‘மணிமாலை’ என்னும் மாத இதழை வெளியிட்டார். அதில், தமிழ், சமயம், அறிவியல், மருத்துவம், கலை போன்ற ஒன்பது வகைகளில் இவரே பல கட்டுரைகளை எழுதினார். தமிழ், இலக்கியம், வரலாறு, சமயம் முதலியவற்றை வெளிப்படுத்தும் வண்ணம் கா.சு.பிள்ளையின் எழுத்துக்கள் இருந்தன. தமிழர் என்பவர் எவர் என்பதற்கு, “தமிழைத் தாய்மொழியாக உடையவர்; தமிழ்நாட்டில் பிறந்தும் தமிழைத் தாய்மொழி எனக் கருதாதவர் தமிழர் ஆகார். தமிழ்நாட்டில் பிறவாதிருந்தும் தமிழைத் தாய்மொழி போல் போற்றுபவரைத் தமிழர் என்பது இழுக்காகாது. தமிழ் நாகரிகத்தை உயர்ந்தது எனக் கருதுபவரும் தமிழர்” என வரைமுறை செய்துள்ளார் கா.சு.பிள்ளை.
கா.சு.பிள்ளையின் நூல்கள்! ‘அறிவு விளக்க வாசகம்’, ‘திருஞானசம்பந்தர் தேவார இயற்கைப் பொருளழகு’, ‘இறையனார் அகப்பொருள்’, ‘பழந்தமிழர் நாகரிகம்’, ‘மொழிநூல் கொள்கையும் தமிழ் மொழியமைப்பும்’ போன்ற நூல்கள் இவருடைய ஆராய்ச்சித் திறன் மிக்கவை. ஒவ்வொரு தமிழனும் மகிழத்தக்க வகையில், ‘உலக நன்மையே ஒருவன் வாழ்வு’ என்கிற ஒரு சிறிய நூலை எழுதினார். சமுதாய நலன் சார்ந்த ‘தமிழர் சமயம்’! ‘தமிழர் சமயம்’ என்ற நூலில் இடம்பெற்றுள்ள கருத்துகள் புரட்சியும் தெளிவும் பெற்று விளங்குகிறது. அதில், “தமிழர் சமயம் நிலைபெற வேண்டுமாயின் தமிழ்மொழி பேணப்பட வேண்டும்; தமிழ்மொழி நன்கு பேணப்படுவதற்கு அதனைத் தாய்மொழியாக உடைய தமிழர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும். தமிழர்களின் பொருளாதார நிலை சிறப்படைய வேண்டும். அது சிறப்பதற்குத் தமிழ் அருட்செல்வர்களாய் இருப்பவர்களும், சொல்லாற்றல் உடையவர்களும் சமுதாயத்தில் உள்ள ஏழை மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் வருந்தாதபடி, அவரவர்க்கு உரிய தொழிலும் உணவும் அளித்தற்கேற்ப வாயில்களை வகுக்க வேண்டும்” என சமுதாய நலன் சார்ந்த கருத்தை எடுத்தியம்பியுள்ளார். சென்னை மாகாண தமிழ்ச் சங்கத் தலைவராக கா.சு.பிள்ளை இருந்தபோதுதான் தனித்தமிழ் வித்வான் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது. தாய்மொழிக்கு முக்கியத்துவம்! “காலப்போக்கில் தமிழைப் புதிய கலைக்கண் கொண்டு ஆராயவில்லை என்றால், உலகில் தமிழனுக்கு இடமே இல்லாமல் போய்விடும். இந்தப் புதிய முறையில் ஆராய்ந்தால்தான், நமது பழைய இலக்கண ஆசிரியர்களுடைய பெருமையும், அறிவின் நுட்பமும் புலப்படும்” என்னும் மொழியியல் சிந்தனையுடன் விளங்கிய கா.சு.பிள்ளை, “தமிழ், புதிய படைப்புச் சிந்தனைகளுக்கு வடிகாலாய் அமைய வல்ல சொல்லமைப்பும் சொல்லாக்க வளமும் உடையது” என்பதை தமது ஆய்வின் மூலம் உணர்த்தினார். திருநெல்வேலியில் சைவ சித்தாந்த சங்கம் ஒன்றை நிறுவி அதன் தலைவராக இருந்தார். இவருடைய நாற்பெருங்குரவர்களின் வரலாற்று ஆராய்ச்சி நூல்கள் இந்தச் சங்கம் மூலம் வெளிவந்தன. நெல்லையப்பர் கோயிலில் தர்மகர்த்தாவாக இருந்து இறைப் பணிகள் செய்தார். ‘சைவ சித்தாந்தத்தின் இயற்கைத் தத்துவம்’, ‘இந்து சமயங்களின் சுருக்க வரலாறு’ போன்ற நூல்களை ஆங்கிலத்தில் எழுதினார். கா.சுப்பிரமணிய பிள்ளை நினைவாக, திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரம் அருகே உள்ள நகர்மன்ற பூங்காவில் 13.10.1947-ல் நடுகல் நாட்டப்பட்டது. தற்போது இந்த நடுகல் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பூங்காவில் காந்தி சிலைக்கு அருகே அமைந்துள்ளது. கா.சு.பிள்ளையின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் பல்வேறு அமைப்புகள் இந்த நடுகல்லுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றன. இப்பெருமகனாரின் நினைவாகத் திராவிட இயக்கத் தலைவர்களுள் ஒருவரான மீ.சு.இளமுருகு பொற்செல்வி கரூர் மாவட்டம், குளித்தலையில் கா.சு.(பிள்ளை) நினைவு இலக்கியக் குழு ஒன்றை அமைத்துப் பெருமைப் படுத்தியிருக்கிறார். கலப்புத் திருமணம்; கைம்பெண் மறுமணம்; ஆண்களைப்போலவே பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை; தமிழ்நாட்டில் தமிழ்மொழி ஒன்றே கட்டாயப் பயிற்றுமொழி; தமிழிலேயே கடவுள் வழிபாடு; தமிழிலேயே சமயச் சடங்குகள் போன்றவற்றை வலியுறுத்தினார். கோயில்களிலும் மடங்களிலும் முடங்கிக் கிடக்கும் பொருட்களை ஏழைகளின் கல்வி நலனுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். ‘பல்கலைப் புலவர்’, ‘பைந்தமிழ்க் காசு’ எனப் புகழ்ப்பெற்ற கா.சு.பிள்ளை, தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே தொண்டாற்றினார். தமிழின் கருவூலமாகவும், சைவத்தின் திருவுருவமாகவும் விளங்கிய கா.சு.பிள்ளை 1945-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி மறைந்தார். #காசுபிள்ளை தமிழ்த் தொண்டு தமிழ் மொழி உள்ளவரை என்றும் மறையாது!
Subscribe to:
Post Comments (Atom)
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment