Wednesday, August 26, 2015

அவசர சட்டங்களும், மசோதாக்களும்... - Ordinances and Bills.


நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம் மூன்றாவதுமுறையும் பிறப்பிக்கப்பட்டு, வரும் 31ம் தேதியோடு அதன் காலஅவகாசம் முடிகிறது. நான்காவது முறையும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

அந்த அவசரச் சட்டம் பிறப்பித்தால் குறிப்பிட்ட காலத்தில், உரிய மசோதா கொண்டு வந்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்படவேண்டும். அப்படியெனில் நாடாளுமன்றம் இதனை நிறைவேற்ற கூட்டப்படவேண்டும்.

இத்தோடு ரியல் எஸ்டேட் குறித்த மசோதாவும், ஜி.எஸ்.டி வரி குறித்த மசோதாவும் அவசரமாகக் கொண்டுவரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் பா.ஜ.க அரசு இருக்கின்றது. இப்படித் தொடர்ந்து அவசரச் சட்டங்களை கடந்த காங்கிரஸ் அரசும், பா.ஜ.க அரசும் பிறப்பித்தே வருகின்றன. இம்மாதிரி அவசரச் சட்டங்கள் கடந்த பத்து ஆண்டுகளாக மத்திய அரசுகள் அவசர அவசரமாக பிறப்பிக்கின்றன.

பின் எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளாலும், மக்களவையின் ஆதரவின்மையாலும் தற்போது பா.ஜ.க அரசு அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்காமல் திண்டாடுகின்றது.

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் முறையாக மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் மீது விவாதங்கள் நடத்தி, ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் மற்றும் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று மசோதாக்கள் சட்டமாக நடைமுறைக்கு வரும்.

அங்கு முதல் வாசிப்பு, இரண்டாம் வாசிப்பு, கமிட்டி பரிசீலனை, கமிட்டி அறிக்கை வாங்குதல், அதன்பிறகு மூன்றாவது வாசிப்பில் விவாதங்கள் நடத்தி, இரண்டு அவைகளிலும் ஒப்புதல் பெறப்படும். (அதற்கான விளக்கப்படம் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.) இவ்வாறு நடைமுறைகள் அமைந்தால் தான் சிறந்த மக்களாட்சி அரசு அமையும்.

What is a #Bill? A Bill is a proposal for a new #law, or to change an existing law, presented for debate before #Parliament. It can start in the Commons or the Lords and must be approved by both Houses before becoming an #Act. Keep up to date with the progress of current Bills going through Parliament


-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-08-2015.

#‎KsRadhakrishnan‬ ‪#‎KSR_Posts‬

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...