Thursday, April 2, 2026
தமிழ்நாட்டில் 1969 களில் தொடங்கி நடந்த விவசாயிகளின் தீவிரமான போராட்டம் இன்று வரை அதன் அதிர்வுகளையும் தொடர்ச்சிகளையும் விடுபடல்களையும் சுமந்து கொண்டு தான் நிற்கிறது.
#சி_நாராயணசாமிநாயுடு #தமிழகவிவசாயபோராட்டம்
———————————————————
தமிழ்நாட்டில் 1969 களில் தொடங்கி நடந்த விவசாயிகளின் தீவிரமான போராட்டம் இன்று வரை அதன் அதிர்வுகளையும் தொடர்ச்சிகளையும் விடுபடல்களையும் சுமந்து கொண்டு தான் நிற்கிறது. அந்த விவசாயப் போராட்டத்தின் தானைத் தலைவன் யாருக்கும் அஞ்சாத எதற்கும் தலைவணங்காத எந்த அரசியல்வாதியின் வாசலில் அமர்ந்து தன்னலன் பேணாத விவசாய குடிமக்களின் ஒரே கதாநாயகன் விவசாயிகளின் கண்ணீரை அறிந்தவர்! அவர் யார் என இந்தியா முழுக்கப் பல்வேறு நிபுணர்கள் கேட்டார்கள்! அன்றைய காலத்தில் பச்சை நிறத் துண்டுகளை அணிந்து தமிழ்நாடு முழுக்க விவசாயிகள் அவரது தலைமையில் தாங்கள் சார்ந்த கட்சிகளின் பேதம் அற்றும் ஒன்று கூடினார்கள். பல்வேறு இடங்களில் கிளர்ச்சி நடந்தது. எத்தனையோ மேடைகள்! பொதுக்கூட்டங்கள்! மாபெரும் அரசாங்கங்கள்! காவல் நிலையங்கள்! நீதிமன்றங்கள் யாவும் ஸதம்பித்து போகும் அளவிற்கு விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீவிரமாக எடுத்துச் சென்ற மதிப்பிற்குரிய மக்கள் தலைவர் சி.நாராயணசாமி நாயுடு அவர்களை நினைவு கூறும் வகையில் இந்த நூலை எழுதத் தொடங்கினேன்.!
அப்படியான விவசாயிகள் கிளர்ச்சி நடந்து கொண்டிருந்த காலத்தில் இந்திரா காந்தி கலைஞர் எம்ஜி ஆர் போன்றவர்கள் நாராயணசாமி நாயுடுவை தங்களுடன் ஆதரவாக இருக்க அழைத்தார்கள் ஆனால் அவர் யாருக்கும் செவி சாய்க்காமல் உண்மையில்நீங்கள் விவசாயிகளின் பிரச்சினைகளை இன்று வரை தீர வில்லை என்று சொன்னதோடு ஏறக்குறைய 13 க்கும் மேலான விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடினார் அதன் வழியே விவசாய மக்களை ஒன்றிணைத்தார்.
என் மீது அன்பையும் பாசத்தையும் வைத்தவர் திரு நாராயணசாமி அவர்கள். 20 ஆண்டுகாலம் நான் அவருடன் பயணித்தவன். அந்தப் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். அவரோடு நானும் இன்னும் பலரும் கைது செய்யப்பட்டுச் சிறையிலும் அடைக்கப்பட்டடோம். அந்த நேரத்தில் கி ரா அவர்களும் என்னுடன் இப் போராட்டத்தில் இணைந்து பாளையங்கோட்டை சிறையில் சிறைப்பட்டார்.
போராடிய விவசாயிகள் 57 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அவர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு மறைந்தார்கள்.
மதிப்பிற்குரிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சோ அழகிரிசாமி அவர்களுக்குப் சட்டப்பேரவை தேர்தல் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் பிரச்சாரம் செய்ய நாராயணசாமி அவர்கள் 1984 பொதுத் தேர்தல் நேரத்தில் வந்த போது கோவில்பட்டி விருந்தினர் மாளிகையில் இரண்டாவது சூட்டில் அன்று இரவு பத்தரை மணி அளவில் மாரடைப்பால் காலமான போது நான் உட்பட பலரும் உடன் இருந்தோம்..
இப்படியாக அவருடன்பயணித்த நினைவுகள் குறித்தும் விவசாய சங்கத்தின் உண்மையான போராட்ட நிலைகள் குறித்தும் மிகைப்படாமல் மிக நேர்மையாக நடந்தது நடந்தபடி உள்ளபடி எழுதி இருப்பதுடன் அல்லாமல் அக்காலத்தில் அவருடன் இந்தியத் தமிழகத்தலைவர்கள் பலரும் அவரைச் சந்தித்த நிகழ்வுகள் போராட்ட காலங்களில் நிகழ்ந்த வன்முறைகள் மற்றும் விவசாயிகளின் சத்தியாவேசம் யாவற்றையும் தொகுத்து கிட்டத்தட்ட 800 பக்கத்திற்கு நான் எழுதிய நூல் தயாராகி விட்டது! அக்காலத்தில் . அவருக்குப் பக்கபலமாக இருந்தவர்கள் சொல்லேர் உழவன் செல்லமுத்து வேட்டவலம் மணிகண்டன் போன்ற பலரும் இருந்தார்கள். அவை அனைத்தையும் எல்லாவற்றையும் சம்பவங்களாக விரிவான முறையில் உள்ளடக்கிய இந்த நூல் வெளிவர இருக்கிறது.! இந் நூலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் மற்றும்
மத்திய நிதியமைச்சர் மதிப்பிற்குரிய நிர்மலா சீதாராமன் அவற்றுக்கிடையே மேற்சொன்ன செல்லமுத்து அவர்களின் அணிந்துரைகளோடு இந்த நூல் வெளிவர இருக்கிறது. கட்சி சார்ந்த பலரும் அந்த காலத்தில் அவருக்கு என்ன எதிர்வினை ஆற்றினார்கள் என்பதையும் இந்த நூலின் வழியாக ஒருவர் புரிந்து கொள்ள முடியும். உண்மையில் அவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு விவசாயப் பெருமக்களை ஒன்றிணைத்தார். அப்படி உண்மையான அவரின் தியாக வரலாறு நடுநிலையோடு இந்த நூலில் அவ்வக் காலங்களில் நிகழ்ந்த விறுவிறுப்பான சம்பவங்களோடு எழுதப்பட்டிருக்கிறது. திரு நாராயணசாமி அவர்களின் நூறாண்டு இறுதியில் கோவையில் வைத்து நடக்கும் விழாவில் இந்நூல் வெளியிடப்பட இருக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை விவசாயிகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அமைப்புகளுக்கும் விவசாய சங்க முன்னோடிகளுக்கும் இந்த வரலாற்று நூல் ஒரு முக்கியமான ஆவணமாக இருக்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
#தமிழகவிவசாயபோராட்டம்
#சி_நாராயணசாமிநாயுடு
#taminadufarmers
#C_Narayansamynaidu
#tamilnadupolitics
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
Subscribe to:
Post Comments (Atom)
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment