Tuesday, May 12, 2026
#ஸ்டாலினின் #தங்கச்சி
#கனிமொழிதொகுதி
#விளாத்திகுளத்தில் ஒரு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. பெற்றோர் அளித்த புகாரின்பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அந்த மாணவியின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. காவல் துறையின் அலட்சியத்தால் மேலும் ஒரு உயிர் பறிபோயிருப்பது திராவிட மாடல் திமுக அரசின் நிர்வாக அலங்கோலத்தை காட்டுகிறது. தொடர்ந்து ஐந்து வருடங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு காரணம் திமுக வின் ஆட்சி தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் யாருக்கும் இருக்க முடியாது.
சமூக அவலங்களை தடுக்க முடியாது போனதற்கு காரணம், அதிகரித்த மது அருந்தும் பழக்கமும், போதை பொருட்களின் புழக்கமும் தான் என்பது கண்கூடு. குற்றங்களை செய்தவர்களை கண்டுபிடிப்பதாக மார்தட்டிக்கொள்ளும் திமுக அரசு குற்றங்களை தடுக்க முடியாமல் செயலிழந்து கிடக்கிறது. தன்னை எல்லோரும் ‘அப்பா’ என்கிறார்கள் என்று பெருமிதப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த கொடூர சம்பவத்திற்கு தன் அரசின் அலட்சிய போக்கும், அரசின் நிர்வாகமின்மையும் தான் காரணம் என்பதை ஒப்புக்கொண்டு முழு பொறுப்பேற்று, திறனற்ற, வக்கற்ற ஆட்சியை நடத்தி வந்ததற்காக வருந்தி, தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு உடனடியாக முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும். கனிமொழி அவர்களே வெற்று
சமாதானம் அறிக்கை வேண்டாம். அவர்களே வீடு தேடி சென்று இதை பெரும் அரசியல் dramaவாக மாற்றி விடாதீர்கள். பதவியை ராஜினாமா செய்து நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள்...
#DMKDestroyedTN
Subscribe to:
Post Comments (Atom)
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment