பயங்கரவாதம் சம்பந்தமான குற்றங்களைத் தவிர்த்து மற்ற குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்கக் கூடாது என்று நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலானஇந்திய சட்டக் கமிஷன் மத்திய அரசிடம் பரிந்துரைத்து அறிக்கை வழங்கியுள்ளது. 270பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை ஏன் மரணை ரத்து செய்யப்படவேண்டும் என்ற காரண காரியங்களைக் குறிப்பிட்டுள்ளது.
1962 சட்டக் கமிஷன் தூக்குதண்டனை நடைமுறையில் இருக்கவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.
5 நூற்றாண்டில் ரோமன் சட்டப்படி, உடலில் எண்ணை ஊற்றி எரித்தும், உயிரோடு புதைத்தும், எரியும் நெருப்பில் போடுவதும், தூக்கில் போடுவதும், கழுத்தைப் பிடித்து நெரிப்பதும், கல்லால் அடித்து சாகடிப்பதும், அபாயகரமான விலங்குகளுக்கு இரையாக்குவதும், சிலுவையில் அறைவதும், கழுவேற்றுவதும், உடலை நான்கு துண்டுகளாய் வெட்டுவதும், உயிரோடு தோலை உரிப்பதும் என்ற வகைகளில் மரண தண்டனையினை நிறைவேற்றினார்கள்.
ஆங்கிலோ சாக்ஸன் காலத்தில் பிரிட்டனில் இம்மாதிரிதான் மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. மெக்ன கர்ட்டா (மகா சாசனம்) பிரகடனத்திற்குப் பின் (1215ம் ) இம்மாதிரியான நடவடிக்கைகள் குறைந்தன.
18ம் நூற்றாண்டில் பாபிலோன் அரசர் ஹமுராபி இயற்றிய சட்டத்தில் தூக்கு தண்டனை சட்டப் பூர்வமாக்கப்பட்டது. ஹமுராபி சட்டத்தின் படி 20குற்றங்களுக்கு தூக்குதண்டனை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஹமுராபி அரசனின் சட்டங்கள் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்பது போன்ற முரட்டுத்தனமாகவும் நாகரிகமற்றதாகவும் இருந்தன.
உலகநாடுகளில் தூக்குதண்டனையினை இன்றளவிலும் நடைமுறைப் படுத்துகின்ற உள்ள 59நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதுவரை உலகிலுள்ள 103நாடுகளில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவும் அந்தப் பட்டியலில் சேரவேண்டும் என்பதுதான் மனித உரிமைகள் ஆர்வலர்களுடைய விருப்பமும் ஆகும்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-08-2015.
#KsRadhakrishnan #KSR_Posts #DeathSentences
See Also : http://ksr1956blog.blogspot.com/2015/07/blog-post_30.html
No comments:
Post a Comment