————————————————————-
தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஒருவருடைய சொத்தைப் பற்றி தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் பேசியது, இன்றைக்கு தினமலரில் 21.04.2023 அன்று செய்தியாகவும் வெளிவந்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான இடம் தொடர்பாக
20.04.2023 அன்றுசட்டமன்றத்தில் பேசப்பட்டபோது, அமைச்சர் துரைமுருகன், “இது ஒரு முக்கியமான கேள்வி, மாதவரத்தில் ஐ.டி பார்க் வைக்க வேண்டியது முக்கியமான ஒன்று. ஆனால் அதற்கான நிலம் இல்லை என்று அமைச்சர் கூறுகிறார். மாதவரம் சுதர்சனம் என்னிடம் சொல்லி உள்ளார். அவருக்கு ஆயிரம் ஏக்கரில் மாந்தோப்பு உள்ளது என்று. அதில் 200 ஏக்கர் தருகிறேன் என்கிறார். அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக சு.சுதர்சனம் சட்டமன்றத்தில் எதையும் பேசவில்லை.
தனது கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினருக்கு உள்ள சொத்து தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்திலேயே பேசுகிறார் என்றால், அதைக் கேட்க சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது. சுதர்சனத்துக்கு தற்போது எவ்வளவு சொத்துகள் இருக்கக் கூடும் என்பதைப் பற்றி யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை.
மதிமுக தொடங்கப்பட்ட ஆரம்ப கட்டத்தில் சாதாரணமாக வழக்கறிஞர் அணியில் சுதர்சனம் நிர்வாகியாகச் சேர்க்கப்பட்டார். அதுமட்டுமல்ல, மதிமுகவுக்கும் திமுகவுக்கும் சென்னை உயர்நீதி மன்றத்திலும் தேர்தல் கமிஷனிலும் வழக்கு நடந்தபோது, மதுராங்கம் ஆறுமுகத்தின் வழக்கறிஞராகவும் நீதிமன்றத்தில் சுதர்சனம் ஆஜரானதும் உண்டு. மதிமுகவில் கடை கோடியில் இருந்தவர்களை எல்லாம் இப்படி தூக்கிச் சுமக்கும் ஸ்டாலினின் கண்களில் மதிமுக நிர்மாணப் பணிகளில் ஈடுபட்ட என் போன்ற ஆளுமைகள் தெரியமாட்டார்கள். என் போன்றவர்களைப் பற்றிய புரிதலும் அவருக்குக் கிடையாது.
மதிமுகவுக்கும் திமுகவுக்கும் கலைஞருக்கும் வைகோவுக்கும் பிரச்னைகள் ஏற்பட்ட நேரத்தில் எல்லாம் கண்ணுக்குத் தெரியாத இந்த சுதர்சனங்கள் எல்லாம் அப்படி என்ன பணி திமுகவில் செய்துவிட்டார்கள்?
மதிமுகவில் சாதாரண நிலையில் கடைக்கோடியில் இருந்தவர்களை எல்லாம் ஸ்டாலின் தூக்கிச் சுமக்கிறாரே, அதற்கான நீண்ட பட்டியலை என்னால் தர முடியும். ஸ்டாலினுக்கு, எங்களைப் போன்று மதிமுகவில் அதிர்வை ஏற்படுத்தியவர்கள் எல்லாம் சாதாரணமாகப்படுகிறார்கள். எங்களைப் போன்றவர்களைக் கண்டால் முதல்வர் ஸ்டாலினுக்குக் கசக்கின்றது. எல்லாருக்கும் ஏற்றங்கள் மட்டுமல்ல; இறக்கங்களும் உண்டு.
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
23-4-2023.
No comments:
Post a Comment