Monday, December 2, 2019

சென்னை பெசன்ட் நகர் திட்ட துவக்கம்

சென்னை பெசன்ட் நகர் திட்ட துவக்கம்
-----------------------------------
காங்கிரசை துவக்கிய அன்னி பெசன்ட் அடையாறு பகுதியில் தியாசபிகல் சொசைட்டி, பின்னாட்களில் ஏற்பட்ட கலாசேத்ரா போன்ற நிறுவனங்கள் நிறுவ காரணமானவர். அவருடைய பணிகள் அடையாறு பகுதியிலேயே இருந்தது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை துவக்கத்தில் கல்லூரியாக இருந்து மதன்மோகன் மாளவியாவிடம் பல்கலைக்கழகமாக உயர அந்த நிறுவனத்தையே ஒப்படைத்தார். இன்றைக்கும் சென்னை வரலாற்றில் அன்னி பெசன்ட் பெயர் முக்கியத்துவம் பெறுகிறது. 

சென்னையின் பெசன்ட் நகர் பகுதியில் அமைந்த கடற்கரையின் பெயர் எலியட்ஸ் கடற்கரை ஆகும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இக்கடற்கரை வெள்ளையர்கள் மட்டுமே வரக்கூடியதாக இருந்தது. அன்றைய கவர்னர் எட்வர்ட் எலியட்டின் பெயரில் அழைக்கப்பட்டது. கலைஞர் அவர்கள் 1970களில் முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் இந்தக் கடற்கரை பகுதியில் சென்னை எலியட்ஸ் கடற்கரை வீடுகளமைப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அன்றைக்கு தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சராக கே.வி.சுப்பையா இருந்தார். இந்த திட்டம் அன்றைய மத்திய அரசு வீட்டு வசதித் துறை அமைச்சர் கே.கே.ஷா அவர்களால் 08-01-1970 அன்று பெசன்ட் நகர் திட்டம் துவங்கப்பட்டது. பின்னாளில் அவர் தமிழக கவர்னராகவும் பொறுப்புக்கு வந்தார். 





அந்த திட்டத்தில் கட்டப்பட்ட இரட்டை வீடுகள் பெசன்ட் நகர் கடற்கரைக்கு எதிராக வரிசையாக அமைந்தது. இந்த படத்தில் காட்டப்பட்டுள்ள அந்த இரட்டை வீடுகள் இடதுவலதுமாக மாடிகளைக் கொண்ட வீடுகளாக அமைந்தது. இன்றைக்கு இந்த படத்தில் இருப்பது போன்று அந்த வரிசையில் மீதமிருப்பது மூன்றே வீடுகள்தான். பெசன்ட் நகர் கடற்கள்யில் நடை பயிற்சின் போது கடந்த பல ஆண்டுகளாக கவனித்து உண்டு.

 பெசன்ட் நகர் திட்டம் தொடங்கப்பட்டபோது, கட்டுமானப் பணிகள் நடந்த நேரத்தில் ஏ.வி.எம்.ராஜன் நடித்து ஏ.வி.எம். தயாரிப்பில் வெளிவந்த “அன்னையும் பிதாவும்“ படத்தின் “சத்தியமா நான் சொல்லுவதெல்லாம் தத்துவம்“ என்ற பாடலில் படமாக்கப்பட்டிருக்கும்.




கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
02-12-2019
#KSRadhakrishnanPostings
#KSRPostings
#Besant_Nagar
https://www.facebook.com/kannadasanfan/videos/2410279825892396/?v=2410279825892396

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...