Friday, August 3, 2018

மேழிச் செல்வத்தைப் பொழியும்மண்மகளையும், கிராமியத்தையும் கொண்டாடுவோம்.



————————————————
கிராமத்து தொழுவங்களில் 2,3 ஜதைகள் உழவு மாடுகள் (ஒரு ஜதை என்றால் இரண்டு உழவு மாடுகள்), பால் கறக்கும் பசு,எருமைகள் 8, செனை மாடுகள் 2 என 15, 20  மாடுகள் கட்டியிருக்கும் தொழுவத்தில் இன்றைக்கும் 2, 4 மாடுகளே உள்ளது. இல்லைஇல்லையெனில் சில சமயங்களில் ஒற்றை மாடுகள் கூட கட்டப்பட்டுள்ள காட்சியை பார்க்கிறோம். கலப்பைகள், மாட்டு வண்டிகள் பயன் பாட்டில் இல்லை.

இதுதான் உத்தமர் காந்தி விரும்பிய கிராம ராஜ்ஜியமோ?
Is it real India?

தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், கார்ப்பரேட்டுகளால் நாட்புற மண்வாசனையை இழந்தோம். ஒரு பக்கம் மண்வாசனையை இழந்துவிட்டு பூர்விக வரலாறுகளை பேசி என்ன பயனோ?  

தற்சார்பு இயற்கை விவசாயமும், சுற்றுச்சூழலும் குறித்து சில ஆளுமைகள் தன்னலம் கருதாமல் களத்தில் நின்றாலும் சில சக்திகள் அவர்களை அழிக்கப் பார்க்கிறது. விவசாயமும், விவசாயத் தொழில்களும் என்றும் முடிவில்லாத சங்கிலித் தொடர்பான மண்சார்ந்த பணியாகும். விவசாயம்தான் எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். எந்நாளும் நிலங்களை விற்றுவிடாதீர்கள். மண்மகளை காப்போம். ஆடு, மாடு என விவசாயக் கால்நடைகளை பாதுகாப்போம். 

மேழிச் செல்வத்தைப் பொழியும்மண்மகளையும், கிராமியத்தையும் கொண்டாடுவோம்.  

#கிராமியம்
#மண்மகள்
#விவசாயம்
#Farmers
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
03-08-2018

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்