Saturday, September 22, 2018

பாஜக தமிழிசைக்கு மீண்டும் ஓர் நினைவூட்டல் (கலைஞரும் கச்சத்தீவும் சிறிமாவோ- சாஸ்திரி ஒப்பந்தம். )

பாஜக தமிழிசைக்கு மீண்டும்  ஓர்  நினைவூட்டல் (கலைஞரும் கச்சத்தீவும் 
சிறிமாவோ- சாஸ்திரி ஒப்பந்தம். )
————————————————
பாஜகவின் தமிழக தலைவராக இருக்கும் தமிழிசை செளந்தரராஜன் கடந்த 20-9-2018 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஈழப்பிரச்சனையில் திமுகவின் பங்கு குறித்து வரலாறு அறியாமல் கருத்துரைத்து இருந்தார்.  அதற்கு பதிலாக கழகத் தலைமைக் கழகத்தின் சார்பில் என் அறிக்கை  வெளியிடப்பட்டது. அதில் தெளிவான , ஆரோக்கியமான வரலாற்றை நியாமான முறையில் கற்பிக்கும் வகையில் பதில் அளித்து இருந்தேன். 

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தமிழிசையின் தகப்பனார் குமரி அனந்தன் அவர்களுடன் நெருங்கி பழகி காமராசருடன் அரசியல் நிகழ்வுகளில் பங்குபெற்றவன். எனக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியோ அவர் மீதான வன்மமோ கிடையாது.நட்பு,அன்பு வேறு. அரசியலில் தெளிவில்லாமல் பொதுவெளியில் பேசுவது வேறு என்ற காரணத்தால் ஈழத்தமிழர் நலனில் அக்கறையுடன் செயல்பட்டதின் காரணமாக பதில் அளித்தேன். 

அந்த அறிக்கையில் "ராஜபக்சேவின் இரத்தக்கறை படிந்த கரத்தை மோடி முகர்ந்ததையும் ராஜபக்ச்சே மற்றும்  அவர மகனுக்கு பிரதமர் மோடி டில்லியில் வரவேற்று பேசியை பற்றி தமிழிசை கருத்தளிக்கவில்லையே ? " எனக் கேள்வி எழுப்பினேன். தலைமைக் கழக அறிக்கைக்கு எதிர்வினையாற்றிய தமிழிசை அவர்கள் எனது கேள்வியை மட்டும் வசதியாக மறந்து விட்டு இன்று வாய்ச்சவடல் விட்டுருக்கின்றார். 

எனக்கும் லாவணி பாடுவதில் விருப்பம் இல்லாத காரணத்தால் தான் ஊடகங்களை கூட்டாமால் பத்திரிக்கை வாயிலாக பதில் அளிக்காமல் தனிப்பட்ட முறையில் வரலாற்றை சொல்ல விழைகின்றேன். 

பட்டுக்கோட்டக்கு வழிக்கேட்டால் கொட்டைப்பாக்கு என சொல்வது போல ஈழத்தமிழர் நலனில் கலைஞரும் திமுகவின் பங்களிப்பையும் சிறு தொகுப்பாக கூறியதற்கு சிறிதும் பொருத்தமில்லாமல் மலையக தமிழர்கள் குறித்தும், கச்சத்தீவு குறித்தும் பேசி திசை திருப்புகின்றார். கச்சத்தீவு தாரைவார்ப்பு என்பது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. கச்சத்தீவு குறித்து நேரடியாக விளக்கம் கேட்டிருந்தால் சொல்லிக் கொடுக்க கடமைப்பட்டிருக்கின்றேன். 

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட செய்தியே  நாளேட்டின் வாயிலாக அறிந்து துடித்தேன் என தலைவர் கலைஞர் அளித்த அறிக்கையும் அதன் பின்னர் மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் மேற்கொண்ட நடவடிக்கையை கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டனக் கூட்டம் போட்டவர் கலைஞர். நாடாளுமன்றத்தில் இரா.செழியன் அவர்களும் , மாரிச்சாமி அவர்களும் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். 
கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதை கண்டித்து வாஜ்பாய் நாடாளுமன்றத்தில்  பேசினார்.  
இலங்கை இராணுவத்திற்கு எவ்வித பயிற்சியும் , ஆயுத உதவியும் வாஜ்பாய் அளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். நான் மறுக்கவில்லை.  வரலாற்றை நன்கு அறிந்தவன் அடியேன் என்ற முறையில் தமிழிசைக்கு ஒன்றை நினைவூட்ட கடமைப் பட்டிருக்கின்றேன். வாஜ்பாய் நடவடிக்கைகளுக்கு காரணம் அன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் உறுப்புக் கட்சிகளாக இருந்த திமுகவும் , மதிமுகவும் இருந்தது. மறைந்த முரசொலிமாறன் அவர்களும் , வைகோ அவர்களும் அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களை சந்தித்து  கேட்டுக் கொண்டதின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பதை நினைவுபடுத்துவது கடமை. வாஜ்பாய் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் என குரல் உயர்த்தும் தமிழிசைக்கு " திமுக அமைத்த டெசோ மாநாடு மேடையில் நின்று தான் குரல் கொடுத்தார் " என்பதை சொல்லி இருக்க வேண்டும்.   கச்சத்தீவும் கலைஞரும் என்ற தலைப்பின் என் விளக்கத்தை  இத்துடன் இணைத்துள்ளேன். 

http://ksradhakrishnan.in/தலைவர்-கலைஞரும்-கச்சத்தீ/ 

 மேலும் மலையக தமிழர்கள் குறித்தும் பேசியிருக்கின்றார். வரலாற்றை நாளுக்கு நாள் வளைத்துக் காட்டவோ, திரித்து பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை. நாளைய ஆய்வுக்கு பயண்படும் வகையில் வரலாற்றை திரிப்பின்றி ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். 
சிறிமாவோ- சாஸ்திரி ஒப்பந்தம். ஒப்பந்தம் குறித்த எனது கட்டுரை இத்துடன் இணைக்கின்றேன்.  வாசித்துக் கொள்ளட்டும். 

https://ksradhakrishnan-ksrblogs.blogspot.com/2015/02/blog-post_3.html?m=1 

மீண்டும் மீண்டும் சொல்வது என்னவெனில் விதண்டாவாதம் பேச வேண்டும் என்றோ, பத்திரிக்கை வெளிச்சத்திற்கு விரும்பியோ இதனை பதிவு செய்யவில்லை மாறாக தெளிவு பிறக்கட்டும் என்றே பதில் எழுதியுள்ளேன்..

தமிழிசை  தானும் கல்லூரி காலத்தில் போராட்டம் செய்தேன் என கூறியிருக்கின்றார். திரப்படம் ஒன்றில் நானும் ரவுடிதான், ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன் என்பது போல பேசாமல்  எந்த போராட்டம் எந்த சிறையில் இருந்தால் என்றால் அதற்கு வாழ்த்து சொல்லவும் பாராட்டவும் கடமைப்பட்டிருக்கின்றேன். காரணம் நாங்களும் போராட்டகளத்திலும் சிறை வாசலிலும் நின்றவர்கள். 

#கலைஞரும்_கச்சத்தீவும்
#சிரிசேனா_சாஸ்திரிஒப்பந்தம் 
#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்* 
22-09-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...