Tuesday, August 25, 2015

பிரிட்டன் நாடாளுமன்ற அவைத்தலைவரும் நம்முடைய அவைத்தலைவருடைய செயல்பாடுகளும்............!?! - Office and Role of Speaker.



இந்தியாவில் நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டமன்றத்திலும் அவைகள் நடப்பதில்லை. தாய் நாடாளுமன்றமான பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்த அவையின் தலைவர் (சபா நாயகர்) அரசியலுக்கு அப்பால், நியாயங்களின் படி நடந்துகொள்வது கடமையாகும். ஆளுங்கட்சிக்கு சாதகமாக இல்லாமல் துலாக்கோல் நிலையில் அவையை நடத்துபவர் தான் அவையின் தலைவராக இருப்பது கண்ணியம்.


பெரும்பான்மையான அரசியல் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவைத்தலைவர் பொறுப்பேற்றதும், அக்கட்சியிலிருந்து விலகி, பதவியில் இருக்கும் காலத்தில் தான் சார்ந்திருந்த அரசியல் கட்சிக்கு ஒரு சார்பாக நியாயத்தைப் புறக்கணித்து நடந்ததில்லை. 


இதுதான் காமென்வெல்த் நாடாளுமன்ற பேரவையின் உறுப்பினராக உள்ள அவைத்தலைவர்கள் நடந்துகொள்ளும் முறை. இந்தியாவில் நாடாளுமன்றத்திலும், நேற்றைக்குத் தமிழகச் சட்டமன்றத்தில் சட்டமன்ற பேரவைத்தலைவர் முதலமைச்சர் ஜெயலலிதாவை தலைகுனிந்து வரவேற்பதும், இந்தியாவின் ஆளுமையாக விளங்கிய மறைந்த அப்துல்கலாமுக்கு முறையான இரங்கல் உரைக்கு முக்கியத்துவம் தராமல், முதலமைச்சர் ஜெயலலிதாவை புகழ்ந்து புகழுரை தெரிவித்தது நாடாளுமன்ற முறைக்கு முற்றிலும் விரோதமானது.


இதேபோன்று பேரவைத் தலைவராக இருந்த மறைந்த காளிமுத்து அவர்கள், சட்டசபை காலம் முடியும் நாளன்று கிட்டத்தட்ட அரைமணிநேரம் முதலமைச்சர் ஜெயலலிதாவை புகழ்பாராட்டி பேசியதெல்லாம் ஜனநாயக நாட்டில் நாடாளுமன்ற முறைக்கு முற்றிலும் மாறுபட்ட செயலாகும். 


நாடாளுமன்றமும் சட்டமன்றமும் கூடி மக்கள் பிரச்சனைகளைப் பேுசும் போது , பாராட்டுவதற்கும், குறைசொல்வதற்கும் ஒரு வரையறை உண்டு. ஆனால் வெறும் பாராட்டுரையும், தனிமனிதத் துதியை மட்டும் உச்சரித்தால் அது சட்டமன்றமல்ல, முன்னாள் மன்னர் காலத்து அரசவை போன்று தனிநபர் அவையாகிவிடும். நிச்சயமாக அது மக்களுக்கான அவையாக இருக்காது. 


கிரேக்கத்தில் நகர அரசு ஆதிகாலத்தில் துவங்கும் போது, தனிநபர் துதி இல்லாமல் மக்களுக்காகக் கூடுகின்ற அவையாக அமைக்கப்பட்டு, அதுவே பிற்காலத்தில் அரசியலமைப்பு அவையாக பிரிட்டனில் நாடாளுமன்ற அவையாக அமைக்கப்பட்டது.


அந்த அவையின் நோக்கமே அனைத்து மக்களும் ஒர் இடத்தில் கூடமுடியாது. எனவே அவர்களின் பிரதிநிதிகளை வைத்து நாட்டு மக்களின் பிரச்சனைகளை விவாதித்து தீர்வு வழங்கவே இருக்கின்றது நாடாளுமன்றமும், சட்டமன்றமும். ஆனால் இன்றைக்கிருக்கும் தனிநபர் அவையினை எப்படி மக்கள் பிரதிநிதிகளின் அவையாக ஏற்றுக்கொள்ளமுடியும். 


பேரவையின் தலைவர் நியாயத்தின் பக்கம் இருக்கவேண்டும். அதைத் தெரிந்துகொள்ள பிரிட்டிஷ் மக்கள் அவையின் தலைவர் எப்படி இயங்குகிறார் என்ற பதிவு இதோ :-


The Speaker of the House of Commons chairs debates in the Commons chamber. The holder of this office is an MP who has been elected to be Speaker by other Members of Parliament. During debates they keep order and call MPs to speak.

The Speaker is the chief officer and highest authority of the House of Commons and must remain politically impartial at all times.

The Speaker also represents the Commons to the monarch, the Lords and other authorities and chairs the House of Commons Commission. The current Speaker is John Bercow, MP for Buckingham.

Chairing debates in the House of Commons

The Speaker is perhaps best known as the person who keeps order and calls MPs to speak during Commons debates. The Speaker calls MPs in turn to give their opinion on an issue. MPs signal that they want to speak by standing up from their seat (a custom known as 'catching the Speaker's eye') or they can notify the Speaker in advance by writing.

The Speaker has full authority to make sure MPs follow the rules of the House during debates. This can include:

directing an MP to withdraw remarks if, for example, they use abusive language suspending the sitting of the House due to serious disorder suspending MPs who are deliberately disobedient - known as naming asking MPs to be quiet so Members can be heard Election of the Speaker
John Bercow was elected House of Commons Speaker on 22 June 2009.

The Speaker was elected using an exhaustive secret ballot system, the first time this procedure had been used for the election of a Speaker.

Election process

MPs are given a list of candidates and place an x next to the candidate of their choice if a candidate receives more than 50 per cent of the votes, the question is put to the House that he or she takes the chair as Speaker if no candidate does so, the candidate with the fewest votes, and those with less than five per cent of the vote, are eliminated in addition, any candidate may withdraw within 10 minutes of the announcement of the result of a ballot MPs then vote again on the reduced slate of candidates and continue doing so until one candidate receives more than half the votes Politically impartial Speakers must be politically impartial. Therefore, on election the new Speaker must resign from their political party and remain separate from political issues even in retirement. However, the Speaker will deal with their constituents' problems like a normal MP.

Speakers and general elections

Speakers still stand in general elections. They are generally unopposed by the major political parties, who will not field a candidate in the Speaker's constituency - this includes the original party they were a member of. During a general election, Speakers do not campaign on any political issues but simply stand as 'the Speaker seeking re-election'. ( Courtesy : parliament )

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-08-2015

See also :
https://www.facebook.com/ksradhakrish/posts/1641692509453765
https://www.facebook.com/ksradhakrish/posts/1641272862829063

‪#‎KsRadhakrishnan‬ ‪#‎KSR_Posts‬
#ParliamentDemocracy ‪#‎UKparliament‬ ‪#‎

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...