Tuesday, August 25, 2015

History - Brilliant threads.


பிரபல The Economist இந்தவார சஞ்சிகையில் The Silk Roads: A New History of the World. By Peter Frankopan என்ற நூல் மதிப்புரை பத்தியி்னை படிக்கும் போது , புதிய உலக வரலாற்று செய்திகளை சொல்லியுள்ளார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியரான பீட்டர் ஃப்ராங்கொபன்.

பெர்சிய நாட்டின் எழுச்சியும், சில்க் வழித்தடம் என்ற வியாபாரப் பாதைகள், யுரேசிய வழிமார்க்கங்கள், அக்கால வணிகத் தொடர்புகள், 17வது நூற்றாண்டின் தென் அமெரிக்காவைக் கண்டுபிடித்ததும், ஜெர்மனியின் எழுச்சியும், ஆசியத் தொடர்புகளும் பற்றி எழுதப்பட்டுள்ளதாக குறிப்பட்டுள்ளன.

இந்நூலை வரும் பிப்பிரவரியில் அமெரிக்காவில் வெளியிட இருக்கின்றார்கள். வாஸ்கோடகாமா வருவதற்கு முன்னே இந்தியாவிற்கு ரஷ்ய வணிகர்கள் வந்துள்ளதாக செய்திகள் உள்ளன. வரலாற்று ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் படிக்கவேண்டிய நூலாகும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-08-2015.

#KsRadhakrishnan #KSR_Posts


#BrilliantThreads #SilkRoads #OldHistory

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...