Thursday, August 13, 2015

கார்ட்டூன்

இன்றைய (13-08-2015) மிண்ட் நாளேட்டில் வெளியான கார்ட்டூன் இது.
மோடி அரசுக்கு ராஜ்ய சபாவில் உரிய பலமில்லை.  "லோக் சபா பலத்தைக் கொண்டு ராஜ்யசபாவிலும் சரி கட்டிவிடலாம் என்ற கனவில் மோடி இருக்கின்றார்" என்ற அர்த்தத்தில் உள்ள இந்த கார்ட்டூன் ரசிக்கும்படியாக இருக்கின்றது.

ஒரு அம்மையார் நாடாளுமன்ற மாதிரிபோல் ஒரு அடுப்பு வைத்து அதன் மேல் லோக் சபா என்ற மண்பாண்டத்தையும், அதற்குமேல் ராஜ்யசபா என்ற பாத்திரத்தையும் வைத்து சமைப்பதுபோல காட்சி.

நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு மோடி தன்னுடைய கனவுகள் ஈடேறும் என்ற நினைப்பில் உலை கொதிக்கும் கற்பனையில் வாசனை பிடித்துக் கொண்டிருக்கிறார்.


நில கையகப்படுத்தும் சட்டம், அவசரச் சட்டங்களை மட்டுமே பிறப்பிக்க முடிகிறதே ஒளிய மக்கள் அவையில் மிருகபலத்தில் ஆதரவு இருந்தாலும், மாநிலங்கள் அவையில் ஆதரவு இல்லாத நிலையில் மோடி அரசு உள்ள நிலைப்பாட்டை இந்த கார்ட்டூன் சித்தரிக்கிறது. 

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
13-08-2015. 

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...