Thursday, August 6, 2015

கிழக்குக் கடற்கரைச் சாலையும் - துறைமுகங்களும். - East Coast Road - Tamil Nadu Fishing Harbours.




தமிழகத்தில் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையிலான பத்தாயிரம் கோடி செலவில், நான்குவழிச் சாலையாக கிழக்குக் கடற்கரைச் சாலையை அமைக்கும் திட்டம் உள்ளது. இந்த கிழக்குக் கடற்கரைச் சாலை 1970களில் திட்டமிடப்பட்டு ஆமை வேகத்தில் பணிகள் நடந்தது.

சென்னையிலிருந்து புதுவை வரை முதல்கட்டமாகவும், புதுவையிலிருந்து நாகப்பட்டிணம், நாகப் பட்டிணத்திலிருந்து தூத்துக்குடி, தூத்துக்குடியிலிருந்து கன்னியாகுமரி என்று மூன்றுகட்டப் பணிகளும் கடந்த 36 ஆண்டுகளாக இன்னும் முடிந்தபாடில்லை.

ஒருபகுதியில் புதிதாக சாலை அமைத்து முடிப்பதற்குள் அமைத்த பழைய சாலை பழுதாகிவிடுகிறது. இப்படித்தான் கிழக்குக் கடற்கரைச் சாலையினுடைய நிலைமை. நாகப்பட்டிணம்- குமரி வரை 467கி.மீட்டரும், புதுவை - சென்னை 144 கி.மீட்டரும் என்ற தூரத்திலும், விடுபட்ட இடங்களில் சாலை அமைப்புப் பணிகள் சரியாக மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை என்ற நிலைதான் இன்றைக்கும்.

இடையிடையே சாலைகள் நிறைவாகாமலும், இணைப்பாகாமலும் இருக்கின்றது. அதேபோல நீர்வழிப் போக்குவரத்தும், பக்கிங்ஹாம் கால்வாய்த் திட்டமும் இதுவரை செலவளித்த அரசுப்பணம் ஆக்கப்பூர்வமான எந்த பயன்பாடுக்கும் சரியாக வரவில்லை.

இந்தியாவில் அடையாளப்படுத்தப்பட்ட 101 நீர்வழிப் போக்குவரத்து திட்டங்களும் வடநாட்டிலும், கேரளாவிலும், ஆந்திராவிலும் தான் அதிகம். இதுகுறித்து என்னுடைய தளத்தில் இரண்டு பதிவுகள் பதிவு செய்துள்ளேன்

பதிவு : 1 

பதிவு : 2

இந்தப் பிரச்சனையை போன்றே குமரி மாவட்ட குளச்சல் துறைமுகத்தை நாற்பதாண்டு  காலமாக வர்த்தகத் துறைமுகமாக மாற்ற வேண்டுமென்று கோரிக்கை இருந்தாலும் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்போக்கில் இதை அணுகுகின்றது.  கேரளத்தில் திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞியம் துறைமுகப்பணிகள் துவங்கிவிட்டதால் குளச்சல் துறைமுகம் கேள்விக்குறிதான்.

மீன்பிடித் துறைமுகங்களான முட்டம், மணப்பாடு, புன்னக்காயல் , வேம்பார், வாலிநோக்கம், நாகப்பட்டினம், பழையாறு, பூம்புகார், ராமேஸ்வரத்திற்கு அருகே மூக்கையூர்  என சென்னைவரை பல திட்டங்கள் நிலுவையிலே உள்ளன.

இப்படி ஒவ்வொரு துறையிலும் மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பு இல்லாததால் தமிழக வளர்ச்சித் திட்டங்கள் நாற்பது, ஐம்பது ஆண்டுகளில் வரவேண்டியவை வராமல் இருப்பதை யார் அறிவார்கள்.

-










No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...