானும் இந்தியாவிற்கு எதிராக உள்ளடி வேலைகள் செய்கிறது.

இந்தியாவோடு ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் போன்ற நாடுகளும் நிரந்தர உறுப்பினராக இடம்பெற முயற்சித்து வருகின்றன. ஜெர்மனிக்கு இத்தாலியும், ஸ்பெயினும், பிரேசிலுக்கு கொலம்பியா, அர்ஜெண்டைனா, மெக்‌ஷிகோ நாடுகளும், ஜப்பானுக்கு தென் கொரியாவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தியாவிற்கு அமெரிக்கா, ரஷ்யா,சீனா, பாகிஸ்தானோடு இலங்கையும், பங்களாதேஷும் எதிராக உள்ளது என்று செய்தி.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றால் பன்னாட்டுப் பிரச்சனைகளில் இந்தியாவினுடைய பங்கு முக்கியமானதாக இருக்கும். உலக அமைதி, பாதுகாப்பு, இராணுவ நடவடிக்கைகள், போன்றவற்றை தீர்மானிக்கும் அதிகாரங்களில் இந்தியாவும் பங்குபெறும். தற்போதுள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவையில்
அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.

இவற்றோடு நிரந்தரமற்ற பத்து உறுப்பு நாடுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படும். நிரந்தர உறுப்பினர்களுக்குத் தான் எந்தத் தீர்மானத்தையும் எடுத்துச் செல்வதற்கு அதிகாரம் உண்டு.

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவிற்கு வந்த பொழுது,  “நிச்சயமாக இந்தியா நிரந்தர உறுப்பினராகுவதற்கு ஆதரவு தருவோம்” என்று கூறிவிட்டு தற்போது பின் வாங்குவது ஏன் என்று தெரியவில்லை. சீனாவும், ரஷ்யாவும் இதேபோல முன்பு உறுதி அளித்திருந்தது.

ஐ.நா பொதுச் செயலாளர் பான் கிமூன், அதன் பொதுச் சபையின் தலைவர் சாம் கொடேசா இருவரும் இந்த ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளிடம் கருத்துக் கேட்டபோது, இந்தியாவின்  பெயரை மட்டும் சொல்லாமல் “ பாதுகாப்புக் கவுன்சிலின் அமைப்பு முறையில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது” என்று தங்கள் கருத்தை வெளியிட்டிருப்பது சற்று ஏமாற்றத்தைத் தருகிறது.

ஐ.நாவின் பல உறுப்பு நாடுகள் இந்தியாவை ஆதரித்தும், அமெரிக்காவும், சீனாவும், ரஷ்யாவும் உறுதியளித்தும் தற்போது அவர்கள் பின் வாங்கியது எந்த விதத்தில் நியாயம்.

எல்லாவித தகுதிகளும் இந்தியாவிற்கு இருந்தும் பெரியண்ணன்கள் போல இந்த ஐந்து உறுப்பு நாடுகளும் சட்டாம்பிள்ளைத்தனம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத அணுகுமுறை ஆகும். இவர்களிடம் யார் பஞ்சாயத்து பேசுவது.

இந்தியா புவி அரசியலில் இந்துமகா சமுத்திரப் பிரச்சனை, சீனாவை எதிர்கொள்வது, அண்டைநாடுகளான பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் போன்றவை வைரி நாடுகளைச் சமாளிப்பது, காஷ்மீர் பிரச்சனை, உலக அரங்கில் வர்த்தக மற்றும் பொருளாதார தொடர்புகளை சரி செய்யவது போன்ற பல்வேறு பிரச்சனைகளை
சமாளிக்க ஐ.நா பாதுகாப்பு அவையில் அங்கம் பெறவேண்டியது அவசரமும் அவசியமும் ஆகும்.


இது குறித்து தினமணி ஏட்டில் வெளியான எனது கட்டுரைகள் :


1. http://goo.gl/RkFjOE

2. http://goo.gl/De1XE9




********
UNITED NATIONS:  In a setback to India's bid for a permanent seat in an expanded UN Security Council, the US, along with Russia and China, has opposed negotiations to reform the powerful UN body, refusing to contribute to a text that will form the basis for the long-drawn reform process.

UN General Assembly President Sam Kutesa achieved a breakthrough of sorts by circulating a text to UN members that will form the basis for the negotiations on the reform of the Security Council. Mr Kutesa had appointed Jamaica's Permanent Representative Courtenay Rattray to chair on his behalf the Intergovernmental Negotiations on Security Council Reform.

RELATED
Educational Institutions Being 'Captured' by the RSS, Alleges Rahul Gandhi
Airtel JavaScript Code Injection Discussed in Parliament
This Independence Day, The Tiranga Has a Message for Every Indian
Mr Kutesa, in a letter dated July 31 to all United Nations members, said he is also circulating letters containing the positions of groups and Member States that indicated they did not wish their proposals to be included in the body of the negotiating text. These countries include US, Russia and China.

American Ambassador to the UN Samantha Power said in her letter to Mr Kutesa that the US is "open in principle" to a "modest" expansion of both permanent and non-permanent members but the condition that "any consideration of an expansion of permanent members must take into account the ability and willingness of countries to contribute to the maintenance of international peace and security and to the other purposes of the United Nations."

Ms Power added that "we believe that consideration of new permanent members must be country-specific in nature."

She also reiterated that the US remains opposed to "any alteration or expansion of the veto".

Sources told the Press Trust of India that the US opposition to aspects of the reform process can be perceived as a "duplicity" since President Barack Obama has reaffirmed his support for a reformed UN Security Council with India as a permanent member.

Russia, which has also supported India's candidacy as permanent member, said in its letter to Mr Kutesa that the "prerogatives of the current Permanent Members of the Security Council, including the use of the veto, should remain intact under any variant of the Council reform".

"The intergovernmental negotiations on the UN Security Council reform should proceed in a calm, transparent and inclusive atmosphere free from artificial deadlines," it said.

India has maintained that the process to expand the powerful UN body "cannot be seen to be an exercise ad infinitum" and a results-based timeline is crucial to achieve a concrete outcome.

"Those who ask for not imposing artificial timelines may be advised to desist from inflicting artificial delays on this process," India's Ambassador to the UN Asoke Kumar Mukerji has said in the past.

Sources said that India feels that the 70th anniversary of the UN, being commemorated this year, is an appropriate milestone to propel the reform process, which should be completed within the next one year.

Russia said that in the situation when positions of the main groups of states - those who support the idea of the UN Security Council's expansion in both categories and those who do not - remain polar, one can advance in the negotiating process only by searching for a compromise.

It said that while it supports broader representation of the developing countries from Africa, Asia and Latin America on a reformed Security Council, it is important to maintain compact composition of the Council in order for it to provide an adequate and prompt reaction to new challenges.

"The number of members in an enlarged UNSC should not exceed a reasonable level of low twenties," it added.

On improvement of the working methods of the Security Council, Russia said the leading role in this process should belong to the Security Council itself as the "only legitimate master of its own procedures and working methods."

China said UNSC reform is "multifaceted", covering not only issues such as enlarging the Council's membership and strengthening representation, but also increasing efficiency and improving working methods. It added that Member States are still seriously divided on the Security Council reform and no general agreement has been reached on any solution so far.

UNSC "reform should not be carried out at the expense of the unity of Member States. All member States should remain committed to the intergovernmental negotiations process, adopt a flexible and pragmatic attitude, gradually build mutual trust and meet each other halfway. No solution on which Member States are seriously divided or approach that may cause division among Member States will have China's Support," it said.

"Member states still need to engage in patient consultations to find a solution that accommodates each other's interests and concerns," it said, a position different from that of India which has stressed that the 2015 "is a year for decisive action" and for it, another round of the IGN with business like the earlier rounds would "not be acceptable."

India has said it would then find it very difficult to meaningfully engage with the process.

China also stressed that new seats of the Security Council should be reasonably distributed. It also noted that any solution or reform model should enjoy general consensus.

"The five clusters of key issues concerning Security Council reform are interrelated, and should not be addressed in isolation of each other. It is imperative to stick to the approach of a package solution. The 'piecemeal' or 'step-by-step' approach is not conducive to accommodating the interests and concerns of Member States," China said.

India has received support from France and the UK, the two remaining permanent members of Security Council. The two nations along with Kazakhstan and Romania have specifically named in the negotiating text Brazil, Germany, India, Japan and an African representation to be included among the permanent members of a reformed UNSC.

See also :
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
13-08-2015.

#KSR_Posts #KsRadhakrishnan #UNO #IndiaUNSecurityCouncil.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...