Sunday, August 12, 2018

#Kalaignar_Karunanidhi-கலைஞர்_ #நதிநீர்_இணைப்பு

கலைஞரின் பாசமும் பரிவும்
பாராட்டும் .....
————————————————-
இன்றைய (12/08/2018) நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஏட்டில் கலைஞரைப் பற்றிய முழுப்பக்க செய்தி பத்தி வந்துள்ளது. அதில் கங்கை - கிருஷ்ணா - பென்னாறு - காவிரி - வைகை - தாமிரபணி - குமரி முனையில் உள்ள நெய்யாறு வரை இணைக்க வேண்டுமென்ற என்னுடைய வழக்கில் 30 ஆண்டுகாலம் போராடினேன். அந்த வழக்கில் உரிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த 27/02/2012இல் வழங்கியது. அந்த சமயத்தில் நான் சங்கரன்கோவில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தும் பொறுப்பில் இருந்தேன்.செய்தித்தாட்களைப்பார்த்ததும் கலைஞர் அவர்கள் தொலைபேசியில் அழைத்து, எந்த பதவியிலும், பொறுப்பிலும் இல்லாமல் பெரியதொரு பணியை சாதித்துள்ளாயப்பா, மகிழ்ச்சி. பாராட்டுக்கள் என்றதை என்னால் மறக்க இயலாது. மேலும், தேர்தல் எப்படி நடக்கிறது. உன் உடம்பையும் பார்த்துக் கொள்ளப்பா என்று அக்கறையுடன் சொன்னது இன்றைக்கும் செவியில் கேட்கின்றன. இப்படியான தலைவர் கலைஞருடைய பாசமும் பரிவும் அரவணைப்பு தான் அனைவரையும் அவர் மேல் பாசப் பிடிப்போடு இருக்க செய்தது.

Today (12/08/2018) New Indian Express carried out a Column on Kalaignar Karunanidhi, whereas he appreciated my task on Interlinking of National rivers network issue.

#நியூ_இந்தியன்_எக்ஸ்பிரஸ்
#கலைஞர்_கருணாநிதி
#நதிநீர்_இணைப்பு
#சங்கரன்கோவில்_இடைத்தேர்தல்
#பொது_வாழ்க்கை
#தகுதியே_தடை


#Interlinking_of_rivers
#Public_life
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
12-08-2018

No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...