——————————————
நட்டுப் புற நம்பிக்கைகள்.
———————————————
1.காவேரி கரையில்
...............................
ஆடிப்பதினெட்டில்,ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்று அழைக்கின்றனர். பொதுவாக இந்து மத விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டும், கிழமைகளையும் கொண்டே நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் 18வது நாள் என்று நாளினை கணக்கில் கொண்டு நடத்தப்படும் விழாஆகும். தென்மேற்கு பருவத்தில் பிறந்த கார்முகிலால், மகிழ்ச்சி அடையும் அளவுக்கு மழைத் தந்து, ஆற்றில் பெருக்கெடுத்து ஓடச் செய்து, காவேரியில் வழி நெடுக வணங்கி,மகிழ்ந்து ஆடிப்பதினெட்டை கொண்டாட வைத்த, கார்முகிலுக்கு, செலுத்தும் கோடான கோடி காணிக்கைகள் .
தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்(ஆடிப் )பெருக்கு எனக்கூறுவர்.
உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அருவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் வந்தது
ஆடிப் பட்டம் தேடி விதைத்தோம், இனி உழவருக்கும்,மக்களுக்கும், வாழ்வில் எல்லா செல்வங்களையும் பெற வேண்டும்.மண்மகளும், புதுப்புனலையும்
கொண்டவோம்.
2.அழகர் மலையில்:
................................
அழகர் மலையில் கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள 18 படிகளின் காவலனாய், சத்திய தெய்வமாய் அழைத்த குரலுக்கு ஓடி வந்து உதவி செய்யும் மக்களின் மனதில் குடிகொண்ட அழகரின் தளபதியான "பதினெட்டாம்படி கருப்பணசாமி " யின் சன்னதி ஆண்டுதோறும் பூட்டியே இருக்கும், அந்த கதவுக்கு தான் சந்தனம் சாத்தி நேர்த்தி கடன் செலுத்துவர்.
ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் அதாவது ஆடி மாதம் பெளர்ணமி அன்று மட்டும் (இன்று) பதினெட்டாம் படியின் கதவுகள் திறந்து ஒரிரு நிமிடங்கள் மட்டும் , பதினெட்டாம் படியின் தரிசனமும், அக்னி ஜூவாலையாக கருப்பனையும் தரிசிக்க முடியும்
இப்படி மண்மகள், தண்ணீர், விவசாயத்தையும் வணங்கி இயற்கையை
பூஜிக்கின்ற விழாவாக ஆடி 18 ல்
தமிழகத்தின் முழுதும் கொண்ட படுகிறது.
#ஆடி18
#ஆடிப்பெருக்கு
#பதினெட்டாம்பெருக்கு
#Adi18
#மண்மகள், #தண்ணீர், #விவசாயம்
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
03-08-2018
No comments:
Post a Comment