Thursday, August 2, 2018

ஊழின்படியே காரியங்கள் .....

பிறந்தோம் வளர்ந்தோம் இறுதியில் மண்ணுக்கு செல்கின்றோம். இடைப்பட்ட காலத்தில் சில ஆசைகள், சில நோக்கங்கள் என்பவை இந்த மண்ணில் நிரந்தரமாக வாழக் கூடிய மானிடத்தில் ஆர்ப்பரிக்கிறது. 
நேர்மையாக நினைத்து, போர் குணத்தோடு உழைத்தாலும் கிடைப்பது தான் கிடைக்கும். ஊழின்படியே காரியங்கள்  ம்மை மீறி நடக்கின்றன. நாம் நிரந்தமானவர்கள் அல்ல என்று நினைத்து, நடப்பது நடக்கட்டும் என்று அமைதிப் பாதையிலே சென்றால் நம் பின் துயர்களும், ரணங்களும், சுமைகளும் தொடராது. 
இன்னும் தகுதியே தடை, நிராயுதபாணியாக இருக்கும் போது நாம் என்ன செய்ய முடியும். மொத்தத்தில் அமைதியாக நேர்மையான பணிகளை செய்து கொண்டு ஆசாபாசங்கள் இல்லாமல் காலங்களை கழிப்பது இந்த பூமியில் இருக்கும் காலங்கள் மனதிற்கு நிம்மதி தருகிறது.

‘பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்,
யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம்,
நித்திரை போவது நியதி என்றாலும்,
யாத்திரை என்பது தொடர் 
கதையாகும்’
-கவிஞர் வைரமுத்து

#பொது_வாழ்வு
#தகுதியே_தடை
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
01-08-2018


No comments:

Post a Comment

BBC தமிழ் - சகோதரி ஆனந்தி passed away last night.ஆழ்ந்த இரங்கல்கள்.

  BBC தமிழ் - சகோதரி ஆனந்தி passed away last night.ஆழ்ந்த இரங்கல்கள். 1979 முதல் நட்பு, 1982 முதல் 1986 தினமும் இலங்கை தமிழர்கள் பற்றிய செய...