Saturday, September 15, 2018

இந்த படத்தில் இருப்பது நடிப்புக் காட்சியாக இருக்கலாம்.


இந்த படத்தில் இருப்பது நடிப்புக் காட்சியாக இருக்கலாம்.

உண்மையாக கிராமப்புறங்களில் சலவை செய்பவர்கள் தீமூட்டி வெள்ளாவி வைத்து அருகேயுள்ள குளங்களில், நீர்நிலைகளில் ஒரு வாட்டமான கற்களை போட்டு அதற்கு மேல் சமதளமான கல்லை வைத்து அதில் வெளுப்பதுண்டு. அது மட்டுமல்லாமல் பெரிய அகலமான வாய் கொண்ட மண்பானையில் நீலப் பொடிகளை கணக்கான அளவில் தண்ணீரோடு துணிகளை முக்கியெடுத்து வெயிலில் காயப்போட்டு இஸ்திரி செய்தால் வெள்ளைத் துணிகள் பளபளக்கும். இன்றைக்கும் தாமிரபரணி வெளுப்புக்கு வெள்ளைத் துணியும், வேட்டியும் பளிச்சிடும். இன்று வரை என்னுடைய வேட்டி, சட்டைகளை திருநெல்வேலியிலுள்ள சரஸ்வதி லாட்ஜ் சலவையாளரிடம் போட்டு தான் வாங்கி அணிவதுண்டு.
சலவையாளர்கள் வெள்ளாவி வைத்த துணிகளை பெரிய பொட்டலமாக கட்டி தங்களுடைய கழுதைகளின் மீது ஏற்றி காலை 7 மணிக்கெல்லாம் நீர்நிலைகளுக்குச் சென்று சலவை செய்து நீளமான கயிற்றைக் கட்டி அதில் துணிகளை காயவைப்பார்கள். அவர்கள் ஓட்டிச் சென்ற கழுதைகளையும் ஆங்காங்கு நீர்நிலைகளுக்குப் பக்கத்தில் தெரியும். கழுதைக்கு என்ன தெரியும் என்பதை எளிதாக சொல்லிவிடுகிறோம். நம்முடைய அழுக்கு மூட்டைகள் அத்தனையையும் கழுதை தான் வெள்ளாவி வைத்து வெளுக்க குளத்தங்கரைக்கு கொண்டு செல்கிறது என்பதில்  புரிதலிருந்தால் கழுதை மீது தவறான குறியீட்டை வைக்க மாட்டோம். சில சலவையார்கள் கையை மேலிருந்து கீழ் வரை துணிகளை சுழற்றி அடித்து துவைக்கும் விதத்தை பார்க்கவே சற்று வேடிக்கையாகவும் இருக்கும். மற்றும் சிலர் துவைத்துக் கொண்டே சினிமா பாடல்களையோ, நாட்டுப்புறப் பாடல்களையோ பாடிக்கொண்டிருப்பார்கள். கிராமப்புறங்களில் துவைக்கும் சிலரின கைகளை இராசியான கைகள் என்றும் சொல்வார்கள்.

#கிராமிய_நிலைமை
#நாட்டுப்புறவியல்
#சலவையாளர்கள்
#Folklore
#Village
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
13-09-2018

No comments:

Post a Comment