1. ஆம்ஸ்டர்டம் நகரில் நடைபெற்ற படகுத் திருவிழா காட்சியை வானத்திலிருந்து, கடந்த 2015 ஆகஸ்ட்19ம் நாளன்று Robin Van Lonkhuijsen என்பவர் எடுத்த புகைப்படம்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்தப் படகுத்திருவிழா நெதர்லாந்து மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
படம் : சுகா |
2. அதற்கு அடுத்த காட்சி வேறு எங்குமில்லை. நமது நெல்லை மாவட்டம் செங்கோட்டைக்கு மேற்புறம் உள்ள மேக்கரயைத் தாண்டி அடவிநயினார் அணைக்கட்டு அருகில் உள்ள #அச்சன்கோவில் செல்லும் பசுமை சூழ்ந்த மலைப்பாதை.
சீர்வளஸ்ரீ #திருவாடுதுறை ஆதீனம் மறைந்த சிவப்பிரகாசம் பண்டார சுவாமிகளோடு, 2009ம் ஆண்டு தென்காசிக்கு ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, திருவாடுதுறை மடத்தினுடைய இடங்களைப் பார்க்க இந்த வழியாகப் பயணித்தது நினைவுக்கு வருகிறது. அப்போது, ஆதீனத்தினுடைய வழக்குகள் சம்பந்தமான பணிகள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
21-08-2015.
#KsRadhakrishnan #KSR_Posts
No comments:
Post a Comment