Wednesday, September 4, 2024

மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமா மற்றும் சீரியல்களில் நடித்துக்

 மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமா மற்றும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சாந்தி வில்லியம்ஸ் சமீபத்தில் ஒரு பேட்டியில் மலையாள சினிமாவை பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.


அதில் அவர் பேசுகையில் எனக்கு மலையாள இண்டஸ்ட்ரியை பற்றி பேசவே விருப்பம் இல்லை. அங்கு நிறைய பாலிடிக்ஸ் இருக்கு. நீ பெரியவனா நாம் பெரியவனா என சில பாலிடிக்ஸ் அங்கு இருக்கு. அதுபோல அங்கு பெண்கள் சேஃபா போக முடியாது. 18 வயசு பொண்ணாக இருந்தாலும் சரி, 90 வயசு கிழவியாக இருந்தாலும் சரி ராத்திரி வந்து கதவை தட்டுறவங்க அங்க நிறைய இருக்காங்க. அதுதான் மட்டும் எனக்கு சுத்தமா பிடிக்கல. நான் தமிழ் சினிமாவில் இத்தனை வருஷம் இருக்கிறேன். ஒருநாள் கூட இங்கு யாரும் அப்படி நடந்துக்கல. அதற்காக தமிழ் மற்றும் ஆந்திரா சினிமா உலகை நான் கையெடுத்து கும்பிடுகிறேன். இங்கு உள்ளவர்கள் வயசு புரிஞ்சுக்கிறாங்க. அனுபவித்த மதிக்கிறாங்க. ஆனாலும் அதையும் மீறி சில இடங்களில் தப்பு நடக்குன்னா அதை நாம சொல்ல முடியாது. அது அவங்க அவங்க விருப்பத்தை பொறுத்து இருக்கு. ஒரு பொண்ணு கிராமப்புறத்தில் இருந்து தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் பல கஷ்டங்களையும் துன்பங்களையும் தாண்டி சினிமா உலகத்தில் வருகிறார்கள். ஆனால் அதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் சிலர் தவறாக அவர்களை அட்ஜஸ்மெண்டுக்கு கூப்பிடுராங்க. அதுபோல சிலர் அட்ஜஸ்மெண்டுக்கு ஒருதங்க கூப்டுறாங்கன்னா அதை அந்த இடத்திலேயே பேசி முடிச்சு இருக்க வேண்டும். அதை பற்றி சில வருடங்கள் கழித்து பேசுவதால் ஒரு ப்ரோஜனமும் இல்ல. பல வருடம் கழித்து அந்த ஆர்ட்டிஸ்ட் இந்த இண்டஸ்ட்ரியில் இல்லாமல் போய்விடுகிறார்கள். அதுபோல ஒரு சிலர் பல வருடங்கள் கழித்து அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை பற்றி அவர்களுடைய பப்ளிசிட்டிக்காக கூட பேசுகிறார்கள். சில டைரைக்டர் சரியில்ல, அவர் எட்டி மிதிப்பாரு துப்பாரு என்கிறார்கள். ஆனால் அவர் உண்மையில் அப்படி பண்ணுனாரான்னு தெரியுமா? இப்பதான் கம்ப்யூட்டரில் போட்டு எல்லாத்தையும் மாத்துறாங்களே அது உண்மையா? பொய்யா? அதைப்பற்றி தெரியாமல் நாமும் எதுவும் பேசக்கூடாது. எனக்கு அட்ஜஸ்டமென்ட் பிரச்சனை இல்லை என்பதற்காக சினிமா உலகில் அப்படி பிரச்சனை இல்லை என்று என்னால் சொல்லவும் முடியாது. என்னை பற்றியும் என்னுடைய குடும்பத்தை பற்றியும் சினிமா உலகில் பலருக்கும் தெரிந்திருக்கும் ஆனால் எந்த பின்புலமும் இல்லாமல் வரும் ஒரு சில நடிகைகள் பல பிரச்சனைகளை அனுபவிக்க தான் செய்கிறார்கள், என்று அந்த பேட்டியில் சாந்தி வில்லியம்ஸ் பேசியிருக்கிறார்.
facebook.com/share/Ln7ttG9L நன்றி: ஒன்இந்தியா தமிழ்

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...