இந்திய இறையாண்மையில் ரிசர்வ் வங்கியின் பணி பிரதானமானது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி மத்திய அரசுக்கு இதுகுறித்தான ஆலோசனைகள் வழங்குவதோடு மட்டுமல்லாமல், வட்டிவிகிதத்தை நிர்ணயம் செய்தல் போன்றவை அடிப்படைப் பணிகளாக ரிசர்வ் வங்கிக்கு உள்ளது.
வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் குழுவில் ரிசர்வ் வங்கியின் கவர்னருக்கு உள்ள அதிகாரத்தை, தற்பொழுது மத்திய அரசு அமைத்துள்ள வரைவுக் குழு குறைத்துள்ளது. இதனால் புதிதாக ஏழு நபர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.
இதில் மூவர், ரிசர்வ் வங்கி கவர்னர் உட்பட ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட உள்ளனர். மீதி நான்குபேர் மத்திய அரசால் நியமிக்கப்படுபவர்கள். இந்தக் குழுதான் கூடி வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும்.
அமெரிக்காவில் வட்டி விகிதத்தை நிர்ணயிக்க 14பேர் கொண்ட குழு உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாக்கு. இதில் ஏழு பேர் அமெரிக்க அதிபர், செனட் சபையின் ஒப்புதலுடன் நியமிக்கப்படுவார்கள். இவர்களது பதவிகாலம் பதினான்கு ஆண்டுகள். மேலும் ஐந்துபேர் பெடரல் மத்திய வங்கியால் சுழற்சி முறையில் உறுப்பினர்களாக இருப்பார்கள். மற்ற இரண்டுபேர் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவரும், துணைத்தலைவரும் இருப்பார்கள். இதுதான் அங்குள்ள முறை.
இங்கிலாந்திலும், ஐரோப்பிய யூனியன் மத்திய வங்கியிலும் இதே முறைதான் கடைபிடிக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் மொத்த அதிகாரத்தையும் மத்திய அரசு கையகப்படுத்தினால் பல சிக்கல்கள் ஏற்படும். அரசியல் காரணங்களுக்காக வட்டி விகிதங்கள் தீர்மானிப்பதும், ரிசர் வங்கியினுடைய அதிகாரங்கள் பறிக்கப்படுவதும், ஆட்சிக்கு வருபவர்களுடைய தலையீடும் அதிகமாக இருக்கும்.
இவ்வாறான சூழ்நிலையில் இந்தப் பரிந்துரை சரியானதல்ல என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார். பல பொருளாதார நிபுணர்களும் இதே கருத்தை வழிமொழிந்துள்ளனர்.
- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
10-08-2015.
#KsRadhakrishnan #KSR_Posts #
உலகம் பூராக ஜனநாயகத்தை, ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலின் பணநாயகம் வெல்லும்.
ReplyDeleteஅன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கொம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், பெறுமதியற்ற கடதாசி நோட்டுக்களை, பில்லியன் கணக்கில் அச்சிட்டு, உலகைக் கொள்ளையடிக்கிறார்கள். அத்துடன் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய, தமக்குச் சொந்தமான கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், சாதாரண மக்களை, பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.
கடனில்லாத பன்னாட்டு நிறுவனங்கள் கிடையாது. இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடன்களால் வர்த்தக நிறுவனங்களும், தொழிலாளர்களும் கடன்காரர்களாக மாற்றபடுவதோடு இக்கடன்கள் அதிகரிக்கப்படுமே அன்றி மீளச் செலுத்தப்படுவதில்லை.
இதனால் வர்த்தக நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, வர்த்தக நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கு எதிராகப் போராடமாட்டார்கள்.
உலகம்பூராகவும், அனைவரும் இலகுவில் கட்டுப்படுத்தப்பட்டு, ஆளப்படக் கூடியவர்களாக ஆக்கப்பட்டு, பயத்தினூடாகவும், அச்சுறுத்தியும், நலமடிக்கப்பட்ட சமூகம் உருவாக்கப்படுகின்றது, மக்களின் சிந்தனை, நிகழ்கால வேலைப்பழுவுடனும், அடுத்தநேரச் சாப்பாட்டுடனும் மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது.
எண்பதுகளில் மேற்குலகமும், சோவித்யூனியனும் பொருந்திக் கொண்டிருந்த போது, சோவியத்யூனியனை வீழ்த்துவதற்காக, ஆப்கானிஸ்தானில் வேற்றுநாட்டு இசுலாமிய தீவிரவாத இளைஞர்களை ஆயுதபாணிகளாக்கி, சோவியத்யூனியனுக்கு எதிராக யுத்தத்தை நடாத்தி வந்த அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, வேறு பல நாடுகளுக்கும் அதே இசுலாமிய தீவிரவாத இளைஞர்களால், பலத்த பிரச்சனைகள் வருவது தவிர்க்க முடியாது.
- நல்லையா தயாபரன்