Friday, August 31, 2018

சில நேரங்களில் ஏற்படும் ரௌத்திரங்கள்......

சில நேரங்களில் ஏற்படும் ரௌத்திரங்கள்......
---------------------
It will never matter what others think of you,
It will always matter what you think of welfare state.

It will never matter what position you reached,
It will always matter what you served to nation.
---------
கடந்த வாரம் சேலம், இராசிபுரம், புதுச்சேரி ஆகிய இடங்களில் நடந்த திருமணங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. இராசிபுரம் திருமணத்தில் தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளரும் என்மீது பாசம் கொண்ட எனது நெருங்கிய நண்பரான துக்ளக் ரமேஷ், இந்த தடவை தேர்தலில் போட்டியிட எப்படியாவது சீட்டு வாங்கிவிடுங்கள் என்று அழுத்தம் திருத்தமாக இரண்டு, மூன்று முறை திரும்ப திரும்ப சொன்னார். நான் அவரிடம் சொன்னேன், சமீப காலங்களில் மருத்துவக் கல்லூரியில் சேர கேப்பிடேசன் பீஸ் கட்டி சீட் வாங்குவது போல் சொல்கிறீர்கள். அதில் எனக்கு ஆர்வமுமில்லை, அக்கறையுமில்லை என்று பதிலுரைத்தேன்.

அதற்கடுத்த நாள் கல்கிப் பிரியன் என்னிடம், மனிதன் புத்திசாலியா, முட்டாளா என்பது முக்கியமல்ல. அவன் பதவியில் இருக்கிறானா என்பது தான் முக்கியம் என்றதும், சற்று ஆத்திரத்துடன், என்ன பிரியன் பேசறீங்க என்றேன். அவர் என் மீது பாசத்துடன் தான் எப்போதும் இருப்பார். அவர் பொதுவாக சொல்லும் போது அந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தது.
புதுச்சேரி திருமணத்தில் ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரை பார்த்தபோது, நீங்கள் எம்.பியாக இருந்தீர்களா? எம்.எல்.ஏவாக இருந்தீர்களா? என்று கேட்டார். இல்லை என்றேன். திரும்பவும், ஒரு பதவியிலும் நீங்கள் இல்லையா? என்றார். இல்லை என்றேன். 1980, 90களில் போட்டியிட்ட தேர்தல்களில் சொற்ப ஓட்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். 1989 தேர்தலிலும் எனக்கு எதிரான சில சக்திகள், அமைச்சராகி விடுவானோ என்று தோற்கடிக்கவும் சில வேலைகளை செய்தனர். 1998இல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடமளிக்கப்பட்டு பின்னர் அது தடுக்கப்பட்டது.

இப்படியான நிலையில் நீங்கள் சொன்ன பதவிகளுக்கு என்னால் வரமுடியவில்லை. அதுதான் பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு தகுதி என்றால் அது வெற்றுப் பாசாங்குத்தனமாகும். இன்றும் அரசியலில் பல முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் உள்ளனர்.

எனது வட்டாரத்தில் எஸ்.என்.இராஜேந்திரன், ஒய்.எஸ்.எம்.யூசுப், நேற்று மறைந்த கடையநல்லூர் நாகூர் மீரான் போன்ற சில அமைச்சர்கள் இருந்தனர். அவர்களை பற்றி இன்றைக்கு யாருக்கும் நினைவில் இல்லை. பதவிகள் வரும், பதவிகள் போகும் என்று சற்று காட்டமுடன் சொன்னேன். பதவிகள் நிரந்தரமல்ல. கடமைகள் தான் ஒருவனை நித்யனாக்குகின்றது. என்னை யாராவது சந்திக்கும்போது, உங்களுக்கான பதவிகள் வரவில்லையே என்று அரசியலில் மூத்த தலைவர்களாக இருந்த சங்கரைய்யா, நல்லகண்ணு, நெடுமாறன், மறைந்த இரா. செழியன் போன்றவர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எனப் பல முக்கிய நண்பர்கள் அக்கறையோடு கேட்பதே பெருமையாக கருதுகிறேன். பதவியில் இருப்போருக்கும், இருந்தவர்களுக்கும் இந்த மாதிரி அக்கறையான, விசாரிப்புகள் இருக்குமா என்பது கேள்விக்குறி தான். இந்தளவு மரியாதை இருக்கும் போது, அதைவிடவா பதவிகள் முக்கியம்.
கடந்த 1972லிருந்து பெருந்தலைவர் காமராஜர், கலைஞர், எம்.ஜி.ஆர், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் என அனைவரோடும் அறிமுகமும் பழக்கமும் இருந்தது. பெருந்தலைவர் என்னை கோவில்பட்டி தம்பி என்று அன்புடன் அழைப்பார், கலைஞர் ராதா என்று வாஞ்சையோடு அழைப்பார், எம்.ஜி.ஆர்., வக்கீல் சார் என்று உரிமையோடு அழைப்பார், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ராதாண்ணே என்று அழைப்பார். எனக்கு இதைவிட வேறென்ன வேண்டும் என்றேன்.

இந்த அரசியலில் 49 வருட காலத்தில் விவசாயிகள், விவசாயிகளுடைய ஜப்தி, கடன் நிவாரணம், கங்கை - காவிரியை குமரி மாவட்ட நெய்யாறோடு இணைப்பு, நதிகளை தேசிய மயமாக்கப்பட வேண்டும், நீர் நிலைகள் பாதுகாப்பு, நதிநீர் பிரச்சனைகள். சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் கூடங்குளம், ஆலங்குளம் சிமெண்ட் ஆலை பிரச்சனைகள் குறித்தும், மனித உரிமைகள் குறித்தும். தேர்தல் மூலமாக ஊழல் ஒழிப்பு, போக்குவரத்து நெரிசல், கண்ணகி கோட்டம் பிரச்சனை, தமிழகத்தில் மேலவை அமைய வேண்டுமென முக்கியமாக தமிழக பொதுநலம் குறித்த பல வழக்குகளை இந்த எளியவனால் தொடுக்க மட்டுமே முடிந்தது. இதுவரை தமிழக பிரச்சனைகள் குறித்து 15 முக்கியமான நூல்களை எழுதியுள்ளேன். என்னுடைய கட்டுரைகள் அனைத்து நாளிதழ்களிலும் 40 ஆண்டுகாலமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

ஐ. நா., மன்றத்தில் 1993ல் கௌரவமான வேலை கிடைத்தது. எனக்கு கீழ் வழக்கறிஞர் தொழிலில் ஜுனியர்களாக இருந்தவர்கள், என்னுடைய தேர்தல் பணிகள் ஆற்றியவர்கள் எல்லாம் உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இருக்கின்றார்கள். என்னுடைய உதவியாளர்களாக இருந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு எம்.பி, எம்.எல்.ஏக்களாகவும் ஆகிவிட்டனர்.

இதையும் கடந்து மனத் தெம்போடு என்னால் இயன்ற பணிகளை செய்தும், கவனித்தும் வருகின்றேன். பதவியில் இதுவரை வகித்தவர்கள் எல்லாம் எத்தனை பேருக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் தெரியும். அவர்களை விட எந்தவிதத்திலும் என்னுடைய தகுதி குறையவும் இல்லை, பதவியால் தான் ஒருவர் பொது வாழ்வில் அங்கீகரிக்கப்படுவார் எனில் அப்படிப்பட்ட அங்கீகாரத்தை நான் பொருட்படுத்துவதும் இல்லை.

நாடாளுமன்றத்திற்கு தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எத்தனை பேர் அவைகளில் போர்குணத்தோடு தமிழக பிரச்சனைகளை பேசியுள்ளார்கள் என்று சொல்லமுடியுமா? பொம்மைகள் போல டெல்லிக்கு செல்கிறார்கள், பதவி பவுசுகளை அனுபவித்து வருகிறார்கள். நாட்டின் முக்கிய பிரச்சனைகளை குறித்து புரிதலும் கிடையாது, அதைகுறித்து பேசுவதும் கிடையாது. நாடாளுமன்ற இடங்களை உட்கார்ந்து இடத்தை தேய்த்துவிட்டு எழுந்துவிட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட நபர்களைத் தான் தகுதியே தடை என்ற நிலையில் மக்கள் தேர்ந்தெடுக்கின்றார்கள். இதற்கு நாம் என்ன செய்ய முடியும்.

அவர்களை விட நான் ஆற்றிய பணிகளும், கடமைகளும் மகத்தானது என கம்பீரத்தோடும், மிடுக்கோடும் இவ்வாறு கேட்ட நண்பரிடம் பதில் கூறினேன். தற்போதைய சந்தை ஜனநாயகத்திலும், வியாபார அரசியலிலும் யார் வேண்டுமானலும் எம்.பி., ஆகலாம். ஆனால், அவர்களிடம் தமிழக பிரச்சனைகளை குறித்து கேட்டால் சொல்லத் தெரியாமல் தடுமாறுவார்கள். இப்படியான ஞானசூனியங்கள் தான் மக்கள் விரும்புகிறார்கள் என்றால் அப்படிப்பட்ட பொறுப்புக்கு வரவேண்டிய அவசியமும், விருப்பமும் நிச்சயமாக எனக்கு கிடையாது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
31-08-2018

கற்பனையான முடிவு, கருத்து பிம்பம், மனத்தோற்றம்,போலி, பாசாங்கு

கற்பனையான முடிவு, கருத்து பிம்பம், மனத்தோற்றம்,போலி, பாசாங்குஆகியவை எண்ணங்களின் வடிவமைப்பாகவே இருக்கின்றன. இவை
காட்சி பிழைகளா? இட மாறு தோற்ற
பிழைகளா?

நான் ஒரு முடிவை வைத்துக்கொள்கிறேன் எனில்; ஒரு கருத்து, பிம்பத்தின்படி செயல்படுகிறேன் எனில்; என் உள்ளத்தெளிவினை, உள்ளபடி புரிந்துகொள்ளுதலை நானே தடுத்துக்கொள்கிறேன் என்றாகிவிடும்.

ஆக, எண்ணங்கள் ஏன் குறிக்கிடுக்கின்றன, ஓர் அனுபவத்தின்போது, முடிவை நாம் ஏன் வைத்துக்கொள்கிறோம் என்பதை குறித்து மெய்பொருளை நாம் அறிய வேண்டும்.

#வாழ்வியல்
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
31-08-2018.

(taken from darjeeling tourist lodge with 200mm lens)


Thursday, August 30, 2018

*மாதத் தவணையில் எப்படியாவது பெரிய கார் வாங்கி உலா வரலாம் என்று நினைப்பவர்களின் பார்வைக்கு....

*மாதத் தவணையில் எப்படியாவது பெரிய கார் வாங்கி உலா வரலாம் என்று நினைப்பவர்களின் பார்வைக்கு....*
-------------------------------------

இந்த படத்தில் உள்ள மிதிவண்டியும், அதனுடைய காட்சிகளும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்ட நிழற்படம். வெளிநாடுகளுக்கு சென்றால் அந்த நாட்டிலுள்ள முக்கியப் பல்கலைக்கழகங்களுக்கு செல்வது வாடிக்கை. ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், யேல், மெல்போர்ன் போன்ற பல்கலைக்கழகங்களில் யாரும் அதிகமாக நாம் பயன்படுத்துகின்ற இருசக்கர மோட்டார் வாகனங்களையோ, கார்களையோ அதிகம் பயன்படுத்துவதில்லை. அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களே அமைதியாக மிதிவண்டியில் வருவதை தான் விரும்புகிறார்கள். மிதிவண்டியில் வருவது உடம்புக்கும் நல்லது, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லை. கடுமையான ஏர்காரன் ஒலி காதுகளைத் துளைக்காது. இப்படித்தான் வெளிநாட்டவர்கள் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் சைக்கிளில் பயணிப்பதை விரும்புகின்றனர். 

ஆனால் நம் நாட்டில் ஒருவர் மட்டும் பயணிக்க 7 அடிக்கு ஒரு பெரிய காரையும், அதையும் மாதத்தவணையில் கடனில் வாங்கி, கேட்டாலே ரணத்தை தரும் ஏர்காரனை அடித்துக் கொண்டு போவது தான் செல்வாக்கு, ஆளுமை என்று நம்மிடம் போலியான போக்கு பரவியுள்ளது. எளிமையே அழகு என்பதை நாம் கவனிக்கத் தவறுகிறோம். இந்த காட்சியை பார்க்கையிலே அமைதியான ஒரு அழகு இருக்கிறது. இந்த மிதிவண்டியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தேர்வு கண்காணிப்பாளர் (COE) பயன்படுத்துகிறார். நம் நாட்டில் இத்தகைய பொறுப்பில் உள்ளவர்கள் பெரிய இன்னோவா காரில் ஆர்ப்பாட்டமாக வந்து இறங்குவார். 

ஏனெனில் நாம் போலிகளையும், பாசாங்குகளையும் கொண்டாடுகிறோம். அதை கொண்டே நம்மை நாம் ஏமாற்றிக் கொள்கிறோம்.

#ஆக்ஸ்போர்டு_பல்கலைக்கழகம்
#Oxford_University
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30-08-2018


விதைகள்,வேர்களை;அடிக்கற்களை அறிவார் யாரோ...



————————————————-

வளர்ந்து விரிந்த விருட்சத்துக்கு மூலமான அளவில் சிறிய விதையின் கீர்த்தி,அதை தாங்கி பிடிக்கும் வேர்களை யாருக்கும் தெரிவதில்லை. அது போலவே, வானுயர்ந்த கட்டிடங்களைத் தாங்கி நிற்கும் அடிக்கற்களும் கண்ணில்படுவதில்லை.
மகத்தான சாதனைகளை செய்த ஒருவரை பாராட்டுவார்கள். அந்த சாதனையை சாதித்தவர் என்று கொண்டாடுவார்கள். ஆனால் அந்த சாதனையை முடித்து தந்த காரணகர்த்தாக்களை யாரும் கொண்டாடுவதில்லை.
இது தான் யதார்த்தம்!...

மனசாட்சிக்குத் தெரியும். விருட்சத்துக்கு விதை ஆளுமை. வானுயர்ந்த கட்டிடங்களுக்கு தெரியும், தன்னை தாங்கிப் பிடிப்பது அடிக்கற்கள் என்று. அஃறிணைக்கே தெரியும்போது, உயர்திணையில் உள்ள மானிடத்தில் ஒரு சாதனையை செய்தவரை பாராட்டுகிறார்கள், அந்த சாதனையை செய்து முடிக்க மூலமாக இருந்தவர்களை கண்டு கொள்வதில்லை. இங்கிருந்து தான் போலித்தனங்களே துவங்குகின்றது. குழுப்பணிகளின் வெற்றிகளை யாரும் சிந்திப்பதேயில்லை. எப்படி சாதித்தார்?, யாரால் சாதித்தார்? யாரால் அந்த வெற்றி அவர் கைககளில் சேர்ந்தது என்பதையெல்லாம் யாரும் நினைப்பதில்லை. 

இலையில் பண்டம் இருந்தால் சாப்பிடும்போது, அந்த பண்டத்தில் உள்ள மூலப்பொருட்களை பற்றி சிந்திக்க மறுக்கும் மனமில்லாத மானிடம்.

#மானிடம்
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30-08-2018.
(வாரணாசி )

Wednesday, August 29, 2018

தி . ஜானகி ராமனின் அக்பர் சாஸ்திரி..

கடந்த 1972 விருந்து இது வரை 30 முறை
படித்த , 

.
தஞ்சாவூர் வட்டார சிறுகதைகள் தொகுப்பு...
படிக்க மனநிறைவு தரும்!

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
29-8-2018

Jaipur

Reading the newspaper in Jaipur ...

Tuesday, August 28, 2018

இந்திய அரசியல் சாசனம் குறித்தான கேள்விக்குறிகள்…


இந்திய அரசியல் சாசனம் குறித்தான கேள்விக்குறிகள்…
---------------------------------------
நேற்றைய என் பதிவில், 1789இல் பிரெஞ்சு புரட்சி காலக்கட்டத்தில் அமெரிக்காவில் அதன் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் புதிய அரசியலமைப்பு சாசனத்தை அந்த நாட்டுக்கு பிரகடனப்படுத்தி அர்ப்பணித்தார் என பதிவு செய்திருந்தேன்.
அமெரிக்க அரசியல் சாசனம் வகுக்கப்பட்டு கிட்டத்தட்ட 329 ஆண்டுகள் நிறைவாகியுள்ளன. அந்த சாசனத்தில் 7 பிரிவுகளில் இதுவரை 300 ஆண்டுகளுக்கு மேலாகியும் வெறும் 26 திருத்தங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை பார்த்தால் நமக்கே வேதனையாக இருக்கின்றது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உலகத்திலேயே அதிக பக்கங்கள், அதிகமான பிரிவுகளும் கொண்டது. அதன் எடை 1.5 கிலோ ஆகும். அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் எடை 0.600 கிராம். அமெரிக்க அரசியல் சாசனம் சுருக்கமான சரத்துகளும், பக்கங்களும் கொண்டாலும், அந்த நாட்டுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை கொண்டுள்ளது. ஆனால், நமது அரசியலமைப்புச் சட்டம் 328 பிரிவுகள் நாடு விடுதலைப் பெற்று 72 ஆண்டுகளில் 101 திருத்தங்கள் வரை நடந்தேறியுள்ளது. இன்னும் சில திருத்தங்கள் நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்படாமல் நிலுவையில் உள்ளது.
நமது அரசியல் சாசனம் சமஷ்டியா? ஒற்றை ஆட்சியா? என்பதை தெளிவுபடுத்தவில்லை. நெகிழும் தன்மையா? நெகிழாத் தன்மையா? என்பதற்கான பதிலும் இல்லை. நம்முடைய மண்வாசனைக்கு ஏற்ற வகையில் இல்லாமல், பிரிட்டிஷ் எழுதப்படாத அரசியல் சாசனத்தின் மரபுகள், பழக்கங்கள், கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அயர்லாந்து போன்ற நாடுகளில் அரசியல் சாசனத்தில் உள்ள பிரிவுகளை எடுத்து நமது அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதை பி.என்.ராவ் என்பவர் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கருக்கு உதவியாக இருந்து முறைப்படுத்தினார்.
ஒன்றிய மற்றும் மாநில சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களால் அரசியலமைப்பு நிர்ணய மன்றம் அமைக்கப்பட்டது. ஜவகர்லால் நேரு, சி ராஜகோபாலாச்சாரி, ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் படேல், சந்திப் குமார் படேல், டாக்டர் அம்பேத்கர், மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, நளினி ரஞ்சன் கோஷ், மற்றும் பால்வந்த் சிங் மேத்தா ஆகியோர் சட்டமன்றத்தில் முக்கிய பிரமுகர்களாக இருந்தனர். ஒடுக்கப்பட்ட வகுப்புகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கு இருந்தனர். பிராங்க் அந்தோணி ஆங்கிலோ இந்திய சமூகத்தை பிரதிபலித்தார். பார்சி இனத்தவர்களை எச்.பி.மோடி பிரதிபலித்தார். சிறுபான்மையினர் குழுவின் தலைவராக, ஆங்கிலோ இந்தியர்கள் தவிர மற்ற அனைத்து கிறித்துவர்களின் பிரதிநிதியாக ஃஅரென்ட்ர ஊமர் முர்ஜி இருந்தார். அரி பகதூர் குறூங் கோர்கா சமூகத்தை பிரதிபலித்தார். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், பி.ஆர்.அம்பேத்கர், பெனகல் நர்சிங்ராவ் மற்றும் முன்ஷி, கணேஷ் மவுலன்கர் போன்ற முக்கிய நடுவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். சரோஜினி நாயுடு, ஹன்சா மேத்தா, துர்காபாய் தேஷ்முக், ராஜ்குமாரி அம்ரித் கவுர் மற்றும் விஜயலட்சுமி பண்டிட் போன்றவர்கள் முக்கியமான பெண் உறுப்பினர்களாக இருந்தனர். கமலாபாய் சட்டோபாத்யாயா அவர்களை இந்த குழுவில் நியமனம் செய்ய சிலருக்கு விருப்பமில்லை. அரசமைப்பு மன்றத்தின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் சச்சிதானந்தன் சின்கா ​​இருந்தார். பின்னர், ராஜேந்திர பிரசாத் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசமைப்பு மன்ற உறுப்பினர்கள் டிசம்பர் 9, 1946 அன்று முதல் முறையாகக் கூடினர்.
1947, ஆகஸ்ட் 29 இல் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் ஏழு பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது.

பி.ஆர்.அம்பேத்கர்
கோபால்சாமி ஐயங்கார்
அல்லாடி கிருஷ்ணமூர்த்தி
கே. எம். முன்ஷி
சையது முகமது சாதுல்லா
மாதவராவ்
டி. பி. கைதான்
ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றனர். இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21இல் சமர்ப்பித்தது. நவம்பர் 4 ஆம் தேதி அரசியல் நிர்ணய மன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இவ்வறிக்கை, முழுமை பெற்று 1949 நவம்பர் 26 ஆம் தேதி அரசியல் நிர்ணய மன்றத்தின் தலைவர் இராஜேந்திரப் பிரசாத்தின் கையொப்பம் பெற்றது. ஜனவரி 24-ல் நடைபெற்ற அரசியல் நிர்ணய மன்றத்தின் கடைசிக் கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் 1930, ஜனவரி 26-ல் இந்தியாவிற்கு குடியரசு நாளாக அறிவித்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நமக்கு நாமே அர்ப்பணிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஜனவரி 26 தேதியை இந்தியக் குடியரசு நாளாக ஏற்பது என்றும் அரசியல் நிர்ணய மன்றம் முடிவெடுத்தது.
அன்றே இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியக் குடியரசு தினத்தில் நடைமுறைக்கு வந்தது. இதில் கவனிக்கவேண்டிய விடயமெனில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் குடியரசு என்ற தத்துவத்தின் கீழ் இயங்குகின்றன. ஜனநாயகம் என்ற கோட்பாட்டில் பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடாளுமன்ற ஜனநாயக முறை இயங்குகின்றது. வரலாற்றில் முதன்முதலாக குடியரசு (Republic) என்பது இத்தாலியில் உருவாக்கப்பட்டது. ஜனநாயகம் என்பது கிரேக்கத்தில் உருவாக்கப்பட்டது. பிரிட்டன், இஸ்ரேல், நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு நம்மைப் போன்ற எழுதப்பட்ட அரசியல் சாசனம் கிடையாது. மரபு ரீதியாகவும், பழக்கவழக்கங்களைக் கொண்டு நாடாளுமன்ற ஜனநாயகம் விளங்குகின்றது.
இதை எதற்கு இந்த இடத்தில் பதிவு செய்கிறேன் என்றால், இந்தியா ஜனநாயக நாடா? குடியரசு நாடா? என்ற விளக்க நியாயங்கள் இல்லை. அதேபோல, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகள் கூட்டாட்சியை மையமாகக் கொண்டே அங்கு அரசுகள் நடைமுறையில் உள்ளது. ஆனால், கூட்டாட்சியைக் குறித்தும் தெளிவான பார்வையும் இல்லை.
கவர்னர்கள் என்ற தேவையற்ற பதவியை அரசியல் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்குகின்ற கொடையும், இன்றைக்கு நமது அரசியல் சாசனத்தில் உள்ளது தேவைதானா? இப்படி பல்வேறு நமது அரசியல் சாசனங்களில் உள்ள குழப்பங்களை நீண்ட பட்டியலே இடலாம். இவ்வளவு பக்கங்களும், பிரிவுகளும் நமது அரசியல் சாசனத்தில் இருந்தும் நாட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லக்கூடிய வழிகாட்டியாக அரசியல் சாசனம் இல்லை என்பது தான் யதார்த்தம்.
வேர்ட்ஸ்வோர்த் சொல்வார், பழமைக்கும், புதுமைக்கும் இடம்விட்டுவிட வேண்டும். அதை இயற்கையோ, இறைவனோ நிரப்புவான் என்று. இயற்கையாகவே அதை நிரப்பக்கூடிய சூழல்கள் இந்தியாவில் அமையவும் இல்லை. பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட இந்தியாவில் இப்படியான குழப்பமான
நம்மிடம் தொலைநோக்கு பார்வையோ, தடை தடங்கல்கள் இல்லாமல் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கமுடியுமா என்பது தான் நம்முடைய வினா?
இன்றைக்கு மக்கள் ஜனநாயகம் என்ற கருத்து மாறி, சந்தை ஜனநாயகம் என்று மாறிவிட்டோம். இந்நிலையில் இதை குறித்தான அச்சங்களையும் கவலைகளையும் யார் கவனித்து தீர்ப்பார்களோ என்பது தான் நம்முன் எழும் மிகப்பெரிய கேள்வி. அரசியல் சாசனம் என்பது ஒரு நாட்டின் ஜீவசக்தியாகும். அந்த ஜீவசக்தியிலேயே குழப்பங்களும் கேள்விக் கணைகளும் எழுந்தால், நிலையான ஆரோக்கியமான, அரசியலமைப்பு அணுகுமுறை எதிர்காலத்தில் இருக்குமா என்பது ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். நாடு விடுதலை அடைந்து 72 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்னமும் முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வில்லை. ஆட்சிக்கு வந்தால் போதும், நமக்கென்ன என்று ஆட்சியாளர்கள் எண்ணுவார்களானால் எதிர்காலத்தில் மிகப்பெரும் கேட்டினை சந்திக்க வேண்டியது தான்.
“Ask not what your country can do for you, ask what you can do for your country.”

#அரசியலமைப்பு_நிர்ணய_சபை
#அரசியல்_சாசனம்
#constitutional_assembly_India
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-08-2018

ஸ்டாலின் -திமுக

MKS .....திமுக தலைவர் வாழ்த்துக்கள் 



(1980 களில் - கோவில்பட்டி)

தலைவர் கலைஞர்,அடியேன், உயிர்மை குறித்து திரு பாரதிமணி கவிஞர் மனுஷ்யபுத்திரனின் பதிவு .....

தலைவர் கலைஞர்,அடியேன், உயிர்மை
குறித்து திரு பாரதிமணி கவிஞர் மனுஷ்யபுத்திரனின் பதிவு .....
——
உயிர்மை பற்றி கலைஞர்
*****************************************
செப்டம்பர் 1 வெளிவரும் உயிர்மை கலைஞர் சிறப்பிதழ் மூலமாக உயிர்மை 16 ஆம் ஆண்டில் அடியெடித்து வைக்கிறது. இந்த சிறப்பிதழில் எழுதியிருக்கும் நடிகரும் எழுத்தாளுமான பாரதிமணி கலைஞர் உயிர்மை பற்றி குறிப்பிட்ட ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறார்:
.................................

கலைஞரின்  பரந்துபட்ட வாசிப்பு என்னை பிரமிக்கவைக்கிறது. ஒரு சின்ன உதாரணம். அப்போது நான் உயிர்மையில் தொடராக எழுதிக்கொண்டிருந்த காலம். ஒருநாள் என் நண்பரொருவர் எனக்கு போன் பண்ணி, ‘மணிசார், ஒரு சந்தோஷமான சமாசாரம். என் சினேகிதர் வக்கீலா இருக்காரு. பெயர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்  கலைஞர் வீட்டு நண்பர். இன்னிக்கு காலையிலே கோபாலபுரம் போனாராம். அவர் கையிலே இன்னிக்கு வந்த உயிர்மை இதழ் இருந்தது. தயாளு அம்மாளுக்கு உடம்பு சரியில்லேனு பாக்கப்போயிருக்கார். பெரியவர் இவரைப்பார்த்து, ‘வாய்யா! கையிலே என்ன?... உயிர்மையா? அதை என்னிடம் குடுத்திட்டு உள்ளே போ. என் காப்பி இன்னிக்குத்தான் வரும். நீ வர்ரதுக்குள்ளே மனுஷ்யபுத்திரன் தலையங்கமும், பாரதி மணின்னு ஒரு பையன் எழுதறான்... அவன் கட்டுரையும் படிச்சிட்டுத் தரேன்!’ என்றாராம். அதுக்கு நண்பர், ‘தலைவரே! பாரதி மணி சின்னப்பையன் இல்லை. எழுபத்தஞ்சுக்கு மேலே இருக்கும். ஆனா இப்பொதான் எழுதறாரு’ என்று பதிலளித்தாராம். ஒரு ரெண்டரையணா எழுத்தாளனுக்கு வேறென்ன கொடுப்பினை வேண்டும்! அப்போது மனுஷ்யபுத்திரன் தி.மு.க.வில் சேருவோமென்று, அவரேகூடக் கனவு கண்டிருக்கமாட்டார்!

- பாரதி மணி

Monday, August 27, 2018

பிரெஞ்சு புரட்சியின் தாக்கம்

பிரெஞ்சு புரட்சியின் தாக்கம்
-------------------
பிரான்ஸை இறுதியாக ஆண்ட போர்பன் மன்னர் பதினாறாம் லூயியும், அவரின் ஆங்கில வம்சத்தில் வந்த ராணி மேரி அண்டாய்னட்டும் செய்த கொடுமைகள் மக்களால் பொறுக்க முடியாமல் போயின. 1789 ஜூலை மாதம் ஒரு மாலை சனிக்கிழமை அன்று அந்த மன்னரும், ராணியும் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் பாரீஸ் நகர வீதிகளில் வலம் வந்தனர். எங்கும் மக்கள் திரள் கூட்டம். மக்கள் அரசரையும், அரசியையும் பார்த்து சாப்பிடுவதற்கு ரொட்டித் துண்டே இல்லாமல் உயிர் போகும் நிலையில் இருக்கின்றோம் என்று கடுமையான, உரத்தக் குரலில் முறையிட்டனர். பதினாறாம் லூயி அதற்கு பதில் சொல்ல போகும்போது மேரி அண்டாய்னட் அவரைத் தடுத்து ரொட்டி இல்லையெனில் வெண்ணையாவது, கேக்கையாவது சாப்பிடுங்கள் என்று திமிரில் வார்த்தைகளை கிண்டலாக சொன்னார்.
இதை பொறுக்க முடியாத மக்கள் சக்தி மன்னரையும், ராணியையும் வீதி வீதியாக விரட்டினர். ரணமில்லாமல் கொல்லும், கில்லட்டின் ஆயுதத்தினால் இவ்விருவரும் சாகடிக்கப்பட்டனர். இந்த திமிர்பிடித்த பெண்மை குணமில்லாத ராணியை நாவலாசிரியர் கார்லைல், மேரி அண்டாய்னட் பிறப்பிலும் ஜீவிதத்திலும் (Biological Error) ஒரு தவறான மனுஷி என்றும், அரசரை இயற்கையின் பிழை (Mistake of Nature) என்றும் கூறுகிறார்.
இப்படித்தான் எழுந்தது பிரெஞ்சு புரட்சி. ஏன் பிரெஞ்சு மட்டுமல்ல, ஐரோப்பா கண்டத்தையே இந்த புரட்சி திருப்பிப் போட்டது. உரிமைகளை நிலைநாட்ட ஒரு உந்து சக்தியாக பிரெஞ்சு புரட்சி வரலாற்றில் அமைந்தது. இதன் எழுச்சி அதே காலக்கட்டத்தில் 1789இல் அமெரிக்காவும் குடியரசு நாடாக மக்களின் உரிமைகளை காக்க தன்னுடைய அரசியல் சாசனத்தை தங்களுக்கு தாங்களே அர்ப்பணித்துக் கொண்டனர்.

#பிரெஞ்சு_புரட்சி
#உலக_அரசியல்
#அமெரிக்க_சுதந்திரப்போர்
#French_Revolution
#American_war_of_Independence
#International_relations
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27-08-2018


பெண்ணுடல் அழகின் கற்பிதம்....

நன்றி தீக்கதிர் புத்தக மேசை

பெண்ணுடல் அழகின் கற்பிதம்
____________________________

சுமார் ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரத்திற்குள்ளாக வாசி முடிக்கப்பட்ட புத்தகம் அண்டனூர் சுரா அவர்கள் எழுதிய "கொங்கை"
எந்த ஒரு பெண்ணும் தன்னுடைய பதின்பருவத்திலிருந்து யோசித்துக்கொண்டிருக்கும் அல்லது அவளின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் அவளின்  முலைகளைப்பற்றிய எண்ணங்களும், சமூகப்பார்வையையும் சொல்லும் விதம்,
"நாம நெனக்கற மாதிரிதா ஒவ்வொருத்தரும் நெனச்சுருக்காங்க"என்று சொல்லும் அளவுக்கு எங்கோ ஏதோ ஒரு காலகட்டத்தில் சிறு துளியேனும் நிச்சயமாக நடந்திருக்கும்.. ஆக நாவலாசிரியர் கூறுவது போல புனைவு அல்ல.. நடந்து கொண்டிருக்கும் நிஜம்.

படித்து முடிப்பதே தெரியாத வகையில் கதையோட்டம் அமைத்திருப்பது சிறப்பு..

இது பெண்களுக்கான நூல் மட்டும் அல்ல..முலைகளைப்பற்றிய மனிதர்களின்  கண்ணோட்டத்தை அலசி நம் கைகளில் சேர்த்திருக்கிறார்.ஆக அனைவருக்குமான ஒரு சிறு நாவல் "கொங்கை"
மாற்றத்தை அவ்வளவு சீக்கிரத்தில் கொண்டுவர முடியாதுதான்.. ஆனாலும் இது போன்ற நிஜங்களை வாசிக்கும்பொழுது சிந்தனை மாற்றம் நிகழ்ந்தே தீரும்.

பெண் உடல் சம்பந்தமாக விளம்பரங்களின் தாக்கம் என்பது  பெண் உடல் அழகு என்றும் அடிமைப்படுத்தவும் வழிவகுக்கிறது என்பதையும் நாவலின் மூலம் பதிய வைக்கிறார்.

நாவலில் வரும் விஜி கதாபாத்திரம் துறுதுறுவென நாமும் அந்த வயதில் அவ்வளவு கேள்விகளுடனும் பதில்களுடனும் இருந்திருக்க வேண்டும் என்ற ஏக்கத்தை தந்தது..
சந்திரா டீச்சர் எல்லாம் தெரிந்தும் ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்கும் சராசரி அம்மா..
அன்பான நட்புக்குரிய தந்தையாகவே இருந்தாலும்  இப்படியான அருவருக்கத்தக்க சமூகத்தில் அவருக்கும் தன் பெண்பிள்ளையின் மீது சிறு சந்தேகமாவது எழவே செய்கிறது..

இன்றைய சமூகத்தில் சம்பந்தமே இல்லாமல் உடல் மாற்றங்களால் கேளிக்கிண்டல்களுக்கு ஆட்பட்டு மனம் நொந்துகொண்டிருக்கும் சிறுமி விமலா.. அவளின் கையில் இந்த புத்தகம் முன்னமே கிடைத்திருக்கலாமே என்ற ஆதங்கம் மட்டும் இன்னும் குறையவில்லை.. கிடைத்திருந்தால் நிச்சயம் அவள் முலையை வெட்டியிருக்க மாட்டாள்.. ஆனால் கதை வேறு வழி பயணித்திருக்கும்..

புத்தகம் வாசித்தவுடன் எழுந்த மிகப்பெரிய ஆச்சரியம் ஒரு ஆண் எழுத்தாளர் பெண்ணின் உணர்வுகளை புரிந்து எழுத முடியுமா.....
முடியும் என நாவல் மூலம்  நிரூபித்திருக்கிறார். அண்டனூர் சுரா.

வாழ்த்துக்களும் நன்றிகளும் அண்டனூர் சுரா

கொங்கை
பாரதிபுத்தகாலயம் வெளியீடு
விலை ரூ.70
95 பக்கங்கள்
___________________________________
இந்தியாவில் மட்டுமல்ல இந்த பார்வை.இன்றைய மனித சமுதாயத்தில் பெண்ணுடல் என்பது கவர்ச்சிப்பொருளும் விளம்பரப்பொருளுமே..அவளின் கழுத்து, கூந்தல் என அனைத்து அங்கங்களும் எங்களுக்கே சொந்தம் என்ற சிந்தனையும் ,  அடிமை என்ற மனநிலையுமே மேலோங்கி இருக்கிறது..இது எல்லாவற்றையும் உடைத்து
அவளின் வலிகளையும் உணர்வுகளையும் தெரியப்படுத்தி பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும்..படித்து ஒரு வாரம் ஆகியும் இந்த நிமிடம் படித்து முடித்த உணர்வு..

தமிழை வளர்த்த இவர்களை நினையுங்கள்........



————————————————
தமிழை வளர்த்தவர்கள் என்று சொல்கிறார்களே. இந்த பட்டியலில் உள்ளவர்கள் தான் தமிழை வளர்த்தார்கள் என்று எத்தனை பேருக்குத் தெரியும். அந்த பணியில் இவர்கள் பட்ட பாடுகளும் அவமானங்களும் சொல்லி மாளாது.
 
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை,
வீரமா முனிவர், வள்ளலார்,டேனியல் புவர், லீவை போல்டிங், மைரன் உவின்சிலோ, எச்.ஆர் ஹொய்சிங்டன், ரேனியஸ், சாமுவேல் பிஸ்க் கிறீன், எல்லீஸ், துரு பாதிரியார், கால்டுவெல், சார்லஸ் கிரால், சாமுவேல் பிள்ளை, சைமன் காசிச் செட்டி, ஜான் முர்டாக், ஹெச் பவார், பர்னல், ஜி.யூ.போப், ஆறுமுகநாவலர், தாமோதரம்பிள்ளை, சதாசிவம்பிள்ளை, உ.வே.சா., தியாகராஜ செட்டியார்,
ஹெச். கிருஷ்ணம்பிள்ளை,
உமறுப் புலவர்,ஆப்ரகாம் பண்டிதர், சுவாமி விபுலானந்தர், பாரதியார், பாரதிதாசன், பாண்டித்துரை தேவர், திரு.வி.க.,க.சு.பிள்ளை,வையாபுரிப்
பிள்ளை, ரா.ராகவையங்கார், பரிதி மால் கலைஞர்,ரா.பி.சேதுப்பிள்ளை,மு.ராகவையங்கார், ந.மு.வேங்கடசாமி நாட்டார், தெ.பொ.மீ., அவ்வை துரைசாமி பிள்ளை, தண்டபாணி தேசிகர், பொ.வே.சோமசுந்தரனார், மு.அருணாசலம், தி.வே.கோபாலய்யர் செய்கு தம்பி பாவலர்,
பேராசிரியர். காளமேகனார்,
நாமக்கல் கவிஞர். வெ.இராமலிங்கனார்,
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்,
கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை,
இலக்குவணார், கவிராஜ பண்டிதர் ஜெகவீரபாண்டியனார்,
மு. வரதராசனார்,
வி.ஐ.சுப்பிரமணியன்,
சாலை இளந்திரையன்...........
இப்படி பல வெளிநாட்டினரும் உள்நாட்டினருமான தங்களுடைய வாழ்நாள் முழுமையும் பாடுபட்டு தமிழ்மொழியை வளர்த்தார்கள்என ஒரு நீண்ட பட்டியலே உண்டு.

#Tamil_Development
#தமிழை_வளர்த்தவர்கள்
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27-08-2018

Sunday, August 26, 2018

ஈழப்பிரச்சனை

இதே நாளில்,26/08/1983ல்....
————————————————
ஈழப்பிரச்சனை 1983இல் உக்கிரமாக இருந்தபோது, 07/08/1983இல் பழ.நெடுமாறன் தலைமையில் மதுரையிலிருந்து பல்லாயிரக்கணக்கானவர்களுடன் இலங்கைக்கு தியாகப் பயணம் செல்வதற்காக மதுரையிலிருந்து இராமேஸ்வரம் வரை நடந்து அங்கிருந்து படகுகள் மூலமாக ஈழத்துக்கு செல்வதாக இருந்த போராட்டம் தமிழக காவல்துறையால் தடுக்கப்பட்டது. 

அந்த நிகழ்வுகளுக்குப் பின், இதே நாளில் (26/08/1983)நான் ஏற்பாடு செய்து பழ.நெடுமாறன் தலைமையில் நடந்த ஈழப்பிரச்சனை ஆலோசனைக் கூட்டம் சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலின் மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இலங்கையில் அன்றைக்கிருந்த கொடூர நிலையிலும் சிங்களவர்களிடமிருந்து தப்பி வந்த தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், ஈழவேந்தன்,கரிகாலன் போன்ற ஈழத்தைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். மேலும், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஏ. நல்லசிவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பா.மாணிக்கம், அன்றைய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ, இரா. செழியன், அதிமுக, மேலவைத் துணைத் தலைவராக இருந்த புலமைப்பித்தன் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

#ஈழப்பிரச்சனை
#பொது_வாழ்க்கை
#Public_life
#Tamil_Eelam
#pa_nedumaran
#பழ_நெடுமாறன்
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-08-2018


வாழ்கை

எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு, விடை,   அப்பிரச்சனையை நாம் எவ்வளவு கவனமாக,   தீவிர உக்கிரமாக,   சார்புநிலையற்று பரிசீலித்து விழிப்புணர்வுடன் காண்கின்றோமோ,   அந்த அவதானிப்பிலே,   உணர்வு நிலையிலே, அந்த போக்கில் உள்ளது. பிரச்சனையின் தீர்வு சுமுகமாக முடியும் என்பதல்ல இதன் அர்த்தம்.  முடிவு எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவபட்ட மனப்பாங்கு,   உணர்வுநிலை அமைவதே தீர்வாகும்.

#வாழ்கை
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-08-2018
(படம் -1930ல் நெல்லை)


Saturday, August 25, 2018

தமிழ் தேசியம், வந்தேறிகள் issues......

minnambalam.com சிறப்புக் கட்டுரை: தனித் தமிழ் தேசியம் இன்று சாத்தியமா?

வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

இன்று தமிழ் தேசியம் குறித்த விவாதங்கள் பல தளங்களில் நடந்துவருகின்றன. தமிழ்நாட்டில் வசிக்கும் “வந்தேறிகள்” குறித்த குரலும் உரக்க ஒலிக்கிறது. இந்தச் சூழலில் தேசிய இனங்கள், தமிழ் தேசியம், சுயாதிகார உரிமை ஆகியவை பற்றியெல்லாம் திறந்த மனதோடு விவாதிக்க வேண்டியுள்ளது.

தேசிய இனங்களின் தோற்றம்

தேசிய இனங்களின் தோற்றத்தைச் சுருக்கமாகப் பார்த்துவிட்டுத் தமிழ் தேசியப் பிரச்சினைக்கு வரலாம். உலக நாகரிகங்கள் தோன்றியவுடன் மானிடம், இனம் இனமாகக் கூடி வாழ்ந்தது. அப்படிக் கூடி வாழ்ந்த இனங்களுக்குள் சில பொதுவான குணங்களும், தன்மைகளும், உறவுமுறைகளும் ஏற்பட்டன. சமுதாயம் சிந்திக்கத் தொடங்கியபோது, தங்கள் இனம், தங்கள் மண் என்ற பார்வைக்குத் தள்ளப்பட்டன. அந்த மக்களிடையே பேச்சு வழக்கில் மொழி தோன்றியது. இப்படியான சில காரணிகளால் கூட்டாகக் கூடி வாழ வேண்டிய நிலைக்கு இயற்கை தள்ளும்போது பொது அமைப்பு ரீதியான சில வரையறைகளுக்குட்பட்டு ஓர் இனம், தங்களைச் சார்ந்த மண் (தேசம்) வாழ உட்படுகிறது. அந்த இனம், மொழி பேசுகிற இனம் தனக்கென ஒரு நாடும் கொண்டிருந்தால், ஒரு நீண்ட வரலாறு கொண்டு ஒரு தொடர் நிலத்தில் அந்த இனம் வாழ்ந்தால், அது தேசிய இனமாகிறது.

ஒரு நாட்டில் பல தேசிய இனங்கள்

ஒரு நாட்டில் நிலையாகக் குடி வாழும் மக்கள் அனைவரும் ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களா என்பதும் விவாதத்துக்குட்பட்டது. உதாரணத்துக்கு கனடாவில் கியூபிக் பிரச்சினையும், சுவிட்சர்லாந்தில் ஜெர்மானியர், பிரெஞ்சுக்காரர், இத்தாலியர் போன்ற நாட்டினர் வாழ்வதால் சுவிட்சர்லாந்தியர் என்ற புதிய தேசிய இனமாக இவர்கள் ஒன்றுபட்டுவிடவில்லை. மேற்கண்ட மூன்று இனத்தவரும் அவரவர்கள் மொழியின் அடிப்படையில் தனித்தனி தேசிய இனங்களாகத் தனித்தனிப் பகுதிகளில் சுயாதிக்க உரிமையுடன் வாழ்ந்துவருகிறார்கள்.

ஒரு தேசிய இனத்தைப் பகுத்தாய்வு செய்யும்போது மதம் அடிப்படையாக இருக்குமா என்று வினாவும் எழுகிறது. இதைக் குறித்தான விவாதங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. மேற்கே அல்ஜீரியாவில் இருந்து, வளைகுடா நாடுகள், கிழக்கே இந்தோனேசியாவில் இஸ்லாமிய இனத்தவர்கள் வாழ்கின்றனர். அதை ஒரு தேசிய இனமாகக் கருத முடியாது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. ஏனெனில் இஸ்லாம் மதத்தில் சில பிரிவுகள் இருப்பதால் அது ஒரு தேசிய இனமாகப் பிரித்துக் காண முடியாது என்று கருத்தைச் சொன்னாலும், அதற்கு முரணான கருத்துகளையும் சிலர் வைக்கின்றனர்.

மதமும் தேசிய இனமும்

அரேபிய மொழி பேசும் முஸ்லிம்கள் அரேபியர் என்றும், துருக்கி மொழி பேசும் முஸ்லிம்கள் துருக்கியர் என்றும், புஸ்டு மொழி பேசும் முஸ்லிம்கள் புஸ்டுக்கள் எனவும் குறிப்பிடப்படுகிறார்கள். இந்த வகைமைகள், இஸ்லாமியர்கள் ஒரே தேசிய இனத்துக்குள் உட்பட்டவர்கள் அல்லர் என்ற கருத்தை உறுதிப்படுத்துகின்றன. எனவே, ஒரே மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், பல்வேறு மொழிகள், கலாச்சாரம், பண்பாடுகளுடன் வாழும் மக்களை ஒரு தேசிய இனம் என்று சொல்லிவிட முடியாது.

தேசிய இனத்திற்கு மொழி, மரபு ரீதியான பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை முறைகள் என்பவையே கணக்கில் கொள்ளப்படுகின்றன. ஒரு தேசிய இனம் வாழும் நிலப்பகுதி, எல்லைகளோடு கூடிய மண், ஒரு நாடாக (State) அழைக்கப்படுகிறது. நாடு (State) என்பது அரசு. அது இறையாண்மை கொண்ட நிலப்பரப்பில் வாழும் மக்கள் சமுதாயத்தைக் குறிப்பிடுவதாகும். அது எத்தனை மொழிகள் கொண்டதாகவும் இருக்கலாம். ஆனால், ஒரு தேசம் (Nation) என்பது மரபு வழியாக ஒரு மொழி, கலாச்சாரம் கொண்டதாக இயங்க வேண்டும்.

ஒரு தேசம் என்பது ஒரு நாடாக இருக்கலாம். தனி நாடு சுயநிர்ணய உரிமையில் பிரியும்போது பன்னாட்டு அங்கீகாரமும் ஒரு முக்கியமான காரணியாகும். ஒவ்வொரு நாடும் ஒரு தேசமாக இருப்பதுவும் இல்லை என ஜான் ஹட்சின்சன், ஆன்டனி டி. ஸ்மித் ஆகியோர் நேஷனலிசம் (Nationalism) என்ற ஆங்கில நூலில் குறிப்பிடுகின்றனர். இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிப் பன்மையில் ஒரு குடையின் கீழ் கூட்டாட்சி என்று சொன்னாலும், ஒற்றையாட்சிதான் இங்கு நடக்கிறது.

தமிழகத்தின் வரலாறு

தொல்காப்பியர் குறிப்பிட்டவாறு, “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’’ தமிழகத்தின் எல்லைகள் அக்காலத்திலேயே வரையறுக்கப்பட்டது. இந்த எல்லைகள் அமைந்த இந்த நிலையை ஒரே மொழி, இலக்கியச் செறிவுகள், தொன்மையான இனப் பண்பாடுகள் ஒருங்கிணைந்து அமைந்த இந்த மண்ணில் அரசு (Government) அமைந்து நிர்வாகத்தைப் பரிபாலிக்க வேண்டும். இதன் கீழ் குடிகள் வாழ்வார்கள். அவர்களுடைய வாழ்க்கை முறைகள் சீராக்கப்படும். இப்படித்தான் தேசிய இனங்கள், பொதுப் பழக்கவழக்கத்தில் தங்களுக்காகவே அமைத்துக்கொள்கின்ற நாடு, அரசு ஆகும்.

அதற்கு அடிப்படை ஒரே மொழியும், கலாச்சாரமும் பழக்கத்தில் கொண்ட மக்களின் கூட்டமைப்பே ஒரு தேசிய இனம். இது நேஷனாலிட்டி என (Nationality) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

தமிழ் தேசியத்தின் நிலை என்ன?

தமிழ் தேசியம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவெடுத்து, தொன்மையான மூத்த இனமாகவும், தமிழ்மொழி மூத்த மொழியாகவும் அறியப்பட்டது. ஆதியில் தமிழ்மொழி காலத்தில் வழக்கத்தில் இருந்த ஹீப்ரூ, லத்தீன் போன்ற மொழிகள் இன்றைக்குப் புழக்கத்தில் இல்லை. தமிழ்மொழி இன்னமும் கன்னித் தன்மையோடு சிரஞ்சீவியாகப் புழக்கத்தில் உள்ளது.

இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி வருவதற்கு முன் பல்வேறு மன்னர்களின் ஆட்சியில் கீழ் வட்டார வட்டாரங்களாக நிர்வாகம் இருந்தது. ஒரு குடையின் கீழ் காஷ்மீரிலிருந்து தென்குமரி வரை யாரும், எந்த மன்னரும் ஆட்சி செய்யவில்லை. ஆங்கிலேயர் வருகை, விடுதலைப் போராட்டம் முடிந்து நாடு விடுதலை பெற்ற பின் பல சமஸ்தானங்களை இணைத்து இந்தியக் குடியரசு என்று அமைந்தது. விடுதலை பெற்று 71 ஆண்டுகளாகியும் இந்தியாவினுடைய பல்வேறு தேசிய இனங்களில் பிரச்சினைகளும், வட்டார ரீதியிலான புறக்கணிப்புகளும் நடந்த வண்ணம் இருக்கின்றன.

வரலாற்றில் இமயமும் குமரியும்

தொல்காப்பியப் பாயிரம் தமிழகத்தின் எல்லைகள் சொன்னாலும், சேரன் செங்குட்டுவன் இமயத்தில் போய்க் கல்லெடுத்தது, யுவான் சுவாங் போன்ற சீன யாத்திரீகர்களும் புத்த பிட்சுகளும் காஞ்சிக்கு வந்தது ஆகியவை எல்லாம் வரலாற்றுச் செய்திகள்.

பண்டைய தமிழ் இலக்கியங்களிலே சங்க இலக்கியங்கள், இமயம் - பொதிகை – குமரிமுனை வரையான தொடர்புகளைப் பகிர்கின்றன.

வடவேங்கடம் தென்குமரி ஆயிடை என்று தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்பைக் குறிப்பது போன்று இமயம் முதல் குமரி வரை என்றும் இமயம் முதல் பொதிகை வரை என்றும் இந்தியாவின் நிலப்பரப்பையும் தமிழ் நூல்கள் குறிப்பிடுவதையும் காண முடிகிறது.

“பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே…” (புறநானூறு 2)

“பொன்படு நெடுங்கோட்டு இமயம் சூட்டிய…” (புறநானூறு 39)

“பொன்னுடை நெடுங்கோட்டு இமயத்தன்ன….” (புறநானூறு 369)

“தென்குமரி வடபெருங்கல்….” மதுரைக் காஞ்சி (வரி 70)

“பேரிசை இமயம் தென்னங்குமரியோடு ஆயிடை…..” பதிற்றுப்பத்து (பாடல் 11)

என்று இந்த நூல்கள் குறிப்பிடுகின்றன. இவற்றுடன்

சிறுபாணாற்றுப்படை (வரி 48),

நற்றிணை (பாடல் 356 வரி 3, பாடல் 369 வரி 7),

குறுந்தொகை (பாடல் 158 வரி 5),

பரிபாடல் (பாடல் 1 வரி 51, பாடல் 5 வரி 48),

பரிபாடல் திரட்டு (பாடல் 1 வரி 77),

அகநானூறு (பாடல் 127 வரி 4, பாடல் 265 வரி 3)

இவ்வாறான தரவுகளால் இந்தியாவின் வடபுலத்துக்கும், தென்புலத்துக்குமான தொடர்புகள் இருந்துவந்துள்ளதாகச் சிலர் சொல்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பிறகுதான் இந்தியாவை ஒருங்கிணைந்த நிலப்பரப்பாக இந்திய மக்கள் பார்த்தார்கள் என்று கூறுவார்கள். இப்படிக் கூறுவதை முழுமையாக ஒப்புக்கொள்ள முடியாது என்பதை மேலே குறிப்பிட்ட சான்றுகள் வெளிப்படுத்துகின்றன.

நதி நீர் தாவாக்கள், சமன்பாடற்ற நிதி ஒதுக்கீடுகள், திட்டங்களின் செயல்பாடு என்பதில் மாற்றாந்தாய் போக்கில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், இந்தியாவில் இந்தி எதிர்ப்புக்குத் தமிழ்நாடு 1965இல் கிளர்ந்து எழுந்தது. ஆந்திரத்தில் தெலங்கானா போராட்டம், காஷ்மீர் சிக்கல், பஞ்சாப் பிரச்சினை, அசாம் மாணவர் போராட்டம், வடகிழக்கு மாநிலங்களின் உரிமை மீட்பு அமைப்புகளின் செயல்பாடுகள் எல்லாம் நாம் கவனித்தோம்.

பல மாநிலங்களும் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்திய அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்துகின்றன. இந்தியா என்பது ஒரு கூட்டாட்சி என்று நாம் வகுத்துக்கொண்டாலும் அந்தக் கூட்டாட்சியின் வீரியம் செயல்பாடுகளில் இல்லை என்பதுதான் யதார்த்தம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், கூட்டாட்சியா அல்லது சரிபாதிக் கூட்டாட்சியா என்பதைக் குறிப்பிடவில்லை.

புதிய அதிகார மையங்கள்

இப்போது நிதி ஆயோக் என்ற அமைப்பு உள்ளது. இதற்கு முன் இது திட்டக் கமிஷனாக இருந்தது. இதைக் குறித்து ஒரு வார்த்தைகூட இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் எங்கும் குறிப்பிடவில்லை. என்றாலும் ஒரு சூப்பர் கேபினெட்டாக டெல்லியில் இது இயங்கிவருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைத் தன் விருப்பத்திற்கேற்றவாறு வினாக்களை எழுப்பித் தான்தோன்றித்தனமாகவும் நடந்துகொண்டது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் நிதி கமிஷனைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும், நிதி ஆயோக்கிற்கு உள்ள அதிகாரங்கள் நிதி கமிஷனுக்குக் கிடையாது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட ஒரு மாநில அரசை மத்திய அரசும் திட்டங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்பும் இதுவரை நடத்தி வந்த முறை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. இதனால்தான் மாநிலங்களுடைய அபிலாஷைகளும், நியாயமான ரணங்களும், மொழிவாரியாக தங்களுடைய தேசிய இனத்தைப் பாதுகாக்க இந்தியக் கூட்டாட்சியில் மத்திய அரசிடம் போர்க் குணத்தைக் காட்டுகிறது. இந்த நிலையில் மாநில சுயாட்சி, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம், கூட்டாட்சி பாதுகாப்பு, பிரிவு 356ஐ நீக்குவது, அதிகாரப் பட்டியல்களை மாற்றியமைப்பது, நிதிப் பகிர்வதில் தாராளம் போன்ற சிக்கல்கள் எல்லாம் இன்றைக்கு மத்திய – மாநில உறவுகளில் உள்ளன.

மாநில சுயாட்சி என்பது காங்கிரஸாரின் குரல்தான். 1915இல் கோபால கிருஷ்ண கோகலே தனது அரசியல் சாசனம் (Political Testament) என்ற நூலில் மாகாணங்களவை, அதற்கான சுய உரிமைகள் பற்றி முதன்முதலாகத் தெளிவுபடுத்தினார். தொடர்ந்து சுதந்திரப் போராட்டக் காலத்திலும், மாகாண சுயராஜ்யம் என்பதையும் காங்கிரஸார் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இன்றைய சூழலில் தமிழ் தேசியம்

தமிழ் தேசியம் என்பது, தொன்மையான உரிமை. அதனுடைய தன்மைகளைப் பாதுகாத்து தமிழர்களுடைய நலனைப் பேணுவது அவசியமானதுதான். யாரும் மறுக்கவில்லை. ஆனால் இன்றைய நிலையென்ன?

பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சிக்காலத்தில் 1990களின் தொடக்கத்தில் தாராளமயமாக்கல், பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்ததன் விளைவால், தமிழ் தேசியம் என்றொரு நோக்கத்தை எட்ட முடியுமா என்பதைப் பல ஆய்வுகளுக்கும், விவாதங்களுக்கும் உட்படுத்தி சிந்தனை செய்தாலும் அதற்கான சாத்தியக்கூறுகள் அரிதாகியுள்ளதை உணர முடிகிறது. தமிழ் தேசியத்தில் நியாயங்கள் இருந்தாலும், உலகமயமாக்கல், உலக மக்களிடையே செயற்கையான பிணைப்பு என்பது தடையாக அமைந்துவிட்டது. உலகமே ஒரு கிராமம் என்ற கருத்தும் நம்மை வேறு திசையை நோக்கி அழைத்துச் செல்கிறது. தேசிய இனத்தின் கலாச்சாரம் அதன் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் எல்லாம் இந்த உலகமயமாக்கலுக்குள் புகுந்துவிட்டன. உலக சார்பு நடைமுறைகள் இன்றைக்கு மேல்நோக்கி வருகின்ற நிலையில் தனி தேசியப் பிணைப்பு என்ற வகையில் சில தடைகளும் பெருகிவருகின்றன.

உலக நிலவரம்

இலங்கையில் எல்லாக் காரண காரியங்களும் நியாயங்களும் இருந்தும் விடுலைப் புலிகள் கடுமையாக போராடியும், தமிழர்கள் தொடர்ந்து 44 ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கும் நிலையிலும் இன்னும் அவர்களுடைய நியாயமான நீண்டகாலக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. வரலாற்றில், 2008இல் கொசோவா, தென்கிழக்கு ஐரோப்பியாவில் பால்கன் நாடுகள், யூக்கோஸ்லோவியாவில் இருந்து ஸ்லோவேனியா (1990), குரோஷியா (1991), மாசிடோனியா (1991), உக்ரைன் (1991), ஜார்ஜியா (1991), டிரான்ஸ்னிஸ்டீரியா (1991), போஸ்னியா (1992), எரித்ரியா (1993), மால்டோவா (1994), கிழக்கு தைமூர் (1999), மாண்டிநிக்ரோ (2006), தெற்கு ஒசேடியா (2006), தெற்கு சூடான் (2011), கினா, ஹெரிசிகோவினா ஆகிய நாடுகள் பொதுஜன வாக்கெடுப்பு நடத்தி பிரிந்த நாடுகள் ஆகும்.

போகைன்வில்லே நியூசிலாந்திடமிருந்தும்; நியூகலிடோனியா பிரான்ஸ் நாட்டிடம் இருந்தும்; ஸ்பெயின் நாட்டிலுள்ள கேடலோனியா பகுதி மக்களின் தனி நாடு கோரிக்கை, மேற்கு சகாரா ஆகிய நாடுகள் தன்னுடைய தனி இறையாண்மையை வழங்க கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுஜன வாக்குரிமை வேண்டும் என்று போராடி வருகின்றன.

மக்கள் பொது வாக்கெடுப்புகளின் விநோதத் தன்மையையும் தாண்டி, தனி நாடாக வேண்டும் அல்லது ஓர் அமைப்பிலிருந்து ஒரு நாடு வெளியேறுவது போன்ற அம்சங்களின் மீது ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படும்போது, அது பலரின் கவனத்தையும் ஈர்க்கிறது. 1945ஆம் ஆண்டிலிருந்து, விடுதலை கோரும் 50க்கும் மேற்பட்ட வாக்கெடுப்புகள் இதுவரை நடந்துள்ளன. இவற்றில் 27 வாக்கெடுப்புகள் விடுதலை வேண்டுமா என்பதற்கு 'ஆம்' என்றும், 25 வாக்கெடுப்புகள் 'இல்லை' என்றும் வாக்களித்துள்ளன. 1990களில் 14 நாடுகள் விடுதலை கோரி வாக்களித்தன. சோவியத் யூனியன் உடைந்தபோது, அவற்றில் எட்டு நாடுகள் அதிலிருந்து பிரிந்தன. முன்னாள் யூகோஸ்லாவியாவிலிருந்து மூன்று நாடுகள் பிரிந்தன, எத்தியோப்பியாவிலிருந்து ஒரு நாடு பிரிந்தது. மேலும் விடுதலை கோரிப் பிரிந்த ஒரு நாடு தற்போதுள்ள கிழக்கு தைமூர் ஆகும். இதன் முடிவினை அங்குள்ள போராளிக் குழு எதிர்த்தது.

சமீபத்தில் பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து பிரிவதற்கான பொது வாக்கெடுப்பில் பிரிந்து செல்லும் உரிமைக்கு எதிரான வாக்குகள் அதிகமாக இருந்தன. எனவே நீண்ட காலமாக எதிர்பார்த்த ஸ்காட்லாந்து பிரிவினை நிகழவில்லை.

பெர்னான்டோ ஆர். டீசன் தன்னுடைய The Theory of Self-determination என்னும் நூலில் சுயநிர்ணயம், பிரிந்து செல்லும் உரிமைகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதற்கான தகுதிகள் அந்தப் பிரச்சினைகளில் இருக்க வேண்டும். உலக நாடுகளின் ஆதரவு வேண்டும் என்கிறார். அது மட்டுமல்ல, இன்றைய சந்தை ஜனநாயகம், தாராளமயமாக்கலால் சுயநிர்ணய உரிமை சிறிது சிறிதாக மட்டுப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

இன்றைய உலகில் தமிழ் தேசியம் சாத்தியமா?

இப்போது தமிழகத்தில் பேசப்படும் தமிழ் தேசியம் சாத்தியப்படுமா என்பதுதான் விவாதப் பொருள். மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளும், சூழல்களும் நியாயமான தமிழ் தேசியம் என்ற நோக்கத்திற்குச் சாதகமாக இல்லை என்பதுதான் என் போன்றவர்களின் கருத்து. தமிழ் தேசியம் என்பது புனிதமாகக் கருதப்பட வேண்டிய விஷயமாகும். அதை யாரும் எளிதாக நினைத்துவிட முடியாது. ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே.

எனவே, இதை மிகவும் ஆழமாகப் பரிசீலனை செய்து, அடுத்த நகர்வு என்னவென்ற கவனிக்க வேண்டும். இப்படியான அக, புறச் சூழலில் தமிழ் தேசியம் என்ற அடிப்படையில் தனி நாட்டிற்குச் சாத்தியமில்லை. ஈழத்தில் நியாயங்கள் இருந்தும், கடுமையாகப் போராடியும் வெற்றி இலக்கை இன்னும் அடையவில்லை. தமிழ் தேசியம் என்ற வகையில் தனி நாடு அமைய நம் மீது உலக நாடுகளின் பார்வையும் அங்கீகாரமும் மிகவும் அவசியம். அது சாத்தியமா என்பதையும் கவனிக்க வேண்டும்.

அவ்வாறு சாத்தியமாகும் வரை மாநில சுயாட்சி பெற முயற்சிப்பது, கேரளம், கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், புதுவை இணைந்து தென்மாநிலங்கள் கூட்டுறவான சமஷ்டி முறையில் திராவிட நாடு என்ற நிலைப்பாட்டில் இணைந்து தங்களுக்கான நலன்களைப் பேணி பிரச்சினைகளை ஓரளவு தீர்க்க முனைப்புக் காட்டுவது ஆகியவைதான் இன்றைய சாத்தியமாகும்.

இந்தக் கருத்து என்னுடைய தனிப்பட்ட கருத்து. தவறாகக்கூட இருக்கலாம். நான் குறிப்பிட்ட கருத்துகளைக் கொண்டு விவாதம் நடத்தி எது தமிழகத்திற்கு நலன் பயக்குமோ அதை முன்னெடுங்கள்.

வந்தேறிகள் பிரச்சினை

மற்றொரு பிரச்சினை வந்தேறிகள். இந்த மண்ணில் பிறக்காமல், இந்த மண்ணுக்காகவும், தமிழகத்தின் உரிமைக்காகாவும் இதயசுத்தியோடு போராடாமல் கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்துக்கு வந்து ஆதாயத்தைப் பெற்றவர்களைக் குறை சொல்லலாம். ஆனால், தன்னுடைய மூதாதையர்கள் தமிழகத்தில் பிறந்து இதைத் தாயகமாகக் கொண்டு அவர்களின் வழி வழியாக வந்து தமிழ் மண்ணை நேசித்து இந்த மண்ணுக்காக நேர்மையாக போராடும் நல்லுள்ளங்களையும் வந்தேறிகள் என்று காயப்படுத்துவதனால் எந்த நலனும் கிடைக்கப்போவதில்லை. அரசியலமைப்புச் சட்டம் இதைக் குறித்துத் தெளிவாகச் சொல்கிறது. அதை மீறியும் வந்தேறிகள் என்று சொன்னால் அது தனிப்பட்ட முறையில் தன் இருப்பைக் காட்டிப் பரபரப்பை ஏற்படுத்துவதாகத்தான் இருக்கும்.

வந்தேறிகள் என யாரைச் சொல்கிறார்கள், அதற்கான அளவீடுகள் என்ன, குறியீடுகள் என்ன, அதற்கான தகுதியும் தன்மையும் தரமும் எப்படி வகுக்கப்படுகின்றன என்பதெல்லாம் இல்லாமல் இந்த மண்ணில் பிறந்து, சுவாசித்து தமிழகத்திற்காகப் பாடுபடுபவர்களை வந்தேறிகள் என்று சகட்டுமேனிக்கு அர்த்தமற்றுப் பேசுவது நியாய அரங்குகளில் எடுபடாது.

உண்மையாகத் தமிழகத்தை வாட்டிக் கொழுக்கும் வந்தேறிகள் யாரென்று கண்டறியுங்கள். உரத்த குரலில் பேசுங்கள். உலகமே மானிடம் வந்து செல்கின்ற பூமிதான். யாரும் நிரந்தரமானவர்கள் இல்லை.

ஒரு காலத்தில் அமெரிக்காவுக்குப் பணிக்குச் செல்வது குதிரைக் கொம்பாக இருந்தது. இன்றைக்கு எனது கிராமத்திலேயே 40, 50 பேர் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற பல நாடுகளுக்கு வேலைக்குச் சென்று அங்கேயே நிரந்தரக் குடியுரிமையைப் பெற்றுவிட்டார்கள். உலகம் முழுவதும் ஒரு கோடிக்கு மேல் தமிழர்கள் வாழ்கின்றனர். இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் 65 லட்சம் தமிழர்கள் உள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மேயர்கள், ஏன் பிரதமர் பொறுப்பில்கூட இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நாட்டுக்கு அவர்கள் உழைக்கிறார்கள். வந்தேறிகள் என்று அங்குள்ள தமிழர்கள் மீது ரணங்களை உருவாக்கும் விமர்சனங்கள் இல்லை.

எனவே, இந்தக் காலகட்டத்தில் தாராளமயமாக்கப்பட்ட சந்தை ஜனநாயகத்தில் போர் கொண்டு தனி நாடு பிரிந்தது எனக்குத் தெரிந்தவரை பங்களாதேஷ். அதன்பின் ஐக்கிய சோவியத் ரஷ்ய நாடுகள் தனித்தனியாகப் பிரிந்தன. மற்ற நாடுகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் பிரிந்து சென்றதெல்லாம் உலக நாடுகள் தலையீடு, ஐநா தலையீடு, இரு நாடுகளும் கூடி மனமுவந்து பிரிந்து செல்வது என்றுதான் நிகழ்ந்தன.

இன்றைய தொலைத்தொடர்பு, சமூக வலைதளங்கள், தாராளமயமாக்கல் என்ற வகையில் நாம் கோரும் தமிழ் தேசியமும், வந்தேறிகள் என்று ஓர் அளவுகோல் இல்லாமல் பேசுவது எந்த வகையிலும் பயனளிப்பதில்லை. அந்த நோக்கத்திற்கே ஊறு விளைவித்துவிடும். இந்தப் பிரச்சினை உணர்ச்சிபூர்வமான பிரச்சினை என்பதால் கவனமாகக் கையாள வேண்டும்.

(கட்டுரையாளர் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் திமுக செய்தித் தொடர்பாளர், கதை சொல்லி இதழின் இணையாசிரியர், பொதிகை – பொருநை கரிசல் பதிப்பகத்தின் நிறுவனர். மின்னஞ்சல்: rkkurunji@gmail.com)

http://www.minnambalam.com/k/2018/08/23/30

http://www.minnambalam.com/k/2018/08/24/5

FinanceCommission



*நிதிக்குழுவின் மூலம் தமிழகத்திற்கு வரும் அபாயம்.*
------------------------------------

1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நிதிப் பகிர்வீடு செய்யவேண்டுமென்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை மறுதலிக்கும் வகையில் சமகால மக்கள் தொகையின்படி நிதிப்பகிர்வீடு என்று இந்த கூட்டத்தில் முடிவெடுத்துள்ளது தமிழகத்திற்கு மிகப்பெரும் பாதிப்பும், கேடும் ஏற்படும்.

பின்தங்கிய மாநிலங்களான பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் பிற்பட்ட மாநிலங்களாகும். அந்த மாநிலங்களுக்கு நிதியை அதிகம் வழங்க வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு,ஆந்திரா,தெலுங்கனா,கர்நாடகம் போன்ற தென் மாநிலங்கள் முன்னேறிய மாநிலம் என்றும் கருத்துகள் வைக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாற்றாந்தாய் போக்கான முறையாகும்.

Finance Commission of India holds second consultation with economists in Pune
Posted On: 22 AUG 2018 9:45AM by PIB Delhi
Finance Commission held its second consultation with the leading economists at YASHDA, Pune on 21st August 2018. 16 eminent economists and domain experts including Dr. Vijay Kelkar attended the meet and enlightened the Commission with their views. Chairman Sh. N.K.Singh highlighted the changed economic scenario post abolition of Planning Commission which has altered the traditional system of resource allocation and consequently abolition of distinction between Plan and Non-Plan funds. Wide ranging discussions were held and issues which were discussed prominently are as below:
1. Intra state inequalities across the country needs to be considered by the Commission.
2. Flow of funds and resources to Urban Local Bodies and PRIs need to be strengthened.
3. Orderly fashion of Urbanisation needs to be encouraged to facilitate balanced socio-economic development.
4. Fiscal consolidation roadmap needs careful consideration of the amended FRBM Act specially with reference to Debt/GDP ratio and Fiscal Deficit looking at the different conditions prevailing across the states.
5. Contemporary population data would be useful for the purpose of devolution.
6. Commission needs to balance equity with efficiency.
7. The taxation capacity of states and any formula on devolution needed to be formed by equity, justice and uniformity.
8. Centrally Sponsored Schemes need a holistic view to ensure the synergy in resource allocation to various schemes.
This is the view of chandrasekar UNI  this means the finance commission will give weightage to the current population in allocation of funds. Uttar Pradesh Bihar will get more funds. All the assurances given to states like Tamil Nadu by the centre will be fake.
Before this becomes fait accompli Tamil Nadu and in particular dmk should take up the fight as the ruling party in the state has merged its identity with BJP ot whosoever is in the power at the centre.
 
The Chairman summing the discussion felt that continued engagement with Domain Experts over the coming months will help co...

#FinanceCommission 
#Planning_commission
#NITI_Aayog
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
25-08-2018

மனதில் உறுதி வேண்டும்....



வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும்,கைவசமாவது விரைவில் வேண்டும்;தனமும் இன்பமும் வேண்டும்,தரணியிலே பெருமை வேண்டும்.கண் திறந்திட வேண்டும்,காரியத்தி லுறுதி வேண்டும்;பெண் விடுதலை வேண்டும்,மண் பயனுற வேண்டும்,வானகமிங்கு தென்பட வேண்டும்;உண்மை நின்றிட வேண்டும்.

Friday, August 24, 2018

Thursday, August 23, 2018

Kuldip Nayar குல்தீப் நய்யார்

மூத்த பத்திரிக்கையாளரும், ஜனநாயகத்தின் காவலருமான நண்பர் குல்தீப் நய்யார் தனது 95வது வயதில் இன்று காலமானார். அவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் நீதிபதி வி.எம். தார்குன்டே (V.M.Tarkunde) மனித உரிமைகள் குறித்தான கூட்டம் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்திற்கு பங்கேற்க வந்தபோது தாக்கப்பட்டார். அந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வழக்கறிஞர்கள் எல்லாம் கண்டன அறிக்கையும், மயிலாப்பூர் மாங்கொல்லையில் கண்டனக் கூட்டங்களையும் நடத்தினோம். அவருடைய நண்பரான குல்தீப் நய்யார் இந்த நிகழ்வுகளைக் குறித்து டெல்லியிலிருந்து என்னை அழைத்து விசாரித்தார். 

இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டின் ஆசிரியராகவும் இருந்தார். அவசர நிலை காலத்தை எதிர்த்து வலுவான அமைப்பை உருவாக்க காரணமாகவும் இருந்தார். 
அவ்வப்போது இந்திய அரசியலில் நல்வினைகளுக்காக குரல் கொடுத்தவர். இந்திய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமனம் செய்யப்பட்டார். இவர் டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியாக இருந்த மறைந்த ராஜேந்தர் சச்சார் அவர்களின் உறவினரும் ஆவார். 

இவருடைய புத்தகங்கள் பல புகழ்பெற்றவை. அவசரநிலை காலத்தை குறித்து ‘The Judgment - Inside story of the emergency in India’ என்ற தலைப்பில் 1977ஆம் ஆண்டில் புத்தகத்தை வெளியிட்டார். கடந்த 2012ஆம் ஆண்டில் ‘Beyond the Lines’ என்ற பெயரில் தனது சுயசரிதையை வெளியிட்டார். இந்த புத்தகத்தில் சமகால அரசியல் நிகழ்வுகள் பல்வேறு தகவல்களை நாம் அறிந்து கொள்ள முடியும். 

அவர் மறைவு வேதனையடையச் செய்கிறது. அவரும், அவருடைய சுவடுகளும், தடங்களும் எதிர்கால சமூகத்திற்கு வழிகாட்டும். 

#பொது_வாழ்க்கை
#Public_life
#Kuldip_Nayar
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
23-08-2018

Veteran Journalist Kuldip Nayar seen in the picture (left) protesting against "Press Defamation Bill" along with late Journalist Khushwant Singh in 1988.




Wednesday, August 22, 2018

சென்னை379

திருநெல்வேலி புகைவண்டியில் முதல் முறையாக சென்னையில் எழும்பூரில் இறங்கியது 1959.மங்கலான நினைவுகள் கடற் கரை, மவுன்ட் ரோடு...
தாம்பரம் கிறித்துவ கல்லுரி,சைனா பஜார், பாரி முனை,மூர் மார்கெட் ,zoo......
நிரந்தரமாக புகுந்தது 1974....
வாழிய சென்னை!
வளர்க சென்னை...

#சென்னை379

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
22-08-2018


//தாகங்கொண்ட மீனொன்று// - ரூமி

என்னை
மிகவும் வசமிழக்கச்
செய்கிறாய்
நீ

உனது அருகின்மை
எனது காதலைப்
பொங்கிப் பெருகச் செய்கிறது.
எப்படியென்று கேட்காதே.

பிறகு நீ
எனதருகே வருகிறாய்.
'வேண்டாமே..'
என்கிறேன் நான்.
அதற்கு நீயோ
'வேண்டாமா..'
என வினவுகிறாய்.

ஏனோ இது
என்னைக் களிப்படையச் செய்கிறது.
ஏனென்று கேட்காதே.
   
 
//தாகங்கொண்ட மீனொன்று//
- ரூமி

*நிதிக்குழுவின் மூலம் தமிழகத்திற்கு வரும் அபாயம்.*



------------------------------------
இந்திய அரசின் நிதிக் குழுவின் தலைவர் என்.கே.சிங் தலைமையில் நிதிக்குழுவின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் புனேவில் நடந்துள்ளது. அதில் பொருளாதார நிபுணர்களுடன் மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. புனேவில் நடத்தவேண்டிய காரணம் என்னவென்றால் அரசு மற்றும் தனியார் கூட்டு நிறுவனங்களை மதிப்பீடு செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்ட கேல்கர் குழுவின் தலைவர் விஜய் கேல்கர் அங்கு தான் வசிக்கிறார். இந்த கூட்டத்தில் 7 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில் சில.

1. 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நிதிப் பகிர்வீடு செய்யவேண்டுமென்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை மறுதலிக்கும் வகையில் சமகால மக்கள் தொகையின்படி நிதிப்பகிர்வீடு என்று இந்த கூட்டத்தில் முடிவெடுத்துள்ளது தமிழகத்திற்கு மிகப்பெரும் பாதிப்பும், கேடும் ஏற்படும்.

2. பின்தங்கிய மாநிலங்களான பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் பிற்பட்ட மாநிலங்களாகும். அந்த மாநிலங்களுக்கு நிதியை அதிகம் வழங்க வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு,ஆந்திரா,தெலுங்கனா,கர்நாடகம் போன்ற தென் மாநிலங்கள் முன்னேறிய மாநிலம் என்றும் கருத்துகள் வைக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாற்றாந்தாய் போக்கான முறையாகும்.

நிதிக் கமிசன் அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்படாத ஒரு அமைப்பாகும். அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்ட திட்டக்குழு கலைக்கப்பட்டு நிடி ஆயோக் என்று மாற்றப்பட்டுள்ளது. அந்த குழுவே சூப்பர் கேபினெட்டாக மாநில அரசின் முதல்வர்களையும் நடத்திய விதம் கடுமையான விமர்சனங்களுக்கு உட்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்ட திட்டக்குழுவை எதிர்த்தே நாம் கடந்த காலத்தில் கடுமையான கண்டனங்களையும் விமர்சனங்களையும் வைத்தோம். அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்படாத அதிகாரமற்ற நிடி ஆயோக்கிற்கு யார் இந்த அதிகாரத்தை வழங்கியது. இந்த தான்தோன்றித்தனமான போக்கு சமஷ்டி அமைப்பிற்கும், ஜனநாயகத்திற்கும் ஊறு விளைவிக்கும்.

#நிடி_ஆயோக்
#திட்டக்குழு
#Planning_commission
#NITI_Aayog
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
22-08-2018

*மதராசப்பட்டினம் - மெட்ராஸ் - சென்னப்பட்டினம் - சென்னை-379ல்*



-------------------------------------
நூற்றாண்டுகளைக் கடந்த வானுயர்ந்த கட்டிடங்கள், தொன்மையையும், வரலாற்றுச் சிறப்பையும், கட்டிடக்கலையில் நுணுக்கங்களையும் பறைசாற்றும் வகையில் அமைந்த பல கட்டிடங்கள், பெரிய மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் என காலத்திற்கேற்றாற் போல தன்னை மெருகேற்றிக் கொண்ட சென்னை தான் தென்னிந்தியாவின் நுழைவு வாயில் எனப்படுகிறது. இந்த நகரத்தின் உருவாக்கம் நீண்ட வரலாற்று பின்னணி கொண்டது. கிழக்கிந்தியக் கம்பெனி தமிழகத்தில் நுழைந்தவுடன் பிரான்சிஸ் டே என்ற ஆங்கிலேய முகவர் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகப் பணிகளுக்காக தற்போது தமிழகத்தின் தலைமைச் செயலகம் இயங்கிக் கொண்டிருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள பகுதியை 22-08-1639 ஆம் நாளில் விலைக்கு வாங்கினார். அந்த அதிகாரப்பூர்வ நாளே சென்னை தினம் உருவான நாளாக கருதப்படுகிறது. 

அந்த இடத்தில் தான் கிழக்கிந்திய கம்பெனி செயின்ட் ஜார்ஜ் கோட்டையை எழுப்பி, குடியிருப்புகளை அமைத்து தங்களின் பணிகளை மேற்கொண்டனர். பின்னாளில் பலர் அதைச் சுற்றி குடியேறத் துவங்கினர். அப்போது அந்த பகுதியை மதராசப்பட்டணம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் மயிலாப்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், திருவான்மியூர், திருவொற்றியூர் என பல சிறிய கிராமங்களை உள்ளடக்கி நகரமாக உருவானது மதராசப்பட்டினம். வடசென்னை பகுதிகளை மதராசப்பட்டினம் என்றும், தென்சென்னை பகுதிகளை சென்னைப்பட்டினம் என்றும் அழைத்தனர். ஆங்கிலேயர் இரண்டையும் ஒன்றிணைத்து மதராஸ் என்று அழைத்தனர். 

இப்படியான வரலாற்றைக் கொண்ட மதராஸ் பல்வேறு போர்களில் சிக்கியது. முகலாயர்களால் 1702லும், மராட்டியர்களால் 1741லும், பிரெஞ்சுக்காரர்களால் 1746லும் தாக்குதலுக்குள்ளானது. பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து 1746ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆங்கிலேயர் வசமானது. மீண்டும் பிரெஞ்சுக்காரர்களின் கைகளுக்கு 1758ஆம் ஆண்டு போனது. இப்படியாக பலர் கைகளுக்கு சென்ற இந்த நகரத்தை சில மாதங்களில் மீண்டும் ஆங்கிலேயர் தங்கள் கொண்டுவந்து ஆட்சி நடத்தினர். இந்தியாவின் விடுதலைக்குப் பிறகும் மதராஸ் நகரமாகவே இயங்கியது. 
ஆங்கிலேயர்கள் இந்த பகுதியில் வர்த்தகத்தை துவக்க ஒரு முக்கிய காரணம் இருந்தது. இன்று சென்னையின் வடிகால்களாக இருக்கும் அடையாறு, கூவம் ஆகிய நதிகளில் ஒரு காலத்தில் தெளிவான நீரோட்டத்துடன் படகு போக்குவரத்தும் இருந்து வந்தது. சரக்கு பரிமாற்றமும் நடந்து வந்தது. அந்த காலத்தில் சென்னைக்கு துறைமுக வசதி இல்லாததால் நடுக்கடலில் கப்பல்களில் உள்ள சரக்கு பொருட்களை படகுகளுக்கு மாற்றப்பட்டு நகருக்குள் ஆறுகளின் வழியாக கொண்டு வந்தனர். இதனால் இது முக்கிய வியாபாரத் தலமாகவும் விளங்கியது. 
இருப்பினும் புயல் காலங்களில் பல்வேறு படகு விபத்துகள் ஏற்பட்டதால் 1881 ஆம் ஆண்டில் சென்னை துறைமுகம் அமைக்கப்பட்டது. சில ஆண்டுகளில் ஏற்பட்ட சூறாவளியால் துறைமுகம் சின்னாபின்னமானது. இருப்பினும் 1896ஆம் ஆண்டில் பல்வேறு மாற்றங்களுடன் சிறப்பாக கட்டமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது சென்னை துறைமுகம்.
காலப்போக்கில் ஆங்கிலேயர்கள் நகரின் உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தினர். தென்னிந்தியாவின் முதல் இரயில் முனையமாக 1856இல் ராயபுரம் அமைந்தது. பின்னர் சென்னை சென்டிரல், எழும்பூர், பூங்கா நகர் என முக்கிய இரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டது. மேலும் சென்னை நகரில் டிராம் வண்டிகள் முக்கிய பங்காற்றின. மாட்டு வண்டி, குதிரை வண்டிளை பயன்படுத்தி வந்த மக்களுக்கு 1895ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டிராம் வண்டிகள் மிகப் பெரிய வரப்பிரசாதமானது. சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை நகரின் தங்க சாலை, கடற்கரை சாலை, மவுண்ட் ரோடு, பாரிஸ் கார்னர் போன்ற பகுதிகளில் நூற்றுக்கணக்கில் இயங்கியது. 

சென்னைபட்டினம் விடுதலைக்குப் பின்னரும் மெட்ராஸ் ராஜதானியாக இருந்து வந்தது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, ஆந்திரப் பிரதேசம் சென்னையை உரிமை கோரியது. அப்போது பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் மெட்ராஸ் தமிழ்நாடு வசமானது. பின்னர் 1968ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவால் மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சென்னையை மெட்ராஸ் என்றே அழைக்கப்பட்டது. 
மெட்ராஸ் மாநகரத்தை சென்னை என்று 1997ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு தினமாகும். இந்த நாளை 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூறப்பட்டு வருகிறது. பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டிசோசா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம்.

இத்தகைய வரலாற்று நகர்வுகளோடு பல்வேறு இயற்கை பேரிடர்களையும் தாங்கிக் கொண்டு இன்றும் தனது கம்பீரத்தை இழக்காமல் வளர்ந்து வருகிறது. ஆனால் நாம் அந்த நகரத்தின் தூய்மையையும், பழமையையும் நாசம் செய்து வருகிறோம். அழகிய கடற்கரையை மாசு செய்கிறோம், இயற்கையின் பரிசான கூவம், அடையாறு ஆறுகளை வடிகால்களாக பயன்படுத்தி வருகிறோம். சதுப்பு நிலக்காடுகளை வீட்டு மனைகளாகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரைவார்த்து வருகிறோம். பாரம்பரியம் கொண்ட பல அழகான கட்டிடங்களையும் முறையாக பராமரிக்காமல் சிதிலமாக்கி வருகிறோம். மாறி வரும் நகரச் சூழலுக்கேற்றார் போல மக்களின் சுற்றுப்புறப் சூழலின் மீதான பார்வை சிறிதும் இல்லாமல் அறியாமை அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது. இன்றைக்கு இதுகுறித்தெல்லாம் ஆட்சியாளர்கள் கவலைப்படுவதும் இல்லை, கண்டு கொள்வதும் இல்லை. என்ன செய்ய தகுதியானவர்களைத் தான் நாம் அனுப்புவது இல்லையே. #தகுதியே தடை 
வந்தாரை வாழ வைக்கும் சென்னை உருவாகி 379வது ஆண்டுகள் ஆகிறது.

#சென்னை மாநகரம்
#மெட்ராஸ்
#மதராசப்பட்டினம்
#சென்னப்பட்டினம
#Madras
#Chennai
#Madrasapatanam
#Chennapatanam
#St_George_Fort
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
22-08-2018

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...