Thursday, May 3, 2018

காவிரியும், நாயக்கர் மக்களின் ஆட்சி காலமும்

கல்லும் காவிரியும் புல்லும் பூமியும் உள்ளவரை இந்த அறம் நிலவ வேண்டும்” என அந்நாளில் அறம் செய்தவர்கள் அந்த அறம் என்றென்றும் நிலைபெற வேண்டுமென கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் இவ்வாறு பொறித்து வைத்தார்கள்.
கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் காவிரி நீர் தொடர்பாக தமிழகமும் மைசூரும் சண்டையிட்டுக் கொண்டன. அப்போது மதுரையை அரசி மங்கம்மாளும், தஞ்சையை மாரத்திய மன்னன் சகசியும் ஆட்சி செய்து வந்தனர். மைசூர் அரசராக இருந்த சித்ததேவ மகாராயன் காவிரியின் போக்கை அணை கட்டி தடுக்க முயன்றான். இதன் காரணமாக காவிரிக்காக மதுரை நாயக்கர் அரசி, தஞ்சை மராட்டிய மன்னனிடம் இருந்த கருத்து வேறுபாடுகளை களைந்து தங்களது படையுடன் மைசூருக்கு போருக்கு அனுப்பினார்கள். காவிரி நீரை மீட்காமல் நாட்டிற்கு திரும்பக் கூடாது என்ற உத்தரவை பிறப்பித்தார் ராணி மங்கம்மாள்.

அதற்குள் காவிரியில் கட்டப்பட்ட அணை பலமற்று உடைந்து அடித்துச் சென்றது. பின்னர் காவிரியில் தடையின்றி தண்ணீர் வரத் தொடங்கியது.

#காவிரி
#மதுரை_நாயக்கர்_மக்கள்_ஆட்சி
#Cauvery
#Madurai_Naicker_regime
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்


03-05-2018

No comments:

Post a Comment

Reached me today…