Thursday, August 15, 2024

இது ஒரு அழகான கலவையான கலைத்தன்மை உள்ள காட்சி ❤️

 இது ஒரு அழகான கலவையான கலைத்தன்மை உள்ள காட்சி ❤️ 


ஆரம்பகால தமிழ் திரையுலக சூப்பர்ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர் அருகே தமிழ் திரையுலக முன்னோடியும் தமிழ் சினிமாவின் முதல் வெள்ளிவிழா படமான பவளக்கொடி படத்தில் தியாகராஜ பாகவதர் உள்ளிட்ட பலரை அறிமுகம் செய்து வைத்த மூத்த இயக்குனர் கே.சுப்ரமணியம்,


 அவருக்கு அருகே பாகவதரின் நெருங்கிய நண்பராக விளங்கிய நகைச்சுவையால் மக்களை கவர்ந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 

மாயாவினோத குரல்வளம் உடைய எம்.எல்.வசந்தகுமாரி அவர்கள் கலைவாணரின் திரை ஜோடி மனைவி டி.ஏ.மதுரம் அவர்கள் மற்றும் 


நடிகையாக மிகச்சிறந்த பாடகியாக திகழ்ந்த என்.சி.வசந்தகோகிலம் அவர்கள் என்று இயல் இசை நாடக மூன்றுவகை சாதனையாளர்களும் ஒருங்கே இருக்கும் இந்த படத்தை சமீபத்தில் கண்டு மகிழ்ந்தேன் 


#oldmovies #tamilmovies 🙏

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...