Friday, September 14, 2018

உழவுக்கு மாடுகளின் கால்களில் லாடம் அடிப்பது



————————————————
உழவுக்கு பயன்படும் காளை மாடுகளின் கால்களில் லாடம் அடிப்பது உழவுக்கு பயன்படும் காளை மாடுகளின் கால்களில் லாடம் அடிப்பது உழவுக்கு பயன்படும் காளை மாடுகளின் கால்களில் லாடம் அடிப்பது உழவுக்கு பயன்படும் காளை மாடுகளின் கால்களில் லாடம் அடிப்பது உழவுக்கு பயன்படும் காளை மாடுகளின் கால்களில் லாடம் அடிப்பது ஒரு தனி கலை. எங்கள் ஊர் கிராமத்தில் கொல் ஆசாரி கருப்பையா அவர்கள் இரும்பில் துளையிட்ட லாடங்களை முதலில் மாட்டின காலின் அளவுக்கு தன்னுடைய கொல்லுப் பட்டறையில் தயாரிப்பார். தயாரித்த பின் அதை ஒழுங்குப்படுத்தி மாட்டின் கால் அளவுக்கு ஏற்றாற் போல ஒழுங்குபடுத்தி அளவுவாரியாக வரிசைப்படுத்துவார். இது மாலைப் பொழுதில் நடக்கும். 

மறுநாள் காலை 7 மணிக்கெல்லாம் எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் அரச மர மேடைக்கு பக்கத்திலுள்ள தான் செய்த லாடங்கள், ஆனிகள் மற்றும் உபகரணங்களோடு தயாராக இருப்பார். 

உழவுக்கு செல்லும் மாடுகளுக்கு லாடம் அடிக்க வரிசையாக விவசாயிகள் தங்களுடைய காளை மாடுகளை அழைத்து வருவார்கள். லாடம் அடிக்க வேண்டிய மாட்டினை சாய்த்து திருப்பி லாவகமாக கீழே தள்ளி படுக்க வைத்து கால்களில் ஓடாமலிக்க கொச்சக் கயிறால் கட்டிப் போடுவார்கள். பிடிகயிறை விட சற்று பெரிய கயிறை, மாட்டின் தாடைக்கு கீழ் கொடுத்து, கயிற்றின் அடுத்த நுனியை மாட்டின் வலப்பக்கமாகக் கொண்டு வந்து, தம்பிடித்து இரு நுனியையும் ஒரு இழு இழுத்தால் மாடு பக்கவாட்டில் சரிந்து படுக்கும். மாட்டின் உரிமையாளர் மாட்டின் கொம்பை பிடித்துக் கொள்ளவேண்டும். முன்னங்கால்களை முதலிலேயும், அடுத்து பின்னங்கால்களையும், அடுத்து நான்கு கால்களையும் மொத்தமாகக் கட்டிக் கொள்ள வேண்டும். மாட்டின் நான்கு கால்களின் குளம்புகளும் ஒரே இடத்தில் இருக்கும் போது, அதன் குளம்புகள் மண் நீக்கப்பட்டு, செதுக்கப்பட்டு சரிசமமாக்கப்படுகிறது. 

நாட்டு வகை மாடுகள் என்றால், ஒருவகை லாடமும் மற்ற வகை மாடுகளுக்கு ஒரு லாடமும் பயன்படுத்தப்படுகிறது.
சில மாடுகள் பயத்தினால் சாணத்தையும் போடும். 

அதன்பின்,பழைய தேய்ந்த லாடங்களை அப்புறப்படுத்திவிட்டு புது லாடங்களை அடிப்பார். அதன்பின் மாடுகள் சிறிது நேரத்திற்கு எழுந்து நடக்க சிரமப்படும். அதாவது நாம் ஒரு புது செருப்பு அணிந்தால் எப்படி இருக்குமோ அதுபோல் சிரமப்பட்டு நடக்கும். இந்த லாடம் அடிக்கப்பட்ட மாடுகளை போக்குவரத்திற்கோ, வண்டி மாடாகவோ, உழவுக்கோ 1 வருடத்துக்கு பயன்படுத்தலாம். இதுபோன்ற காட்சிகள் எல்லாம் இன்றைக்கு கிராமங்களில் மறைந்து வருகிறது. 
கொல்லுத் தொழிலும் முன்புபோல கிராமங்களில் தென்படுவது இல்லை. குதிரைகளுக்கும் இதுபோல லாடமடிப்பது நகர்ப்புறங்களில் வாடிக்கை. மாடுகளுக்கு லாடம் கட்டுவது என்பது சுவாரஸ்யமான ஒரு செயல். 

#லாடம்
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
14-09-2018

No comments:

Post a Comment