#வெம்பைக்கோட்டைஅகழாய்வில்….. #தமிழகஅகழாய்வுகள்
#tamilnaduarchaeology நான் ஏற்கனவே சொல்லி வந்தது போல வைப்பாறு மற்றும் தமிழ்நாடு முழுக்க அகழாய்வுகளை வரும் காலத்தில் முறைப்படுத்த வேண்டும் என்பதற்கு ஏற்ப சமீபமாக விருதுநகர் மாவட்டம் #விஜயகரிசல்குளத்தில் தொல்லியல் துறை சார்பில் மூன்று கட்டங்களாக நடந்த அகழாய்வில் சுடுமண் முத்திரைகள் கண்ணாடி மணிகள் எனப் பல்வேறு அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.! அவற்றைத் தரம் வாரியாகப் பிரிக்கும் பணியும் நடந்து வருகிறது. அப்போது “தர்பீடோ” என்னும் குடுவை வடிவப் பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டதாகச் செய்திகள் வருகின்றன. இந்த ஓடுகள் ரோமானிய மத்திய கிழக்குப் பகுதியில் இருந்து ஆலிவ் எண்ணெய் ஒயின் போன்ற திரவப் பொருட்களைக் கொண்டு வர பயன்படுத்தப்பட்டது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். திரை கடல் ஓடியும் திரவியம் தேடிய பண்டைய தமிழ் நில வாணிபங்கள் குறித்த வரலாற்றுக்கு மற்றும் ஒரு சான்றாக கிடைத்திருக்கும் இந்த அரிய குடுவைகள் வைப்பாறு நதிக்கரை சார்ந்த பகுதிகளில் செழித்திருந்த தமிழரின் பண்பாட்டு வாணிபத் தொடர்புகளை உறுதி செய்கின்றன. இப்படியான பன்னாட்டு வாணிபங்களில் இதன் மேற்கே திருவேங்கடம் வரையில் இருந்தவர்கள் பாய்மரக்கப்பல்களில் சென்று கிழக்கு ஆசிய நாடுகளில் குடியேறி வணிகம் செய்து இருக்கிறார்கள் என்பதற்கான பல ஆவணங்களும் கிடைப்பதற்கு உரிய பகுதியாகவும் தூத்துக்குடி வரையிலும் கூட இத்தகைய அகழாய்வுகளுக்கு வாய்ப்பு இருக்கிறது. ••• அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலையில் மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது! அதில் தமிழகத்தில் அகழாய்வு செய்வதற்கு உகந்த காலமான ஜனவரி முதல் ஜூலை வரை க்குள் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது!! மத்தியத் தொழில் துறை ஆலோசனை வாரியம் ஆன “காபா” வின் ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்துக் கடந்தாண்டே விவாதிக்கப்பட்டதாகச் செய்திகள் சொல்லுகின்றன!! அப்படியான நிலையிலும் கடந்த ஜனவரியிலும் அகழாய்வுக்கான அனுமதி கிடைக்காமல் இருந்தது!! ஏற்கனவே மத்தியத் தொல்லியல் துறையால் தமிழகத்தில் அகழாய்வு செய்யப்பட்ட ஆதிச்சநல்லூர் கீழடி வடக்குப் பட்டு உள்ளிட்ட இடங்களில் அறிக்கை வெளியிடப்படாத நிலையில் அகழாய்விற்கான அனுமதி கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டது!! அதனால் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் அகழாய்வு செய்வதற்கான அனுமதியை மத்திய தொல்லியல் துறை இயக்குனர் ஹேமசாகர் நாயக் வழங்கி உள்ளார்!! அதில் கூறப்பட்டுள்ளதாவது! தொல்லியல் துறை நிபுணர் குழு பரிந்துரையின்படி சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதன் தொகுப்புகள் தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூர் தென்காசி மாவட்டம் கரிவலம் வந்த நல்லூர் கடலூர் மாவட்டம் மணிக்கொல்லை விழுப்புரம் மாவட்டம் ஆதிச்சனூர் கோவை மாவட்டம் வெள்ளலூர் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.!அதே சமயம் அந்தந்த இடங்களில் அகழாய்வுகள் அந்தந்த அகழாய்வு இயக்குனர்களின் தலைமையில் தான் நடத்தப்பட வேண்டும்!. அகழாய்வில் கண்டெடுக்கப்படும் பொருள் மற்றும் முக்கியக் கலைப் பொருட்கள் பட்டியலை டெல்லியில் உள்ள மத்தியத் தொல்லியல் துறையின் இயக்குனரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பது மகிழ்ச்சியான ஒரு விஷயம். எது எடுத்தாலும் மத்திய அரசு நிதி உதவி தருவதில்லை என்று பொய்ப் பிரச்சாரம் செய்து கொண்டு வரும் திமுக போன்ற கட்சிகளை விட மத்திய அரசு மற்றும் தொல்லியல் துறைக்கு தமிழகத்தின் அகழாய்வுகள் மீது இருக்கும் கரிசினத்தையே இம்மாதிரி அனுமதிகள் காட்டுகின்றன.. மதிய தொழில் துறை இயக்குனருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்!! ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் - ஆண்டு 1876 ஆனைமலை,கோயமுத்தூர் மாவட்டம், ஆண்டு, 1969 கோவலன் பொட்டல்,மதுரை மாவட்டம், 1980 திருத்தங்கல்,விருதுநகர் மாவட்டம், 1994 – 1995 தேரிருவேலி இராமநாதபுரம் மாவட்டம், 1999 – 2000 கொடுமணல் தொல்லியற் களம், , ஈரோடு மாவட்டம், 1992-1993, 1996–1997 & 1997-1998 மாங்குடி, திருநெல்வேலி மாவட்டம், 2001 – 2002 வசவசமுத்திரம் தொல்லியல் களம்,காஞ்சிபுரம் மாவட்டம், 1969 – 1970 கரூர்,கரூர் மாவட்டம், 1973 – 1979 & 1994 – 1995 அழகன்குளம் தொல்லியல் களம், இராமநாதபுரம் மாவட்டம், 1986-1987, 1990–1991, 1992-1993, 1994-1995, 1996–1997 & 1997- 1998 கொற்கை அகழாய்வுகள் , தூத்துக்குடி மாவட்டம், 1968 – 1969 தொண்டி , இராமநாதபுரம் மாவட்டம், 1980 பல்லவமேடு தொல்லியல் களம் , காஞ்சிபுரம் மாவட்டம், 1970 – 1971 போளுவம்பட்டி தொல்லியல் களம் , கோயம்புத்தூர் மாவட்டம், 1979 – 1980 & 1980 – 1981 பனையகுளம்,, தருமபுரி மாவட்டம், 1979 – 1980பூம்புகார், நாகப்பட்டினம், 1994 – 1995 & 1997 – 1998
திருக்கோவிலூர் , விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம், 1992 – 1993
மாளிகைமேடு, கடலூர் மாவட்டம், 1999 – 2000
பேரூர், கோயம்புத்தூர் மாவட்டம், 2001 –2002
குரும்பன்மேடு, தஞ்சாவூர் மாவட்டம் 1984
கங்கைகொண்ட சோழபுரம, அரியலூர் மாவட்டம், 1980 – 1981 & 1986 – 1987
கண்ணனுர் , துறையூர் ஊராட்சி ஒன்றியம்[திருச்சிராப்பள்ளி மாவட்டம், 1982 – 1983
பழையாறை , தஞ்சாவூர் மாவட்டம், 1984
பாஞ்சாலங்குறிச்சி, தூத்துக்குடி மாவட்டம், 1968 - 1969
சேந்தமங்கலம்,கள்ளக்குறிச்சி மாவட்டம் 1992 – 1993 & 1994 – 1995
படவேடு,திருவண்ணாமலை மாவட்டம், 1992 – 1993
ஆண்டிப்பட்டி, திருவண்ணாமலை மாவட்டம், 2004-2005
மோதூர், தருமபுரி மாவட்டம்,
மரக்காணம், விழுப்புரம் மாவட்டம், 2005-2006
பரிகுளம், திருவள்ளூர் மாவட்டம், 2005-2006
நெடுங்கூர் ,கரூர் மாவட்டம், 2006-2007
மாங்குளம்,மதுரை மாவட்டம், 2006-2007
செம்பிகண்டியூர்,நாகப்பட்டினம் மாவட்டம், 2007-2008.
தரங்கம்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம்
கீழடி அகழாய்வு மையம் -சிவகங்கை மாவட்டம் 2015 - 2019
மயிலாடும்பாறை தொல்லியல் களம் - கிருஷ்ணகிரி மாவட்டம் 2022 -
துலுக்கர்பட்டி தொல்லியல் களம் - திருநெல்வேலி மாவட்டம் 2022 -
வெம்பக்கோட்டை தொல்லியல் களம் - விருதுநகர் மாவட்டம்
பெரும்பாலை தொல்லியல் களம் - தருமபுரி மாவட்டம் - அகழாய்வுப் பணிகள் துவக்கப்படவில்லை
#tamilnaduarchaeology
#ksradhakrishnanlatest
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
18-3-2026
No comments:
Post a Comment