Tuesday, May 12, 2026

தமிழக பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் திரு நயினார் நாகேந்திரன்

 தமிழக பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் 

அவர்கள் திரிஷாவை விட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு வந்தால் நல்லது என்று சொன்னதற்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் நயன்தாரா பற்றி பேசியதற்கும் பொங்கிய பெண்ணியப் போராளிகளும் பிறகான இடதுசாரி படைப்பு முற்போக்குவாதிகளும் இது மாதிரியான விஷயங்களில் திமுக விலிருந்து யாராவது தலையிட்டு மேற் சொன்ன மாதிரி பேசி வரும்போது மட்டும் கண்டும் காணாது திமுகவுக்கு முட்டுக் கொடுக்கிறார்களே! ஓ இதுதான் கூட்டணி தர்மமா! குறிப்பாக மீனா கந்தசாமி பற்றி திமுக அமைச்சர் ஒருவரின் அலுவலகத்திலிருந்து பேசிய கருத்துகள் எவ்வளவு பிற்போக்கான பெண்ணிய விமர்சனம்! அதை மேற் சொன்ன யாராவது எதிர்த்துப் பேசி போராடாமல் மௌனம் காத்து வருவதன் ரகசியம் என்ன? அதேபோல் #விளாத்திகுளம் கனிமொழி அவர்களது தொகுதி தானே! அங்கு நடந்த இளம்பெண் வன்முறைக்கு சாத்தான்குளம் போல உடனே சென்று நடவடிக்கை எடுக்கும்வகையில் அவர்தானே ஆஜராகி இருக்க வேண்டும்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மதுர் சத்யா மீது பாலியல் புகார் எழுந்ததைத் தொடர்ந்து துவகத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை… இப்படி பல சம்பவங்கள்…. தொடர்ந்து தமிழ்நாடு முழுக்க பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் நடந்த வண்ணமே இருக்கின்றன! எதிர்க்கட்சியில் யாராவது ஒரு வார்த்தை தவறாகப் பேசி விட்டால் பொங்கி எழும் இந்த பெண்ணியப் போராளிகளும் இடதுசாரி முற்போக்காளர்களும் திமுகவில் நடக்கக்கூடிய காவல் நிலைய மரணங்கள் பெண்கள் மீதான தொடர்ந்த பாலியல் வன்முறைகளுக்கு மட்டும் ஏன் அமைதி காக்கிறார்கள். திமுக என்று வருகிற போது மட்டும் இவர்கள் மௌனித்துக் கொள்வார்கள் என்றால் இவர்களிடம் என்ன நியாயம் இருக்கிறது? எல்லாரும் விலை போய் விட்ட காலம்! எப்படியாவது ஓட்டுக்கு பணம் கொடுத்து வாங்கி விடலாம் என தைரியம் திமுகவுக்கும் அதன தோழமைகளுக்கு… #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost 19-3-2026,
Quote
Dr Meena Kandasamy மீனா கந்தசாமி
@meenakandasamy
Writer Meena Kandasamy calls out DMK supporters’ abuse in emotional plea to MK Stalin. She recounted crying herself to sleep after character assassination, wondering why she has “no father big enough to fight for me.” thesouthfirst.com/tamilnadu/writ

No comments:

Post a Comment

Mar 22