ம தி மு க சரிதம்!!
————————— முதன்முறையாக 1996 இல் சட்டமன்றத்திற்கும் நடாளுமன்றத்திற்கும் மதிமுக சிபிஎம் ஜனதா கட்சி கூட்டணியாக நின்று போட்டியிட்டது. சட்டமன்றத்தில் 177 தொகுதியில் போட்டியிட்டு நான்கே நான்கு இடத்தில் தான் டெபாசிட் வாங்கியது. ஒன்று விளாத்திகுளத்தில் வைகோ கோவில்பட்டியில் அடியேன் சங்கரன்கோவிலில் தங்கவேலு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் பாலசுப்பிரமணியம் (முன்னாள் சட்டமன்றத் துணைச் சபாநாயகர்). அன்றைய நாளில் மொத்தம் 178 தொகுதியில் போட்டியிடடோம்! அதற்கு பிறகு 2001 இல் திமுக கூட்டணியுடன் சட்டமன்ற தேர்தலில் மதிமுகவிற்கு 21 சீட்டு உறுதியான நிலையில் அதுவும் கலைஞர் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு வைகோவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட நிலையில் திடீரென்று வைகோ அந்த கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறினார். இதை பெரிய மனசாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என கலைஞர் சொன்ன பிறகும் தான் வெற்றி வேண்டும் என்ற நிலை இல்லாமல் திமுக தோற்க வேண்டும் நோக்கத்தில் 211 தொகுதியில் தனியாக நின்று ஒற்றைப்படை இரட்டைப்படை ஓட்டுகளைத் தான் மதிமுக வாங்கியது. பிறகு மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி ஜெயலலிதாவிடம் தன் விசுவாசத்தை காட்டி திமுகவின் ஓட்டை பிரித்து அதிமுகவை வெற்றி பெறச் செய்தார். தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கெல்லாம் அவரின் அரசியல் தலைமைக்கு என உழைத்தவர்களுக்கெல்லாம் பொருட்டாக நினைக்காமல் தெருவில் விட்டார் இன்றைக்கு 2026 தேர்தலுக்கான திமுக கூட்டணியில் ஒரு சீட்டு ( கிடைக்கும் )உங்களின் சின்னம் , மூன்று சீட்டு திமுகவின் உதய சூரியன் சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என்று கூட்டணியில் ஒப்பந்த ஆகி உள்ளது . இந்த நிலைமை யாரால் வந்தது அவரால் (வைகோ)தானே வந்தது.! மிகச்சிறந்த பார்லிமென்டேரியன் மிகச் சிறந்த பேச்சாளர் மிகச்சிறந்த தலைமை தாங்கும் பண்புள்ளவர் எங்கே தவறினார்? அன்றைய நாளில் வைகோவிற்கு என்ன விதமான குண மாறுபாடுகள் ஏற்பட்டது என்று எனக்குச் சொல்ல தெரியவில்லை. என்றாலும் எங்களை போன்றவர்களை அவர் நிராகரித்ததனுடைய விளைவைத்தான் இப்போது அவர் சந்திக்கிறார். அவருக்கு உழைத்த எங்களுக்கும் சுயமரியாதை என்று ஒன்று இருக்கிறது அல்லவா? ஆகவேதான் நடப்பதை வேடிக்கை பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.வைகோ இன்று முற்றிலும் வீணாகி ஏதோ ஒரு நிலையில் நிற்கின்றார். யோசித்துப் பார்த்தோமேயானால் அவருக்கு பிறகு வந்த விஜயகாந்த் மிகச்சிறப்பான முறையில் எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்தில் அமர்ந்தார். இன்றைக்கு அவர்களுக்கு கூட ஒரு ராஜ்யசபா சீட் கூட்டணியில் உறுதியாகி இருக்கிறது. வரலாறு எப்படித் திரும்புகிறது என்று பாருங்கள்!! இன்றைக்கு சீமான் நடிகர் விஜய் போன்றவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து விட்டார்கள். 2001 இல் வைகோ தன்னுடைய கேரியரில் நான் வாதாடிய படி மிகச்சிறந்த ஒரு அரசியல் முடிவை எடுத்திருந்தால் அவருக்கு இந்த நிலைமை வந்திருக்குமா? எத்தனை பெரிய ஆதரவு! எத்தனை பெரிய கூட்டம்! வைகோ திமுகவை விட்டு வெளியே வந்த போது மிகப்பெரிய மாற்று அரசியல் உருவாகப் போகிறது என்று தமிழகம் முழுக்க எதிர்பார்த்த ஒன்றை வைகோ எப்படி சீர்குலைத்தார். எப்படித் தன் தலையில் மண்ணள்ளிப் போட்டுக் கொண்டார். தமிழ்நாட்டின் அரசியலில் நேர்மையானவர் , தூய்மையானவர் வைகோ என்ற பிம்பம் உருவானது. அனைத்து அரசியல் கட்சிகளோடும் உடன்பாடு, கூட்டணி என்று வசதிக்கேற்ப வைத்துக் கொண்டு கட்சியை கரைத்து விட்டார். தி.மு.க.,வாரிசு அரசியல் செய்கிறது என்று குற்றம் சாட்டி வெளியேறியவர் தன் மகனையே வாரிசாக அடையாளப்படுத்தி தில்லிக் கோட்டைக்கும் அனுப்பி வைத்ததன் பின்னர் இவரிடம் அரசியல் நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்? வெற்று ஆரவாரமும் அடுத்தவர்களுக்குப் பல்லக்குத் தூக்கிக் கொண்டு அலைவதை விட கட்சியைக் கலைத்து விடுவது வைகோ அவர்களுக்கு நல்லது. இதுதான்மதிமுக சரிதம்! #மதிமுக #mdmk #vaiko #வைகோ #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment