*வெறும் 26 ஓட்டில் வெற்றிபெற்ற திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்.*
----------------------------------
பழைய தேர்தல் வரலாற்று செய்திகளை கவனித்து போது...
அன்றைக்கு திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதியில் சென்னையைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவேன், தூத்துக்குடி துறைமுகத்தை விரிவுப்படுத்துவேன் என்று வாக்குறுதியும் கொடுத்தார்.
கடந்த 1971இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் எம்.எஸ்.சிவசாமி வெறும் 26 ஓட்டுகள் அதிகமாக பெற்று திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்று மக்களவை உறுப்பினராக டெல்லி சென்றார். அவரை எதிர்த்து சுதந்திராகட்சியைச் சார்ந்த டாக்டர் மத்தியாஸ் 26 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவினார்.
என்ன தேர்தல் வினோதங்கள். அப்போது திருச்செந்தூர் தொகுதி சாத்தான்குளம், நாங்குநேரி, இராதாபுரம், குமரி முனை வரை உள்ள சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கியது. எனவே நாகர்கோவிலை சேர்ந்த மத்தியாஸ் இந்த தொகுதியில் அப்போது போட்டியிட்டார். தற்போதுள்ள தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் சிவகாசி நாடாளுமன்ற தொகுதியில் இருந்த கோவில்பட்டி, திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் இருந்த விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளோடு, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சேர்க்கப்பட்டு, சாத்தான்குளம் நீக்கப்பட்டு இன்றைய தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியாக கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-04-2019
No comments:
Post a Comment