வாழ்வே வேதனையில் வாழ்வது என்றால்
என் செய்ய....
அதுவும் சுகமான சுமைகள்,
வலிகளதான் என எடுத்துக்கொள்ள வேண்டியதுதான் ........
*******************************
//ஒரு துரோகத்தின் முன்னே..
ஒரு நிராகரிப்பின் முன்னே..
ஒரு பேரிழப்பின் முன்னே..செய்வதறியாது திகைத்து நின்றிருக்கிறேன்
இருந்தும்
நான் கண்ணீர் சிந்தியதில்லை
உயிர்வரை வேர்விட்டு பின் விலகிச்சென்றவர்களை..
தலைவருடிய படியே காயங்களில் கல்லெறிபவர்களை..
புன்னகைத்தவாறே வார்த்தைகளில் ஊசி ஏற்றுபவர்களை..
கனத்த மனதுடன் கடந்திருக்கிறேன்
இருந்தும்
நான் கண்ணீர் சிந்தியதில்லை
எத்தனையோ வலிகளுக்கு பின்பும்..
எத்தனையோ ஏமாற்றங்களுக்கு பின்பும்..
எத்தனையோ தோல்விகளுக்கு பின்பும்..
தலை தாழ்ந்து நின்றிருக்கிறேனே
தவிர
துளி கண்ணீர் சிந்தியதில்லை
ஆம்
நான் கண்ணீர் சிந்தியதில்லை
உண்மையில்
எனக்கு கண்ணீர் சிந்த சிறு அவகாசமும் இருந்ததில்லை..
என் உடைந்த கனவுகளின் மேல்..
என் சிதைந்த நம்பிக்கைகளின் மேல்..
என் பயனற்ற பிரார்த்தனைகளின் மேல்..
இதயம் அடைக்கும்
இவ்வேளையில்
துளி கண்ணீர் சிந்துதலால்
என் எல்லா வருத்தமும்
தீர்ந்திடக்கூடும்..
நிற்க
எனக்கு துன்பமே வரக்கூடாதென
ஒருபோதும்
நான் நினைக்கவில்லை
என் தேவையெல்லாம்
துன்பத்தின் முன்னே
துளி கண்ணீர் சிந்துதலுக்கான
சிறு அவகாசம்
மட்டுமே!!//
-ரிஸ்கா முக்தார்
No comments:
Post a Comment