Thursday, July 4, 2019

*தனது பென்சன் பணம் வரும்வரை;தனது மூக்குக் கண்ணாடியை மாற்றுவதற்கு கூட யாருடைய உதவியையும் எதிர்பார்க்காத முன்னாள் பிரதமர் பிறந்த நாள்.

*தனது பென்சன் பணம் வரும்வரை;தனது மூக்குக் கண்ணாடியை மாற்றுவதற்கு கூட யாருடைய உதவியையும் எதிர்பார்க்காத முன்னாள் பிரதமர் பிறந்த நாள் .*
-------------------------------------

குல்சாரிலால் நந்தா
விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய குடியரசின் முன்னாள் பிரதமருமான குல்சாரிலால் நந்தா 1898ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி பஞ்சாப் 
மாகாணத்திலுள்ள சியால்கோடில் பிறந்தார். இன்று இவரின் பிறந்த தினம் .இவர் இரண்டு முறை தலா 13 நாட்கள் இந்தியாவின் இடைக்கால பிரதமராக இருந்துள்ளார். 1964ல் ஜவஹர்லால் நேரு இறந்தபொழுது முதல் முறையும், 1966-ல் லால் பகதூர் சாஸ்திரி இறந்தபொழுது இரண்டாவது முறையும் இடைக்கால பிரதமராக பதவி வகித்தார். 
காந்தியவாதி ஆவார். இந்திய அரசு இவருக்கு 1997ல் பாரத ரத்னா விருது கொடுத்து கௌரவித்தது. தொழிலாளர் சிக்கலில் நிபுணத்துவம் பெற்ற பொருளாதார அறிஞருமான இவர் தனது 99வது வயதில் (1998) மறைந்தார்.

Image may contain: 1 person, glasses and close-upஇவர் பிரதமர் பதவியிலிருந்து விலகியவுடன் குழல் விளக்கு இல்லாமல் பல்பு வெளிச்சத்தில் பல அடுக்கு வீட்டில் தனியாக ஒரு படுக்கையறையில் தனது உணவை தானே சமைத்துக் கொண்டு வாழ்ந்தவர். பக்கத்திலிருப்பவருக்கு கூட அவர் ஒரு முன்னாள் பிரதமர் என்று தெரியாது. அந்தளவிற்கு ஊடக வெளிச்சம் இல்லாதவர். 
மாடிப்படிகளில் தான் செல்லமுடியும். லிப்ட் கிடையாது. உண்மையாகவே 2, 3 காந்தி குல்லாவைவும், ஜிப்பாவையும் வைத்துகொண்டு வாழ்ந்த மாமனிதர். எளிமையும், நேர்மையும், உண்மையான மக்கள் தலைவருக்கான அடையாளம். வாழ்ந்த காலங்களிளல் பகட்டில்லாமல் பதவி பவுசால் பந்தா காட்டாமல் நமக்கு பாடமக அமைந்த மாமனிதர் நந்தா. ஆரேக்கியமான அரசியல் என்ன? என இவர்களின் வரலாறு சொல்லும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04/07/2019.

No comments:

Post a Comment

2023-2024