தமிழகத்தில் கோடை கால தொடங்கும் நிலையில் குடிநீர் தட்டுப்பாடு முன்னுக்கு பெருமளவு வந்துள்ளது. சென்னை, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, திருச்சி, கரூர், நாமக்கல், வேலூர், புதுக்கோட்டை, தர்மபுரி, சேலம், திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றடாம் குடிநீருக்காக அலைவதே பெரும் வேலையாக உள்ளனர். நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் குடிநீரை விலைக்கு வாங்கும் மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. கோடை காலம் முடிவதற்குள் குடிநீர் பிரச்சனை பூதாகரமான பிரச்சனையாக மாறும் அபாயம் உள்ளது.
(படம் - சீவலப்பேரி, வல்லநாடு, கூட்டு குடிநீர் திட்ட தண்ணீ ஊருக்குள்ள என்னதான் வந்தாலும் வைப்பாறு தண்ணிக்கு ஈடாகுமா? அந்தக் காலத்துல் சாத்தூர், முத்தலாபுரம்,விளாத்திகுளம் பகுதிகளில் கருக்கள்ளயும், சாயங்காலமும் ஆத்துக்கு போயி ஊத்து பறிச்சு தெளிஞ்ச தண்ணிய பானையில ஊத்தி தலச் சுமையா கொண்டாந்து குடிச்ச என்ன சுவை....! வறட்சியால் விளாத்திகுளம் வைப்பாறு தண்ணீர் ஊத்து போட்டு அகப்பையில தண்ணீர்.......)
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
01-05-2018
No comments:
Post a Comment