இந்தியாவில் 42 செயற்கைக் கோள்கள் இயங்கி கொண்டிருக்கின்றன. இந்த செயற்கைக்கோள்கள் இயங்காமல் பழுதுபட்டால் ஏடிம், இணைய சேவைகள் எல்லாம் பயன்பாடின்றி போய்விடும். நவீனப் போக்குகளை அனுமதித்து விஞ்ஞான உலகில் ஏற்றுக் கொண்டோம்.
இது ஒருபக்கம் இருந்தாலும், மரபு ரீதியான தற்சார்பு விவசாயம், சில தொழில், வியாபார ரீதியான தற்சார்பு நடைமுறைகளை விட்டுவிடாமல் நாம் தொடரவேண்டும். சுற்றுச்சூழலில் கவனம் செலுத்தாத காரணத்தால் தான், காலந்தவறிய மழைகள், ஓரிரு மணித்துளிகளிலேயே வெள்ள அபாயங்கள் என்று கோரத் தாண்டவங்களை நாம் பார்க்க முடிகின்றது.
வாகனங்களால் வெளிப்படும் நச்சுக் காற்று நேரடியாக மேகங்களையும், வானத்தையும் தாக்கி ஓசோன் மண்டலம் பாதிக்கப்படுவதற்கான நிலையை உருவாக்கி வருகிறோம். காலப்போக்கில் இயற்கை எப்படியெல்லாம் மாறும் என்பதை அறியாமல் மானிடம் இன்றைக்கு இருக்கின்றது. பல அடுக்குமாடிக் கட்டிடங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்தல், மரங்களை வெட்டுதல், மணலையும், மலைகளையும் தகர்த்து சில கனிமங்களையும் சுரண்டி சொந்த லாபத்திற்காக சிலரின் சுயநலப்போக்கால் எதிர் காலத்தில் பெரும் பேரிடர்கள் மட்டுமல்ல. இயங்கும் இந்த 42 செயற்கை கோள்களுக்கும் ஆபத்து விளையும்.
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
21-08-2018
No comments:
Post a Comment