இவர்களின் திராவிட மாடல் இதுதான்…….(1)
—————————————
மின் கட்டணத்தை இரண்டு மடங்கு உயர்த்தியது, பால் விலை உயர்வு, போக்குவரத்து தனியார் மையம் என்று சொல்லிவிட்டு பின் தனியார் பேருந்து தான் ஆனால் அதை நடத்துபவர்கள் அரசு ஊழியர்கள் என்று சமாளித்தது, கவர்ச்சிகரமான அறிவிப்புகள், மது விலக்கு சொல்லியபடி இல்லை.இப்படி பல விடயங்கள்….
எல்லாவித ஊடகங்களையும் ஆட்சி விளம்பரத்திற்கான பிரச்சார வாகனங்களாக மாற்றி வைத்திருப்பது, கடுமையான நிதி நெருக்கடி இருக்கையில் திட்டங்கள் மேல் திட்டம் என பணத்தை வாரி விடுவது, கூட்டணிக் கட்சிகளை மௌனமாக்கி அடையாளமின்றி வைத்திருப்பது...
நேற்று வரை இவர்களை திட்டி இன்று துதி பாடுவோர்க்கு பட்டம் பதவி சௌகரியங்கள் தருவது...
அந்த வகையில் இப்போது வேலை நேரத்தை பன்னிரண்டு மணி நேரம் ஆக்குவதற்கான மசோதாவை நிறைவேற்றி இருப்பது
இங்கிலாந்தில் துவங்கி உலகம் பரவிய தொழில் புரட்சியின் மிகக் கடுமையான எதிர்மறை விளைவுகளில் ஒன்றான உழைப்பு சுரண்டல், எல்லை மீறிப் போகும் போது காரல் மார்க்ஸ் போன்ற அரும் தலைவர்களின் சித்தாந்தங்கள் எளிய மக்களை முதலாளிகளின் உழைப்புச் சுரண்டல்களில் இருந்து மீட்டு நிம்மதியாய் வாழ்வதற்கான வழியை ஏற்படுத்திய சோகமான பக்கங்கள். என்பதை உலகறியும்.
இது எதுவுமே கருத்தில் கொள்ளாமல் இப்படி ஏதேச்சதிகாரம் போல….
எதற்கெடுத்தாலும் முட்டுக் கொடுத்துக் கொண்டு எல்லா அநியாயங்களையும் நியாயப்படுத்துவதற்காக ஊடகங்களை அதற்கான ஸ்டாலின் சுய பிரச்சார மேடைகளாக பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் இருக்கும் வரையில் இங்கு நேர்மையும் நியாயமும் பலியாகுவது தவிர்க்க முடியாததாக தான் இருக்கும்
****
தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வழி வகை செய்யும் தொழிலாளர் சட்டத்தில் திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தோர் வெளிநடப்பு செய்தனர். மதிமுக உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்த்தனர் என்ற செய்தி வெளிவந்துள்ளது.
அங்கே, மதிமுக என சட்டப் பேரவையில் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லையே.. சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் ஆறு தொகுதிகளில் திமுக( ம.தி.மு.க) போட்டியிட்டது. பிறகு அவர்கள் திமுக தான்னே…
#ksrpost
21-4-2023.
No comments:
Post a Comment