Monday, August 6, 2018

என்ன ஜென்மங்களோ?


என்ன ஜென்மங்களோ? இப்போது நரசிம்மராவ் பிரதமர். ஒரு சில மாதங்களுக்கு முன்னால் மன்மோகன் சிங் பிரதமர் என சொல்லித் திரியும் சில புரிதலில்லாத அமைச்சர் இருந்தால் நாடு உருப்பட்ட மாதிரி தான். கம்பராமாயணத்தை யார் இயற்றியது என்று தெரியாதவருக்கு கன்னித் தமிழ்நாட்டின் உச்ச பொறுப்பு. இப்படியான ஞானசூனியங்கள், பிரகஸ்பதிகளை வைத்து பொது வாழ்வும், அரசியலும். முட்டாள்களிடம் ஓரளவு புரியவைக்கும் நம்பிக்கையாவது இருக்கும். மூடர்களிடம் என்னத்த சொல்ல, என்னத்த புரியவைக்க. தகுதியான ஆட்களை தான் நாம் கரும்புச் சக்கையைப் போல பிழிந்து தொலையில் வீசிவிடுவோமே.

வெட்கங்கெட்ட, மானங்கெட்ட ஈனப் பிறவிகளை வாக்களித்து தேர்ந்தெடுத்தால் இதையும் பார்க்க வேண்டும். கொஞ்சமாவது வெட்கப்படாமல் தைரியமாக பொது வெளியில் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். மாற்றிப் பேசிக் கொள்ளலாம். மக்கள் முட்டாள்கள் தானே என்ற திமிரில் இருப்பவர்களுக்கு காலம் ஓடுகிறது. தகுதியே தடை என்ற நிலையில் இந்த இக்கோலங்களையும் பார்த்து தான் தீரவேண்டும். எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் அல்லவா? மூடன், முட்டாளும் இந்நாட்டு மக்கள் தானே. இதில் எப்படி நாம் குறை காணமுடியும். வாழ்க நமது ஜனநாயகம். #பொது_வாழ்வு #தகுதியே_தடை #அரசியல் #Public_Life #KSRPostings
#KSRadhakrishnan_Postings கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 06-08-2018

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...