Sunday, March 8, 2020

Upendra Baxi / உபேந்திர பக்சி

Upendra Baxi / உபேந்திர பக்சி -------------------
கடந்த 04-03-2020அன்று டெல்லி சென்றிருந்தபோது, கிருஷ்ணமேனன் பவனில் உள்ள International Society of International Law (ISIL)க்கு சென்றபோது, பேராசிரியர் டாக்டர். உபேந்திர பக்சியை பற்றி நண்பர் பேசிக்கொண்டிருந்தார். பத்மஸ்ரீ உபேந்திர பக்சி சட்டத்துறையில் உலகளவில் அனைவரும் அறிந்த சட்ட நிபுணர். அரசியலமைப்புச் சட்டத்தை சர்வதேச சட்டத்தையும், மனித உரிமை சட்டத்தையும் குறித்து பல நூல்களை எழுதியுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் 1990 முதல் 1994 வரை பணியாற்றினார். கிட்டத்தட்ட 20க்கும் மேலான சட்ட ஆய்வு நூல்களை எழுதியவர். கடந்த 2000வது ஆண்டில் அவரை சந்தித்தபோது, The Laws of War 25 Years after Nuremberg, Tom J. Farer என்ற நூலை எனக்கு வழங்கினார். அவருடைய நூலகம் அரிய நூல்களை அடர்த்தியாக கொண்டிருக்கும். இவரை குறித்து இந்தியாவில் அனைவருடைய பார்வைக்கும் வந்ததில்லை. ஆனால், தகுதியற்றவர்கள் எல்லாம் எளிதாக வெளிச்சத்துக்கு வந்துவிடுகிறார்கள். இவரை எல்லாம் மத்திய சட்டத்துறை அமைச்சராக ஆக்கியிருந்தால் நாட்டிற்கு நல்லது.
Upendra Baxi (born 9 November 1938) is a legal scholar, since 1996 professor of law in development at the University of Warwick, United Kingdom. He has been the vice-chancellor of University of Delhi (1990–1994), prior to which he held the position of professor of law at the same university for 23 years (1973–1996). He has also served as the vice-chancellor of the University of South Gujarat, Surat, India (1982–1985). In 2011, he was awarded the Padma Shri, the fourth highest civilian award in India, by the Government of India.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 08-03-2020. #KSRadhakrishnan_Postings #KSRPostings #upendra_baxi

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...