#சில பழைய_அரசியல்_கள_முகங்கள்
#பழைய_அரசியல்_வாழ்வில்_
#நினைவுக்கு_வந்தோர்
————————————————-
இன்று பேரறிஞர் அண்ணாவுக்கும், ஈ.வெ.கி.சம்பத்துக்கும் நெருக்கமான என் மீது பாசம் வைத்திருந்த, மறைந்த அண்ணன் பொறையார் ஜம்பு குடும்பத்தினர் சந்தித்தனர். அப்போது பழைய நிகழ்வுகளும் சங்கதிகளும் பேசிக்கொண்டிருந்தபோது கீழே குறிப்பிட்ட, இன்று பலர் அறியாத பொதுவாழ்வில் கடந்த காலத்தில் இருந்தவர்களுடைய பெயர்கள் நினைவுக்கு வந்தன. இதில் பெரும்பாலானவர்களுடன் தொடர்பும் நெருக்கமும் உண்டு.
கண்ணதாசன், கே.ஏ.மதியழகன், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, ஏ.கோவிந்தசாமி, எம்.பி.சுப்பிரமணியம், மேயர் வி.முனுசாமி, திருச்சி சாம்பு, க.ராஜாராம், தேவராச முதலியார், கோவைச் செழியன், பழ.நெடுமாறன், கே.செல்வராஜ், கே.கோவிந்தசாமி, டி.கே.பொன்னுவேலு, வி.கிருஷ்ணமூர்த்தி, கே.ஏ.கிருஷ்ணசாமி, உ.பில்லபன், பொறையார் ஜம்பு, ஆர்.எஸ்.பாண்டியன், பி.எம்.குப்புசாமி, என்.விவேகானந்தன், மதுராந்தகம் பாலு, கே.முருகேசன், எம்.சி.தேவராசன், எம்.சி.வ.சங்கரநாராயணன், மணிவண்ணன், ஏ.எஸ்.சி.கிருஷ்ணசாமி, பஞ்சாட்சரம், என்.ராமாநுஜம், எஸ்.பி.டி.திராவிடமணி, வழக்கறிஞர்கள் என்.டி.வானமாமலை, வி.பி.ராமன், அ.ச.நடராசன், டாக்டர் கிருஷ்ணன், கரூர் சோமு, ராஜமாணிக்கம், பெரியவர் எஸ்.வி.லிங்கம், டி.எம்.பார்த்தசாரதி, வெ.கி.செல்வன், பாண்டியன் ஸ்டோர் செல்வராஜ், கவுன்சிலர்கள் சிட்டி பாபு, கபாலி, ஜேசுபாதம், பெ.குமாரசாமி, வி.எல்.கோவிந்தராஜன், அப்துல் காதர், இரா.சம்பந்தம், பா.ரெங்கநாதன், வேதாசலம், ஜி.சுப்ரமணியம், சைதை சம்பந்தம், பா.கார்மேகம் மற்றும் நெல்லை புகாரி, எஸ்.எம்.காதர், எம்.எஸ்.ஹமீது, பி..ஈ.நடராஜன், எம்.கே.டி.சுப்பிரமணியம் (சொந்த ஊர் விருதுநகர், அண்ணா ராபின்சன் பூங்காவில் திமுகவைத் துவங்கியபோது அழைப்பிதழில் முதல் வரிசையில் இவர் பெயர் இருந்தது), தி.சு.கிள்ளிவளவன் (இயற்பெயர் திருவேங்கடம், அண்ணாவின் ஆரம்பகட்ட 1966 வரை செயலாளராகவும் Home Land பத்திரிகையின் துணையாசிரியர்), தஞ்சை இராமமூர்த்தி, ஈரோடு த.விஸ்வநாதன், திண்டுக்கல் அழகிரிசாமி, நீலகிரி கரிச்சா கவுடர், கடலூர் பூவை இராமாநுஜம், திருச்சி சாமிக்கண்ணு, துறையூர் ராஜசேகரன், பட்டுக்கோட்டை வெங்கடசாமி, மதுரை ஆ.ரத்தினம், மதுரை மெர்சி கிரேசி, நாகர்கோவில் முத்துக்கருப்பன், நெல்லை அப்பாசாமி, திருவல்லிக்கேணி திருநாவுக்கரசு, திருவள்ளூர் ஞானப்பிரகாசம், திருப்பூர் கோவிந்தசாமி, நாமக்கல் சித்திக் இப்படி பலர்.
இவர்கள் பொதுவாழ்வில் உழைத்தார்கள். பலருக்கு அடையாளம் கிடைக்கவில்லை என்பது கவலையான விடயம். அவர்களின் பெயர்களை என்னால் முடிந்த அளவு பதிவு செய்ய வேண்டிய அக்கறையும் ஆர்வமும் இருக்கின்றது.
#பழைய_அரசியல்_கள_முகங்கள்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
10-03-2020.
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
http://ksradhakrishnan.in
No comments:
Post a Comment