Tuesday, August 7, 2018

கலைஞரின் கவிதாஞ்சலி.

கடற்கரையில் காற்று 
வாங்கியது போதுமண்ணா
எழுந்து வா எம் அண்ணா
வரமாட்டாய்;வரமாட்டாய்;
இயற்கையின் சதி எமக்குத் 
தெரியும் அண்ணா  நீ
இருக்குமிடந்தேடி யான் வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா.......
நான் வரும் போது கையோடு
கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா.
அண்ணா ஒரு புதிர்!என்று அண்ணாவின் மறைவிற்கு கலைஞரின் கவிதாஞ்சலி.
அடிக்கடி ரசித்து ரசித்துப் படித்த வரிகள்.
இன்று படிக்கும் போது மட்டும் கண்ணீர்.


No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...