Tuesday, August 7, 2018

கூடங்குளம் அணு உலைகள்-கலைஞர் . பூவுலகு சுந்தரராஜன் பதிவு.

2013 ஆம் ஆண்டு 

 ்கு எதிரான மாபெரும் போராட்டம் நடைபெற்ற சமயம், செப்டம்பர் மாதம் இடிந்தகரையில் நடைபெற்ற கூட்டத்தில் அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் கலந்துகொண்டன. அந்த கூட்டத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் சந்தித்து கூடங்குளம் பிரச்சனைகள் தொடர்பாக பேசுவது என்று முடிவெடுக்கப்பட்டது. பல கட்சிகளை சந்தித்த நாங்கள், தி.மு.க தலைவர் திரு. கருணாநிதி அவர்களை சந்திக்க அக்கட்சியின் வழ. ராதாகிருஷ்ணன் உதவி செய்தார். 

நவம்பர் மாதம் 9ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு, தி.மு.க தலைவர் அவர்களை சந்திக்க நேரம் கொடுக்கப்பட்டது. குறிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னரே நானும் எங்கள் அமைப்பைச் சேர்ந்த
வழ. சுந்தர்ராஜனும் அண்ணா அறிவாலயத்திற்கு சென்றோம். எங்களை வரவேற்ற ராதாகிருஷ்ணன், திராவிட இயக்கத்தை சேர்ந்த முக்கிய தளகர்த்தர் ஒருவர் தவறிவிட்டதாகவும், தலைவர் அங்கே அஞ்சலி செலுத்த சென்றிருப்பதாகவும், அதனால் அவர் வருகை கொஞ்சம் தாமதமாகலாம் என்று தெரிவித்தார். சரியாக 12 மணிக்கு கலைஞர் வந்துவிட்டதன் அறிகுறி அறிவாலயத்தில் தென்பட்டது. சில நிமிடங்களில் நாங்கள் இருவரும் அவருடைய அறைக்கு அழைத்துச்செல்லப்பட்டோம். அவருடைய அறைக்குள் நுழைந்தவுடன் அவர் சொன்னது, "மன்னிச்சுக்கோங்க" கொஞ்சம் நேரம் கடந்துவந்துவிட்டேன் என்றார். எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது, தன்னை சந்திக்க வருபவர்களை காத்திருக்க வைப்பதுதான் தலைவனின் இலக்கணம் என்று சில தலைவர்கள் வாழும் காலத்தில், இப்படிப்பட்ட தலைவர் இருக்கிறாரே என்று சிலிர்த்தது. மேலும் அவர், "எனக்கு முதுகுவலி இருப்பதால் கொஞ்சம் நேரம் அதிகமாக எண்ணெய் தடவி படுத்துவிட்டேன், எழுந்தவுடன் திராவிட இயக்க தளகர்த்தர் மறைவிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு வரும் வழியில்தான் நீங்கள் காத்துக்கொண்டிருப்பதாக சொன்னார்கள், உடனே வீட்டிற்கு செல்லாமல் இங்கே வந்தேன்" அதுதான் தாமதம்" என்றார். 

கூடங்குளம் அணு உலைகள் தொடர்பாக அனைத்து கேள்விகளையும் கேட்டு தெரிந்துகொண்டார். சின்ன சின்ன நுணுக்கமான விஷயங்களையும் கேட்டார், பொறுமையுடன் நாங்கள் கொடுத்த மனுவை வாங்கி முழுமையாக படித்து சில விஷயங்களை தெளிவுபடுத்திக்கொண்டார். மற்றவர்களுடன் கலந்தாலோசித்து மறுபடியும் பேசுவதாக தெரிவித்தார். 

அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு, இடிந்தகரை போராட்ட குழுவினர் இடிந்தகரையை விட்டு வெளியேறிவுடன், நானும் நண்பர் உதயகுமாரும் மற்ற தோழர்களுடன் சென்று மறுபடியும் தி.மு.க தலைவரை சந்தித்தோம் அதற்கு சில மாதங்கள் முன்னர்தான் புகுஷிமா பகுதிக்கு சென்றுவந்திருந்தேன். அது குறித்தும், பிரச்சனைகள் குறித்தும் முழுமையாக கேட்டுத்தெரிந்துகொண்டார். முழுவதையும் உள்வாங்கிக்கொண்டவர், மேற்கொண்டு என்ன செய்யலாம் என்றபோது, ஒன்றிரண்டு உலைகளுடன் இது நிற்கப்போவதில்லை மேலும் நான்கு உலைகளையும் இங்கேயே அமைக்கவிருக்கிறார்கள் என்றோம்.
"போராடும் மக்கள் கேட்பது சரிதானே, ஏன் எல்லா உலைகளையும் ஒரே இடத்தில அமைக்கவேண்டும் என்று கூறி, அங்கே இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் 
Tks. இளங்கோவனிடம் நாங்கள் கொடுத்த மனுவை கொடுத்து, இதுதொடர்பாக நம் கட்சி சார்பாக பிரதமர் மோடியை சந்தியுங்கள் என்றார். இன்றைக்கும் கலைஞருடனான முதல் சந்திப்பு என்னுடைய நினைவில் பசுமையாக உள்ளது. 

பல பத்தாண்டுகள் கடந்த பொதுவாழ்க்கை அனுபவம், ஐந்து முறை தமிழகத்தின் முதல்வர், தேசிய அரசியலை தீர்மானிக்கும் சக்தி என்று எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் சாதாரண மக்களிடம் அவர் காட்டிய அக்கறையும் பணிவும் உண்மையில் கிடைப்பதற்கறிய பொக்கிஷம்தான்.    

விளிம்புநிலை மக்களின் வலிகளை அவர் உணர்த்துள்ளதால்தான் அவரிடம் அப்படிப்பட்ட பணிவும், பிரச்சனைகளை உடனுக்குடன் கையாளும் ஆற்றலும்  முழுமையாக உள்ளது.       

வாழ்வாய் நீ !

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...