Saturday, October 28, 2017

இந்திராகாந்தி நூற்றாண்டு விழா


மறைந்த இந்திய பிரதமர் இந்திராகாந்தி நூற்றாண்டு விழாவில் குஷ்பு பங்கேற்பு - என பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது
இப்படியும் ஓர் சோதனை!
மறைந்த இந்திரா காந்திக்கு தமிழகத்தில் நெருக்கமாகஇருந்தவர்கள் தவைர் கலைஞர், திரு. பழ நெடுமாறன் போன்றவர்கள்தான். நான் அறிந்தவரை.



திரு. ப. சிதம்பரத்திற்கும் இந்திரா காந்தியோடு அறிமுகம் உண்டு. இவர்கள் இந்திரா காந்தியைப் பற்றி பேசினால் ஒரு அர்த்தம் உண்டு. இந்திரா காந்தியைப் பார்க்க நெடுமாறனுடன் நான் சென்ற போது, அவரை ‘மைடியர் சன்’ என்று உரிமையுடன் அழைத்தார். இந்திராகாந்தி காலத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் இன்று இல்லாமல் போய்விட்டார்கள். 

குஷ்புவுக்கும் இந்திராகாந்திக்கும் என்ன சம்பந்தம்? அவர் இந்திராவை போட்டோவில் மட்டும் தான் பார்த்திருப்பார். இந்திராகாந்தியைப் பற்றி குஷ்பு பேசினால் என்ன சொல்ல?

பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் சத்தியமூர்த்திபவனில் வலம் வந்த திரு. நெடுமாறன், குமரி அனந்தன், திரு. எஸ்.ஆர். பாலசுப்ரமணியன், திரு. முகம்மது இஸ்மாயில் போன்ற மூத்த தலைவர்களில் திரு. குமரி அனந்தன் மட்டும் தான் சத்தியமூர்த்தி பவனுக்கு செல்லும் நிலையில் உள்ளார்.

#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28 -10-2017

No comments:

Post a Comment

வேலுப்பிள்ளை பிரபாகரன்- Velupillai Prabhakaran

https://youtu.be/WrNmTFAoFw8?si=xJMjMucIKPf6JUWQ