அவமானம், ரணங்கள் முன்னேற்றத்தின் அடிக்கற்கள்
-------------------------------
நம்மை அவமதித்தவர்கள், நம் உழைப்பையும், உதவியையும் பெற்று நன்றி பாராட்டாமல் உதாசீனம் செய்தவர்கள், நம்முடைய ஆளுமையை நமது திறனை மழுங்கடிக்க வேண்டுமென்று நம்மால் உயர்ந்தவர்கள் நினைக்கும் பொழுதும், இவர்களே நமக்கு திட்டமிட்டு தடங்கலாகவும், தடைகளாகவும், மறைமுகமாக பேடித்தனமாக, கோழைத்தனமாகவும் செய்வதும் உலக வாடிக்கையாகிவிட்டது. அதற்கு பழிவாங்கத் துடிப்பதை விட எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும், ரணங்களையும் அவமானத்தையும் தாங்கிக்கொண்டு வீழ்ந்த நாம் எழுந்து அவர்கள் முன் கம்பீரமாக உருவெடுத்து நம்மை அவமதித்தவர்களை நாம் அவமதிக்க வேண்டும்.
ஒரு சமயம், அபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராவதற்கு முன் அவரை அரசு அதிகாரி குரங்கின் முகம் என்று கடுமையாக பேசிவிட்டார். அவர் ஒரு உயர்ந்த அதிகாரி கூட. ஆனால் லிங்கன் அதிபரானவுடன் அந்த அதிகாரிக்கு உயர்ந்த நல்ல பொறுப்பை கொடுக்கும்போது, அந்த அதிகாரி நான் அவமானப்படுத்தப்பட்டேன் என்று லிங்கனிடம் கேட்டதெல்லாம் வரலாற்றுச் செய்தி. நாய் குலைப்பதால் யாருக்கு கெடுதல்? கேடு நினைப்பவன் வஞ்சத்தை அவனது மனதிற்குள் தானே இருக்கும். இவர்களின் இந்த தீய குணமே நம்மை பண்பட்ட மனிதனாக மாற்றும் என்றே வாழ்வியலில் நாம் எடுத்துக் கொள்வோம்.
நாம் நமது கடமையை செய்வோம், தனித்தன்மையை காப்போம். வளர்வோம். நம்முடைய சுவடுகளைப் பதிப்போம் என்ற மனநிலையோடு நாம் மாற்றிக் கொண்டு பீடுநடை போடுவது தான் நமக்கான பெருமையும், தனிவழியும் கூட. எனவே அவமானமும், துரோகமே நமது முன்னேற்றத்திற்கு அடிக்கற்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
#அவமானம்
#மனித_வாழ்வு
#துரோகங்கள்
#Humanity
#அபிரகாம்_லிங்கன்
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
07-08-2018
No comments:
Post a Comment