‘செமினார்’ (Seminar)– திராவிடனிசம்’ (Dravidianism)
சிறப்பிதழ்
-------------------------------------
1959 ஆம் ஆண்டிலிருந்து 60 ஆண்டுகாலமாகப் புதுடெல்லியிலிருந்து வெளியாகும் மாத இதழ் ‘செமினார்’. புகழ்பெற்ற அறிஞர்கள் ராஜ் மற்றும் ரொமேஷ் தாப்பர் ஆகியோரை நிறுவன ஆசிரியர்களாகக் கொண்டது. அறிவு ஜீவிகளாலும் அரசியல் ஆர்வலர்களாலும் விமர்சர்களாலும் விரும்பிப் படிக்கப்படும் இதழ் இது. தற்போது தேஜ்பீர் சிங்கை ஆசிரியராகக் கொண்டு வெளியாகி வருகிறது. நானும் கடந்த 35 ஆண்டுகளாக இதன் வாசக சந்தாதாரர்.
708 ஆவது இதழாக இம்மாத இதழ் கைக்குக் கிடைத்ததும் மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது. காரணம் தமிழகத்துத் திராவிட இயக்கங்களைக் குறித்து DRAVIDIANISM a symposium on the legacy of the Non-Brahmin movement in Tamil Nadu என்ற தலைப்பில் சிறப்பிதழாக மலர்ந்திருப்பதுதான்.
, ராஜன் குறை கிருஷ்ணன், ஏ.எஸ்.பன்னீர்செல்வம்,ஆனந்தி எனப் பல நண்பர்கள் திராவிடக் கொள்கைகளைப் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளை இந்த இதழில்
படைத்திருக்கின்றனர்.
திராவிட ஆர்வலர்களும் அறிவுஜீவுகளும் ஊன்றிப்படிக்கப் பல கூறுகளும் காரணிகளும் படிமானங்களும் இந்த இதழில் இருக்கின்றன.
இந்த 708 ஆவது இதழில் மட்டுமல்ல இதற்குமுன்னும் தமிழக அரசியலைப்பற்றியும் திராவிட இயக்கங்களைப் பற்றியும் சில சிறப்பிதழ்களை ‘செமினார்’ இதழ் கொண்டுவந்துள்ளது பாராட்டுக்குரியது. இதைப்படிக்குமாறு நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன்.
#seminar
#seminar_dravidianism
#செமினார்_திராவிடனிசம்_சிறப்பிதழ்
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-08-2018
No comments:
Post a Comment