வேணு சீனிவாசன் சிலைக்கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்றும் அவர் முன் ஜாமின் பெற்றுள்ளதை பரவலாக கேலிப் பேசப்படுவதையும் விமர்சிக்கப்படுவதையும் பார்க்கின்றேன்.
நான் அறிந்தவரை அவர் நல்ல மனிதர். அந்தக் குற்றச்சாட்டு தவறானது என என்னால் உறுதியாக சொல்ல முடியும். பலக் கோவில்களுக்கு திருப்பணி செய்தவர். ஆன்மிகத்தையும் வைணவத்தையும் வளர்த்தவர்கள் . நான் கோவிலுக்கு அதிகம் செல்பவன் அல்ல. ஆழ்வார் பாசுரங்களை தீந்தமிழ் வாசிக்கின்றேன்.
அவர்களுடைய குடும்பம் நல்ல பாரம்பரியத்தை கொண்டது. பொதுச்சேவை செய்து வந்தவர்கள். செளந்தரம் அம்மாள் டி.வி.சுந்தரம் அய்யங்கார் மகள்.சுந்ததிர போராட்ட காலத்தில் இருந்து பொதுவாழ்வில் உள்ள குடும்பம் . காந்தியடிகளுக்கு நெருக்கமானவர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர். தன்னோடு சுதந்திர போராட்ட காலத்திலேயே களம் கண்ட ஈழவரை கணவர் டாக்டர் ராமச்சந்திரன் அவர்களை காதல் சாதி
மறுப்பு திருமணம் செய்துக் கொண்டவர். கேரளாவில் ஈழவர் என்றால் தலித்துகள் என பொருள். செளந்திரம்மாள் குடும்பத்தில் இதனை ஏற்கவில்லை. காந்தியடிகள் " பொறுமையாக இருக்கும் படி அறிவுறுத்தினார்" சுதந்திரம் பெற்ற பின்னர் திருமணம் செய்துக் கொண்டனர். பெரியாரின் சாதிமறுப்பு பிரச்சார காலக்கட்டத்திற்கு முன்பே இவர்கள் சாதிமறுப்பு திருமணம் செய்துக் கொண்டவர்கள். சர்வோதய இயக்க தலைவர் ஜெகநாதன் - கிருஷ்ணாம்பாள் ஆகியோருக்கு சாதிமறுப்பு திருமணம் செய்து வைத்தார் செளந்தரம் அம்மையார்.
அவர்கள் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தை நிறுவி பொது நல நோக்கத்துடன் நிர்வாகம் செய்தவர்கள்.
கல்வி நிறுவனங்கள் மற்றும் பலருடைய கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்து உதவி வருபவர்கள் . 1952 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். நாடளுமன்ற உறுப்பினர்.பெண்களின் திருமண வயது 18 ஆக உயர்த்தும் சட்ட முன் வடிவைக் கொண்டுவந்து அதை நிறைவேற்றினார்.
காந்தியின் தளபதி ஜே.குமரப்பா இவர்கள் வழியில் கல்லுப்பட்டியில்
காந்தியத்தைபோதிக்கும்ஆஸ்சிரமத்தை
நிறுவினர்
செளந்தரம் அம்மாள் அவர்கள் வழியில் வந்த வேணு சீனிவாசன் திருவரங்கத்தில் திருப்பணிகள் செய்தவர். சொந்த ஊரான திருக்குறுங்குடி( நெல்லை மாவட்டம் ) உட்பட தமிழகத்தியுள்ள பல திருக்கோவில்களுக்கு திருப்பணி செய்தவர் . வள்ளல் தன்மை கொண்டவர்.
தமிழ்நாட்டின் பல ஆறு, குளங்களை புனரமைப்பு செய்தவர். தொடந்து நீராதாரங்களை பெருக்கியவர்.டி.வி.எஸ் நிறுவனம் செய்யும் பணிகள் வெளியே விளம்பரம் செய்வதில்லை.
திருவரங்கம் கோவில் திருப்பணிக் குழுவில் இருப்பதால் அவர் மீதி பழி சுமத்தப்பட்டுள்ளது. கோவில் சிலை திருடி வாழ்வாதரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
தென்னகத்தின் தொழில்துறை முன்னேற்றத்தில் இவர்கள் பங்கு அதிகம். இவர்களது டி.வி.எஸ் போக்குவரத்து நிறுவனம் தென்மாவட்ட ங்களில் பெரிதும் சேவையாற்றியது. கடிகார முள் கூட தவறும் இவர்களின் பேருந்து சரியான நேரத்தில் நெல்லையில் கிளம்பி சரியான நேரத்தில் கோவில்பட்டி வந்தடையும். மதுரை ரயில் நிலைய எதிரில் இருக்கும் டி.வி.எஸ் அலுவலகம் உள்ளே சென்றால் அவ்வளவு சுத்தமாக பராமரிக்கப்பட்டு பழமை மாறாமல் பாரம்பரியம் காப்பாற்றப்பட்டு வருகின்றது.
அனிதா ரத்ணம் , நமது நாட்டியக் கலையை வெளிநாடுகளில் பரிமளிக்க செய்பவர். நமத மண்ணின் கலாச்சாரத்தை நாட்டியத்தின் மூலம் பறைசாற்றி வருபவர். இப்படியாக் வேணு சீனுவாசன் அவர்களின் குடும்பம் பாரம்பரியமாக இந்த மண்ணுக்கு தொண்டாற்றி வருபவர்கள். காமராசருக்கு பேருதவியாக இருந்தவர்கள் .
டிவிஎஸ் பேருந்து நிறுவனம் பெரிதும் சேவையாற்றியது. அந்நிறுவனத்தின் பணியாளர்களுக்கு நல்ல ஊதியமும் ஊக்கத்தொகையும் அவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்தவர்கள்
இத்தகைய நல்ல குடும்ப பின்னணி கொண்ட ஒருவர் மீது அபாண்ட பழி சுமத்தப்பட்டுள்ளது. நிச்சயம் நிரபராதிகளாக பேசப்படுவார் என்பதில் அய்யமில்லை.
சமூதாயத்தில் நன்மதிப்பு கொண்ட இப்படிப்பட்டவர்கள் மீது அபாண்ட பழிகளை சுமத்தினால் நல்லவர்கள் பொதுவாழ்வு பணிகளுக்கு இனிமேல் வர தயங்குவார்கள்.
#சிலைக்கடத்தல்விவகாரம்
#வேணுசீனுவாசன்
#திருப்பணிகள்
#KSRadhakrishnanpost
#KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
10-08-2018
No comments:
Post a Comment