Thursday, August 13, 2015

இரண்டு ஆண்டுகளில் நூறு யானைகளுக்கும் மேல் அழிப்பு. -Elephant Hunting


மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நூற்றுக்கும் மேலான யானைகள் வேட்டையாடப்பட்டு கொடியவர்களால் அதன் தந்தங்களும், யானையின் ஏனைய உடல்பாகங்களும் கொள்ளையடிக்கப் பட்டுள்ளன.

யானையின் தந்தங்களுக்காகவும், அதன் உடல்பாகங்களில் மருந்துவகைகள் செய்வதற்கும் அவற்றை தொடர்ந்து கொன்று வருகிறார்கள். வனத்துறையும், அதன் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் இதற்குத் துணை போவதும், கண்டுகொள்ளாமல் இருப்பதும் தான் கொடியவர்களுக்குச் சாதகமாகிவிட்டது.
 1975லிருந்து 1985வரை, வீரப்பன் காலகட்டத்தில் சுமார் நூற்றும் மேலான யானைகள் கொல்லப்பட்டதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இருபது ஆண்டுகளாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில்  400யானைகளுக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளதில், கடந்த இரண்டு ஆண்டுகளில் தான் யானைகள் அதிக அளவில் அழிக்கப்பட்டுள்ளன.

சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும், காட்டில் உள்ள மரங்களை வெட்டுவதால் அவைகளுடைய வலசைகள் (வழித்தடங்கள்) மாறி, தண்ணீருக்காகவும், தீனிக்காகவும் அருகில் உள்ள கிராமங்களைத் தேடி வரும் கட்டாயம் யானைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

உலகம் வாழவேண்டுமென்றால் டார்வினது கோட்பாடுதான் எல்லோருக்கும் பொதுவானது. அதனை மறந்துவிட்டால் எந்த ஜீவன் தான் வாழ முடியும். இயற்கையை அழித்து அதனோடு போர் தொடுப்பது மாபெறும் பாதகம் என்று சில காட்டுமிராண்டிகளுக்குத் தெரியவில்லையே.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
13-08-2015

#ElephantHunting #KsRadhakrishnan #KSR_Posts
 

No comments:

Post a Comment

Make a choice to get better, and to move forward. Move boldly against any currents*

*Make a choice to get better, and  to move forward. Move boldly against any currents*. Be persistent and consistent with your change, no mat...