Friday, March 27, 2020

*#கரோனா* *சிலரின் கருத்து*

*#கரோனா* 
*சிலரின் கருத்து*
—————
அகில இந்திய அளவில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் பொறுப்பு வாய்ந்த ஆளுமைகளைக் கொண்டு இந்த கரோனா வைரசை ஒழிக்க உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்தால் நல்லது. அதில் பொருளாதார நிபுணர்கள், மருத்துவர்கள், திரைத்துறையினர், இலக்கியவாதிகள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், அனைத்துக் கட்சியைச் சார்ந்த பிரதிநிதிகள் என ஒரு உயர்மட்டக் குழுவினை அமைத்து ஆலோசனைகளை வழங்கினால் நன்றாக இருக்கும். ஒவ்வொரு அமைச்சரும் ஒரு மாவட்டத்தை கவனிக்கிறார்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் இந்த குழுவில் உள்ள ஆளுமைகளை நியமித்து நேரடியாகக் கண்காணித்து அரசுக்கு அவ்வப்போது செய்ய வேண்டிய பணிகளை செய்தால் நன்றாக இருக்கும். இதை நான் சொல்லவில்லை, நேற்று என்னுடன் பேசிய ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்தாகும். எனக்கும் இது சரியெனப் பட்டது. 

வல்லுநர்கள் பல வகையில் ஆலோசனைகளைத் தரலாம். குறிப்பாக மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளை சமாளிக்க பொருளாதார வல்லுநர்கள் அவர்களுடைய கருத்துக்களை கூறலாம். மக்களை பாதுகாப்பாக இருக்கச் சொல்லி திரைத்துறையினரைக் கொண்டு தொலைக்காட்சியில் விளம்பரம் செய்தால் அது மக்களைப் பெருமளவில் சென்றடையும். மருத்துவர்கள் ஆலோசனையும் மருத்துவ ரீதியாக பயன்படும். அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள், வழக்கறிஞர்கள் பொதுவாக சமூக ரீதியான ஆலோசனைகள வழங்கலாம். இதைக் கவனத்தில் கொள்வது நல்லது. இதில் அரசியல் இல்லாமல் கொந்தளிப்பாக இருக்கின்ற இத்தருணத்தில் யாரையும் குறை சொல்ல முடியாது என்பதை கவனத்தில் கொள்ளலாம். இந்த மாதிரி ஒரு உயர்மட்டக் குழுக்கள் அகில இந்திய  அளவில் நடு நிலை அனுகுமுறையில் நாட்டின் நலன் கருதி அமைத்தால் நல்லது என்று நீதிபதி மட்டுமல்ல மேலும் கைபேசியில் பேசிய இருவர் சொன்னபோது இது எனக்கு சரியாகவே பட்டது. இதைச் சொல்ல வேண்டியது கடமை என்பதாலேயே இந்தப் பதிவு. 

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
27.03.2020
#ksrposts

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...