Friday, August 21, 2015

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்

ஈழ ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் என்று சொல்லிக்கொள்ளும் கே.என்.டக்ளஸ் தேவானந்தம் 1994ம் ஆண்டு முதல் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து 6முறை வெற்றி பெற்றதாகவும், அதை கிண்ணஸ் சாதனையில் இடம்பெற வைக்க முயற்சிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

அவருக்கு முன்பே மறைந்த நண்பர் சாவகச்சேரி நவரத்தினம், மற்றும் மட்டக்களப்பு ராஜதுரை போன்றவர்கள் டக்ளஸ் தேவானந்தத்தை விட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பலமுறை தொடர்ந்து வெற்றி பெற்றார்கள். இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தம் தவறான வழியில் கிண்ணஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற முனைவது நியாயம் தானா?

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
21-08-2015.

#KsRadhakrishnan #KSR_Posts #SriLankaParliamentElection2015

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...